விளிம்பு நிலை மக்களின் உளவியல்: நீர்த்துளி: சுப்ரபாரதிமணியனின் புதிய நாவல்

விளிம்பு நிலை மக்களின்  உளவியல்:  நீர்த்துளி: சுப்ரபாரதிமணியனின் புதிய நாவல்
This entry is part 41 of 45 in the series 26 பிப்ரவரி 2012

உலகமயமாக்கல் கிராம மக்களை நகரங்களுக்குத் துரத்துகிறது. அவர்கள் நகரங்களில் அகதிகளாகத் திரிகிறவர்களாக இருக்கிறார்கள். ஆறுதலாய் சக தொழிலாளர்களின் நட்பும் ஆறுதல் வார்த்தைகளும் தொடர்ந்து இயங்க வைக்கிறது. வருமானம் வேண்டி வரும் “ ஒற்றைப் பெற்றோர்கள்” அடையும் மன்ச் சிதைவும், பாலியல் உளவியல் சிக்கல்களும் நீர்த்திதுளி நாவலின் மையப் பாத்திரங்களுக்கு ஏற்படுகின்றன. நீதிமன்றத்தீர்ப்பை ஒட்டி திருப்பூர் சாயப்பட்டறைகளின் மூடலுக்கு பின் தொழில் நகரம் சந்திக்கும் பிரச்சினைகள் விளிம்பு நிலை பனியன் கம்பனி தொழிலாளர்களின் வாழ்க்கையோடு சொல்லப்பட்டிருக்கிறது.சாயத்திரை நாவல் மூலம் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்குள் அகப்பட்டு விட்ட ஒரு தொழில் நகரம் ஒரு விதப்பூச்சுடன் மினுங்குவதை காட்டியவர். இந்த நாவலில் சுற்றுச்சூழல் பாதிப்பு மனித உரிமைப்பிரச்சினையாகி சாயப்பட்டறைகள் மூடப்படுதலையும் அதனால் அவதியுறும் தொழிலாளர்கள் பற்றியும் சக மனிதர்களின் அனுபவங்கள் வழியே விவரிக்கிறது, இடம்பெயர்ந்து வந்து வாழும் மக்களின் பிரச்சினைகளை கூர்ந்து கவனிக்கிறது. தனித்து வாழும் உதிரி மக்களின் வாழ்க்கை சமகால அரசியலுடன் பேசப்படுகிறது. பலமான உரையாடல் தளங்கள்..சிறு சிறு தொன்மங்களின் மீட்சிகள், முஸ்லீம் சமூக வாழ்க்கை. குற்றவுணர்வுடன் சமீப நிகழ்வுகளைப் பார்க்கும் கிறிஸ்துவ இளைஞன். சேர்ந்து வாழ ஆசைப்பட்டு சமூக நிர்பந்தங்களால் நிலை குலைந்து போகும் இருவர். இவர்களின் வாழ்க்கை திருப்பூரின் இன்னொரு முகமாக விரிந்திருக்கிறது.

( ரூ 160., பக்கங்கள் 210 உயிர்மை ,11/29 சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 60 0018 ,044-24993448 )

Series Navigation“தா க ம்”விஸ்வரூபம் – அத்தியாயம் எழுபத்தெட்டு

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *