This entry is part 5 of 10 in the series 14 ஜுலை 2024

சசிகலா விஸ்வநாதன்

தரையில்விழுந்தவளை 

தாங்கியது பல கரங்கள்.

கரங்கள் ஒவ்வொன்றும் சொன்னது

ஒரு செய்தி.

நாளை  அடுக்களை வேலை, எனக்கா?

அலுப்புடன்!

மருத்துவர் என்ன செலவு  சொல்கிறாரோ?

அச்சம்!

என்றைக்கு சொல் பேச்சை கேட்டாள், இவள்?

ஆயாசம்!

பேசாமல் படு;

இரண்டு நாள்கள்!கனிவு!

என் கரம் பற்றியது;

எந்தக் கரத்தை?

சசிகலா விஸ்வநாதன்

Series Navigationசிந்தனைப்பூக்கள் பத்மநாதன் !விருக்ஷம்