சசிகலா விஸ்வநாதன்
அடைக்கலம் என்று வந்தோர் அனைவரும்
அவனை அடைந்து
அவலம் நீத்தார்.
அவர் தகுதி நோக்கான்;
அன்பினால் தன் தகுதி ஒன்றே தேறுவான்
படகோட்டும் குகனும்,
சுக்ரீவ ராசனும்,
அசுர விபீடணும்,
ஒன்றே;அந்தப்
பரமார்த்த பரபிரும்மத்திற்கு.
சிரக்கம்பம் வைத்து
இறைஞ்சிய பாஞ்சாலியும்,
ஒன்றுமே கேளாத
வறியவன் குசேலனும்
கண்ணன் கண்ணுக்கு ஒன்றே நிகர்.
பக்த அம்பரீசனும்,
பிரஹலாத சிறுவனும்,
உத்தவனும், விதுரனும்,
வீட்டுமனும்,அவன் கழலே நிழல் என்ற கொண்டு
வென்றார் பரமபதம்.