அழுக்கு வேஷ்டி சட்டையோடு,
அப்பா
அந்த பழைய சைக்கிளில்தான்
நாற்பது வருடங்களில்
பயணித்த வாழ்க்கை.
இரண்டு பெண்களையும்
இரண்டு ஆண்களையும்
படிக்க வைத்து,
கல்யாணம் செய்து வைத்த
சம்சார ரகசியம்
அவருக்குதான் தெரியும்.
நீண்ட கூந்தலோடு
இளமையில் வந்த
அம்மா
அறுபதில் ஒரு கை கூந்தலோடு
அள்ளி முடிக்கின்றாள்
அர்ச்சுனன் தவம்போல
அவள் வாழ்க்கை.
எந்த
குற்றச்சாட்டுகளும்
அப்பாவின் மேல்
சுமத்தாத
தரும பத்தினி.
அப்பாவின்
பண்ணிரெண்டாம் நாள்
காரியத்தில்
சுவரோரம் சரிந்து நின்ற
அப்பாவின் சைக்கிளைப்பிடித்து
ஓ! வென அழுதாள்.
-ஜெயானந்தன்.
- கோபம்
- நேசம்
- மெஹரூன்
- ஓவியமோ நீ?
- மழை புராணம் – 6 மழை நேரம்
- கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது
- அப்பாவின் சைக்கிள்
- சர்ப வாடையிலொரு சந்தர்ப்ப விருந்து
- 2024 ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு
- கதைப்போமா நண்பர்கள் குழுமம் சிறுகதை கலந்துரையாடல் – பெருமாள் முருகன் எழுதிய “சந்தனச் சோப்பு”