தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

28 ஜூன் 2020

கவிஞர் குட்டி ரேவதியின் ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் நூல் வெளியீட்டு விழா

Spread the love

கவிஞர் குட்டி ரேவதியின் ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் நூல் வெளியீட்டு விழா

நாள்: 06-01-2012, வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 5:30 மணிக்கு.
இடம்: ஜீவன ஜோதி அரங்கம், கன்னிமாரா நூலகம் எதிரில், எழும்பூர்.

 

சிறப்பு அழைப்பாளர்கள்:

அழகிய பெரியவன்
பாலை நிலவன்
யாழன் ஆதி
தமயந்தி
அஜயன் பாலா
நர்மதா
ப்ரவீண்
&
குட்டி ரேவதி

எந்த அதிகாரத்தோடும் சமரசம் கொள்ளாமல் இயங்கும் பெண் பாலியல் மொழியைக் கொண்டாடுகிறது, தமிழ் ஸ்டூடியோ!

 

இந்த இயக்கத்துடன் வாசகர்களே உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்!

கடந்த பத்தாண்டு நவீன தமிழ் இலக்கியத்தைப் புரட்டிப் போட்ட பெண்கவிஞர்களின் மொழியை அலசும் தொகுப்பு

“ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்த எழுத்துகளை முன்னிறுத்தும் குரல்”

நவீன இலக்கியத்தின் தவிர்க்கமுடியாத அரசியல் வடிவமான பெண் கவிஞர்களை ஒன்று திரட்டிய தொகுப்பு

உடலரசியலை ஆணித்தரமாய்ப் படைத்த எழுத்தை மொழியை யும் முன்னிறுத்தும்
“ஆண்குறி மையப் புனைவைச் சிதைத்தப் பிரதிகள்”

இலக்கியத்தின் ஆணாதிக்கக்குரலுக்கு எதிரான குரலே பெண்கவிதையின் உடல் மொழி!

பெண்ணின் பாலியல் மொழி, உக்கிரமானதோர் அரசியல் வடிவம் பெற்ற பத்தாண்டுகளின் நிறைவைக் கொண்டாடும் நூல்!

கவிஞர் குட்டி ரேவதி தமிழ் ஸ்டுடியோவில் எழுதி வந்த கட்டுரைத்தொடர் விரைவில் புத்தகமாக வெளிவர உள்ளது. நான்தான் பதிப்பகம் அஜயன் பாலா புத்தகத்தை பதிப்பிக்கிறார்.

 

(அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது. அனைவரும் விழாவிற்கு வந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Series NavigationLearn Hindu Vedic Astrologyபஞ்சதந்திரம் தொடர் 25 முட்டாளுக்குச் செய்த உபதேசம்

6 Comments for “கவிஞர் குட்டி ரேவதியின் ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் நூல் வெளியீட்டு விழா”

 • யூசுப் ராவுத்தர் ரஜித் says:

  மன்னிக்கவும் தலைப்பே புரியவில்லை

 • kalai says:

  அடப் பாவிகளா? ரேவதி பெண் இல்லையா? அவருக்கு ஏது ஆண்குறி? அவருடைய ஆண்குறிமையத்தை ஏன் சிதைக்க வேணும்? வலிக்காதா? பாவம் இல்லையா? தமிழை அர்த்தம் புரிந்து எழுதத் தெரியாதவர்கள் எல்லாம் மையத்தை சிதைத்து கவிதைகள் எழுதத் தொடங்கிவிடுகிறார்கள். அய்யகோ!

  • ராசு says:

   நல்ல கேள்வி நண்பரே, அனேகமாக இந்த தலைப்பை வாசிப்பவர்கள் அனைவருக்கும் இதே சந்தேகம்தான் எழும்.

 • punai peyaril says:

  எஸ்.ராவிடம் தான் கேட்க வேண்டும். அவரைத் தான் இவரக்ள் ஒரு படத்தில் டயலாக்கில் இவரை கிண்டல் செய்ததாக கூறி கலாட்டா செய்தது…

 • செல்வா says:

  இந்த தலைப்வை எப்படி புரிந்துகொள்வது? ஒரு ஆண்குறி எப்படி ஒரு மையப்புனைவை சிதைத்தது என்பதின் பிரதி – என்றா? ஒரு ஆண்குறியின் மையப்புனைவு எப்படி சிதைக்கப்பட்டது என்பதின் பிரதி – என்றா? அதெல்லாம் இருக்கட்டும், மையப்புனைவு என்றால் என்ன? ஆண்குறியின் எதிர்ச்சொல் அல்லவே?

 • லறீனா அப்துல் ஹக் says:

  நூலின் தலைப்புக்கு மேற்கோள்குறிகள் இடப்படாததால் ஏற்பட்ட பெரும் குழப்பம் போலும்! :)

  இந்நூலில் இடம்பெற்ற ஃபஹீமா ஜஹானின் கவிதைகள் குறித்து எழுதப்பட்ட “நம் அன்னையரின் ஆதித்துயர்” கட்டுரையை “ஊடறு”வில் படித்தேன். வித்தியாசமான கோணத்தில் அணுகப்பட்ட அற்புதமான/ஆழமான விமர்சன எழுத்து. குறிப்பாக, ஃபஹீமாவின் கீழ்வரும் வரிகள் தொடர்பில் எழுதிய,

  //”………………..
  முதலில் எனது பீங்கானில் விழுந்து தெறித்த
  ஒளிக்கற்றைகளின் துணையுடன்
  இளையவளின் மெழுகுதிரி சுடர்விட்டெரிந்தது
  மூத்தவளின் கடைசி எழுத்துக்கும் அம்மா
  ஒளி காவி நடந்த பின்னர்
  சட்டென நுழைந்தது வீட்டினுள் மின்சாரம்

  மறுபடியும் இருளினுள் வீடமிழ்ந்தபொழுது
  சமையலறையினுள் சிக்கியிருந்த அம்மாவுக்கு
  ஒளிச்சுடரொன்றினை ஏந்தி யாருமே நடக்கவில்லை
  எவரின் உதவியும் இன்று
  இருளினுள்ளேயிருந்து
  எல்லோருக்குமான உணவைத் தயாரித்தாள் எனதன்னை”

  ’தியாகம்’ பெண்களின் அற உணர்வை வெளிப்படுத்தும் ஒரு முறையாக இருந்திருக்கிறது. அது தாய் நிலையின் ஒரு செயல்பாட்டு நிலையாகவும். இருக்கிறது. ‘தியாகத்தை’ அறிவுறுத்தி அவள் வாழ்வதில்லை. மாறாக, அவள் தியாகத்தைச் செயல்படுத்துகிறாள். சமூக உற்பத்தியின் ஓர் அந்தரங்கப் பங்காகவும் பொறுப்பாகவுமே, தாயின் ‘தியாகம்’ வெளிப்படுகிறது. வேட்டைக்குச் சென்று உணவைக் கொணர்ந்த காலம் முதல், வேளாண்மையை ஒரு பண்பட்ட பண்பாடாக ஆக்கியது வரை பெண் உணவை, பகுத்துண்டு வழங்கியது வரை அவளின் எல்லா செயல்களிலும், ‘தியாகம்’ என்பது இன்றியமையாததாக இருக்கிறது.//

  என்ற வரிகள் நெகிழ்ச்சியூட்டுபவை. வாழ்த்துக்கள் குட்டி ரேவதி! :)

  மேற்படி நூலை இலங்கையிலும் பெற்றுக்கொள்ள வழிசெய்வீர்கள் என நம்புகின்றேன். நன்றி.


Leave a Comment

Archives