தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

16 பெப்ருவரி 2020

சிற்சில

ஷம்மி முத்துவேல்

Spread the love


சிற்சில சொல்லாடல்கள்

பிரித்து அறியப்படாமலே
 வாதங்கள் என
மேல்போர்வை கொண்டு
ஆழங்களில் சிக்கித்தவிக்கின்றன ..
மீட்சி என்னும் சொல்லறியா அவை
தனக்குள் முடங்கி
 “தான் ” விடுத்து..
தர்க்கத்தில்
கலந்து பிணைந்து  பின்னர்
தானாய் கரைந்தும் விடுகின்றன
அவைகளுள் சிலவோ
நீரினடியில் வேர் பிடித்து
தண்டின் வழி உண்டு
எங்காவது  மலர
சேற்றின் அடியில் இன்னும்
சிக்கி மூச்சடக்கி கிடக்கின்றன
அந்த பள்ளங்களில் நீர் வற்றும் வரை …
ஷம்மி முத்துவேல்
Series NavigationStrangers on a Carகாக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன் – சிறுகதை

Leave a Comment

Archives