தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

26 ஜனவரி 2020

நேர்மையின் காத்திருப்பு

ஹேமா(சுவிஸ்)

Spread the love

மூட்டைப்பூச்சியின்
இருப்பிடமென
ஒதுக்கப்பட்டிருந்தாலும்
கண்களுக்குள்
அலார மிரட்டலோடு
பழைய கதிரையொன்று.

சுருங்கிய முக ரேகைக்குள்
நேர்மை நிரம்பிய புன்னகை
அனுபவங்கள் அழுத்திய ஆட்சி
அந்தரத்து ஆரவாரமாய்
தாங்கிய நினைவுகள்.

நேற்றைய முடிவுகளே
நாளைய தீர்மானமாய்
வைக்கோல் நுழைந்து
உறிஞ்சும் புழுவென
வழியும் எச்சில் நேர்மை
வேண்டாம் வேண்டாம்.

நேர்மை பற்றி அறியும்
சுவர்களும் யன்னல் சீலைகளின்
தையல் நுனிகளும்கூட இங்கு.
கட்டிய வேட்டிக்குள்
சீழ்பிடித்த மனிதரும்
நுழைவார் இங்கே.

கைகாட்டும்வரை
என்னை…
அகற்றாதிருக்கட்டும்
மூட்டைப்பூச்சிகளோடு
சாட்சியாய் இங்கு நான்!!!

ஹேமா(சுவிஸ்)

Series Navigationராசிப் பிரசவங்கள்விலகா நினைவு

Leave a Comment

Archives