புரட்டாசிக் காட்சிகள்

2
0 minutes, 0 seconds Read
This entry is part 9 of 44 in the series 16 அக்டோபர் 2011

புலால் தவிர்த்துச்
“சைவ”மாகிப் போன
வைஷ்ணவர்களின்
உதட்டிலும் நெற்றியிலும்
விதவிதமான நாமங்கள்.

வெங்கட் ராமா கோவிந்தா
எனக் கூவிவரும்
பக்தர்களுக்குப் பிடியரிசிபோட
வாங்கி வைத்திருக்கிறாள் அம்மா
ரேஷன் கடையிலிருந்து.

பக்தர்கள் வரிசைக்காக
மூங்கில்கொண்டு கட்டியிருக்கிறார்கள்
பெருமாள் கோவிலில்
தூணையும் அதில் நிற்கும்
அனுமாரையும்.

அடுத்துக் கட்டியிருந்த பசுமாட்டுக்கு
அகத்திக்கீரை வாங்கிக் கொடுக்கச்சொல்லி
வற்புறுத்திகொண்டிருந்தான் வியாபாரி
மாடு அவனுடையதென்று சொல்லாமல்

_ ரமணி

Series Navigationஎஸ்.ரா. தலைமியில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறுகதைப் பயிலரங்குஇதுவும் அதுவும் உதுவும்
author

ரமணி

Similar Posts

2 Comments

  1. Avatar
    காவ்யா says:

    பக்தி பகல்வேசமாகும் போது பிறக்கும் உணர்வுகளே இக்கவிதை. நல்லாருக்கு.

    //உதட்டிலும் நெற்றியிலும்
    விதவிதமான நாமங்கள்.//

    ஆனால் அஃதென்ன உதட்டில் நாமம்?

    கைகள், நெற்றி, தோல்கள், மார்பு என்றுதானா நாமம் போட்ட்டுக்கொள்வார்கள்?

    உதட்டில் ?

    Maybe, I don’t know. Clarification please ?

  2. Avatar
    ramani says:

    பாராட்டுக்கு நன்றி. இறைவனின் விதவிதமான திரு நாமங்களை உதடுகள் உச்சரிப்பதைத்தான் அங்கு சொல்லியிருக்கிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *