தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

25 அக்டோபர் 2020

ஆலமும் போதிக்கும்….!

ஜெயஸ்ரீ ஷங்கர்

Spread the love

போகும் வழியில்
புரிந்து போனது..
சமுதாயம்..ஜனநாயகம்..
சமத்துவம்..கற்றுத்தந்தது..
வழியிலொரு ஆலமரம்..!

சுமை தாங்கும்
நிம்மதியில் தான்..
எத்தனை விழுதுத்தூண்கள்..!
மரத்தின் விழுதுகளா…?
அத்தனையும் மதவிழுதுகள்…
தாங்குகிறது இந்தியா..!

நடுப்பரப்பை பிடிக்கவென்றே…
பறவையாய் விரித்தது கிளைகள்..
அத்தனையும் சாதிக்கிளைகள்…
விழுதுகளை தாங்குமா….கிளைகள்..?

மரத்தின் நடுமுதுகில்…
எதையோ…எதிர்த்து
கொத்திவிடும் மரங்கொத்தி…
பொந்துக்குள்ளே .புதையலாய் நாகம்..!
ஊரஊர தேயாத பாதை நீ…!
கலவரக் கட்டெறும்பின்
கட்டாயப் படையெடுப்பு..!

கிளைகொன்றாக…
வண்ணக் கொடிகள்..
தாவும் குரங்குகள்
சண்டையிட்டு விளையாட
ஊழல் அரசுகள்…
வந்துபோன அடையாளங்கள்..!

இருக்கும் இடத்தில்
தனக்கென கொஞ்சமாய்
கூடு கட்டி வாழ்ந்த
பறந்த பறவைகளின்..
நினைவுச் சின்னங்கள்…
ஆன்மீக அடையாளம்..!

வழிப்போக்கரின் கையகலப்
பொட்டலம் விரித்துப்
பசியாற்றி..போகும்
பாதசாரிகளின் இளைப்பாற்றும்
மெத்தை நிழல்….!

நீ… தென்றலுக்கு
இடம் கொடுத்து
மோன தவமிருந்தாலும்…
உன்னில் அமர்ந்து..நித்தம்..
தவம் கலைக்கும்
மோகக் கிளிகள்..!
======================================

Series Navigationகால காலன் “நெருஞ்சி” கவிதைத் தொகுதி எனது பார்வையில்மீண்ட சொர்க்கம்

One Comment for “ஆலமும் போதிக்கும்….!”

  • ganesan says:

    The writer’s imagination in comparing our social activites with aalamaram is excellent….well written keep it up!


Leave a Comment

Archives