தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

28 ஜூன் 2020

மூளையும் நாவும்

தேனம்மை லெக்ஷ்மணன்

Spread the love

வார்த்தைகளைக் கோர்த்துச்
சித்திரங்கள் வரைவது
பிடித்தமானது அவளுக்கு.

வரையும்போதே வண்ணங்கள்
சிதறி விழுகின்றன
மண்ணாய் அங்குமிங்கும்.

மூளை மூடாமல் திறந்து கிடக்கிறது
மண்டையோட்டுக்கான
வண்ணம் போதாமல்.

கார்டெக்ஸும் மெடுல்லாக்களும்
பற்களாக மாறி துண்டாக்குகின்றன்
பேசத்தெரியாத நாக்கை.

வரைந்து முடித்தபின்
மூளையும் நாவும் வெளியே கிடக்கின்றன
வாழ்வதன் தேவையை வலியுறுத்தி.

Series Navigationஅணையும் விளக்குகுளம்

Leave a Comment

Archives