புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2012 .

author
0 minutes, 11 seconds Read
This entry is part 25 of 53 in the series 6 நவம்பர் 2011

 

புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2012 .
கடந்த 13 வருடங்களாக புலம்பெயர்ந்த தமிழ் குழந்தைகளுக்குத் தமிழ் பயிற்றுவித்து வரும் கலிஃபோர்னியா தமிழ்க் கழகம், மற்ற புலம் பெயர்ந்த தமிழ்பள்ளிகளுடன் இணைந்து புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2012 என்ற மாநாட்டை ஜூன் 8, 9, 10 – 2012ல் சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் உள்ள Santa clara convension center -ல்  நடத்த இருக்கின்றது. சவால்கள், நோக்குகள், சாத்தியங்கள் என்ற கருப் பொருளின் பின்னணியில் இம்மாநாடு நடத்தப்படும்.
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் அறிஞ்சர்களும், பள்ளி மாணவர்களும் கலந்துக் கொள்ள உள்ளனர்.  
இம்மாநாட்டின் ஆய்வரங்கக் குழு இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி புலம்பெயர்ந்த சூழல்களில் தமிழ்ப் பயிற்றுவிப்பதற்கான ஆய்வுக்கட்டுரைகளை வரவேற்கின்றது. உங்கள் ஆய்வுக் கட்டுரைகள் கீழ்கண்ட 4 தலைப்புகளில் ஏதாவதொன்றினைச் சார்ந்து இருத்தல் வேண்டும்.
தமிழ் கல்விக்கான கருவிகள், உத்திகள், தொழில் நுட்பங்கள்
Tools, techniques and technology in Tamil education
பயன்மிக்க பாடத் தொகுப்புகளும், திட்டங்களும்
Effective syllabus and curriculum
தமிழ்க் கல்வியில் கலை, சமூகம், கலாச்சாரத் தாக்கங்கள்
Art, social and cultural influences in Tamil education
தமிழ் கல்விக்கான வலையமைப்பு உருவாக்கம்
Building a world Tamil education network

ஆய்வுக் கட்டுரையின் ஆய்வுச் சுருக்கங்களை நவம்பர் , 2011க்கு முன்னதாக இங்கு சமர்ப்பிக்க வேண்டுகின்றோம். இந்த ஆய்வுக் கட்டுரைக்கான விதிமுறைகளை கீழ் கண்ட இணைய தளத்தின் www.tamilhl.org மூலம் தரவிறக்கிக் கொள்ளலாம்.
இம்மாநாட்டில் நடைபெற இருக்கும் கலை நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளவும்,பார்வையாளர்களாய் பங்கெடுக்கவும் , தன்னார்வ தொண்டர்களாய் செயல்பட விரும்புபவர்களும் , விளம்பரதாரர்கள் (sponsors)மற்றும் கலந்துகொள்பவர் அனைவரையும் இம்மாநாடு இனிதே வரவேற்கிறது. அனைவரும் கலந்துக் கொண்டு இம்மாநாட்டை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிரோம்.
-கலிபோர்னியா தமிழ் கழகம் (CTA).

Series Navigationதமிழ் ஸ்டுடியோவின் மூன்றாவது ஊர் சுற்றலாம் வாங்க.இதம் தரும் இனிய வங்கக்கதைகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *