வியாபாரி

This entry is part 21 of 45 in the series 9 அக்டோபர் 2011

மிக உன்னதமான
ஒன்றைப் போன்ற
பாவனைகளுடன்
எழுதப்படுகின்றன.
ஒவ்வொரு வார்த்தைகளும்
மிக எளிமையான
ஒன்றைப் பற்றி.

புரிந்து கொள்ளவும்
உணர்ந்து கொள்ளவும்
அயற்சி ஏற்படுத்தும்
ஒவ்வொரு நிமிடங்களும்’
அதன் மதிப்பை
அதிகப்படுத்துகின்றன.

அயர வைப்பதுபோல்
தோன்றினாலும்
மலையிலிருந்து ஒரு கல்
மடுவிலிருந்து கொஞ்சம் சேறு
பனியிலிருந்து சிறு பாறை
காட்டிலிருந்து ஒரு சுள்ளி என
பொறுக்கிச் சேர்க்கும் கலவை
பல் நீட்டிக் கொண்டிருக்கிறது.

சரளமற்ற ஒன்றை
சர்வதேசத்தரம் என்ற
சங்கப்பலகை போன்றதான
மிதக்கும் பீடத்தில் சுமப்பவர்கள்
சாதாரணரர்களைக் கேட்கிறார்கள்
சகலமும் தெரியுமா உனக்கு..

வாழ்வியல் இலக்கியம் படைத்தவனும்
மதிப்பீடுகளால் தரவிறக்கம்
செய்யப்படுகிறான்..
எத்தனை இலக்கியம்
தெரியும் உனக்கு என
இலக்கிய வியாபாரிகளால் ..

Series Navigationதிறவுக்கோல்ஷாம்பூ
author

தேனம்மை லெக்ஷ்மணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *