தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

மக்பூல் ஃபிதா ஹுசைன் – நீண்ட நெடிய கலை வாழ்வில் சில கரும்புள்ளிகள்

எம் எஃஃப் ஹுசைன் தன் 95-ஆம் வயதில் மரணமுற்ற போது மீண்டும் அவர் குறித்து எழுந்த விவாதங்களில் அவர் கலைச் சிறப்புப் பற்றி கொஞ்சமாகவும், இந்துக் கடவுளர்களை அவர் நிர்வாணமாக வரைந்திருந்ததால் எழுந்த எதிர்ப்பு…

இப்போதைக்கு இது (நடந்து முடிந்த தேர்தலும் ஆட்சிமாற்றமும்)

எதிர்பார்ப்பும் நம்பிக்கையுமாக தமிழக மக்கள் தங்களிடமுள்ள வன்முறை சாரா எனில் வலுவான ஒரே ஆயுதமான ‘வாக்குரிமையை’ப் பயன்படுத்தி ஆட்சிமாற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறார்கள். மக்களின் வாக்குரிமையை, வாழ்வுரிமையை மதித்துநடக்கக் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதே தோல்வியடைந்தவர்களுக்கும் சரி வெற்றியடைந்தவர்களுக்கும் சரி…

(69) – நினைவுகளின் சுவட்டில்

நண்பர்கள் திரும்பக் கூடத் தொடங்கிவிட்டார்கள். நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு குணச் சித்திரம். என்னையும் சேர்த்து. எல்லோரும் அலுவலக நேரம் போக மிகுந்த நேரத்தில் சேர்ந்து நெருக்கமாகப் பழகிக்கொண்டிருப்பது எனக்குப் பிடித்தது. வேலுவுக்கு வேலை வாங்கிக்…

சாமானியனிடம் இந்திய சர்க்கார் கேட்கும் பத்து சாதாரண கேள்விகள்

  நான் (பிரதம மந்திரி) சர்வ வல்லமை பொருந்தியவன் எல்லா தவறுக்கும் நான் தான் காரணம் என்று நீங்கள் சொல்வது என் காதில் விழுகிறது. சரி. முதலில் என் வருத்தத்தை சொல்லி விடுகிறேன். கால்…

தேசிய ஒருமைப்பாட்டுக்காக அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் !

அது 1993ம் வருடம். சரியாகச் சொன்னால் ஜூலை மாதம் 16ம் திகதி. 'நல்லரத்தினம் சிங்கராசா'வுக்கு அப்பொழுது வயது 17. அவர் இப்போதைக்குச் சில தினங்கள் முன்பிருந்தே வீட்டுப் பரணின் இருட்டு மூலையொன்றில் ஒளிந்திருக்கிறார்.  …

ஜெயகாந்தன் என்றொரு மனிதர்

(ஆனந்த் முருகானந்தம் தொகுத்து, எனிஇந்தியன் பதிப்பகம் வெளியிட்ட “அமெரிக்காவில் ஜெயகாந்தன்” நூலில் வெளியான கட்டுரை. திண்ணை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.) 2000-ஆம் வருடத்தய ஜெயகாந்தனின் அமெரிக்க வருகைக்கு முன்னர் தன் நண்பரின் மகனாகவே…

இந்த வாரம் அப்படி: அல்லது ராமதேவின் போராட்டமும் காங்கிரஸின் சர்க்கசும்

முதுகுக்குப் பின்னே கத்தி திமுக என்ற கட்சியையே குழிதோண்டி புதைக்கும் வேலையில் காங்கிரஸ் ஈடுபட்டிருக்கிறது என்றுதான் தோன்றுகிறது. முதலில் ராஜா, பிறகு கனிமொழி, இப்போது மாறன் சகோதரர்கள். அடுத்து என்ன முக அழகிரியா ஸ்டாலினா…

அறிவியல் தொழில்நுட்பம்

2011 ஜப்பான் புகுஷிமா அணு உலைகள் விபத்துக்குப் பிறகு அணுமின் சக்தி பாதுகாப்புப் பற்றி உலக நாடுகளின் தீர்மானம் -3

(மே மாதம் 31, 2011) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா “இயற்கை அபாய நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்தும் அளிக்காமல் நாங்கள் பயங்கரத் தொழிற்சாலைகளை அமைத்து விருத்தி செய்யப் போவதில்லை.  சமீபத்தில் நேர்ந்த கோர…

இலக்கியக்கட்டுரைகள்

“பழமொழிகளில் தன்முன்னேற்றச் சிந்தனைகள்“

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com முன்னோர்கள் தங்களது வாழ்வில் கண்டுணர்ந்த அனுபவமொழிகளே பழமொழிகளாகும். இப்பழமொழிகள் வாழ்க்கைக்குப் பயனுள்ள பல கருத்துக்களை வழங்கும் வாழ்வியல் பெட்டகமாகத் திகழ்கின்றன. மனச்சோர்வு ஏற்படுகின்றபோது ஆறுதல் சொல்லும் தோழனாகவும்,…

எனது இலக்கிய அனுபவங்கள் – 2 ஆசிரியர் உரிமை

'படைப்புகளைச் சுருக்கவோ திருத்தவோ ஆசிரியருக்கு உரிமை உண்டு'என்று அநேகமாக எல்லா பத்திரிகைகளும் குறிப்பிடுவதுண்டு. 'தன் படைப்புகளில்கை வைக்கக்கூடாது' என்று கறாராகச் சொல்லும் எழுத்தாளர்களும் உண்டு.பத்திரிகையின்கொள்கை, பக்க அளவு காரணமாக படைப்புகளைச் சுருக்கவோ,பகுதிகளை வெட்டவோ நேர்வதைப்…

கடிதங்கள் அறிவிப்புகள்

நிகழ்வுகள் மூன்று

பதிவு - சு.குணேஸ்வரன் 1.         சிறந்த நூல்களுக்கான பரிசளிப்பு விழா   யாழ் இலக்கிய வட்டம் - இலங்கை இலங்கைப் பேரவை நடாத்தும் 2008-2009 இல் வெளிவந்த நூல்களுக்கான பரிசளிப்பு விழா எதிர்வரும் 12.06.2011…

கதைகள்

ஏழ்மைக் காப்பணிச் சேவகி(Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 4

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "ஆயுத உற்பத்திச் சாலைகள் தொழிலாளருக்கு வேலை, ஊதியம், நல்வாழ்வும் அளித்து, மனித இனத்தின் ஆத்மாக்களை நசுக்கினும் ஆக்கப் பணியே…

மூன்று பெண்கள்

சீக்கிரமே பரமேச்வரனுக்கு முழிப்பு வந்து விட்டது. ஜன்னல் வழியே வெளியே பார்த்தார். மூடுபனியின்தாக்குதலுக்கு அஞ்சி  வெளிச்சம் ஒடுங்கிக் கிடந்தது போல் அரை இருட்டில் தெரு முடங்கிக்  கிடந்தது. தெரு என்று சொல்வதுதப்பு. நான்காவது  மெயின் நீளமும் அகலமுமாக வீசிக் கிடந்தது.…

மன்னிக்க வேண்டுகிறேன்

தெலுங்கில்  T. பதஞ்சலி சாஸ்திரி தமிழாக்கம்  கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com   "நீங்க என்ன எடுத்துக்கறீங்க?" "பிஸ்தா ஐஸ்க்ரீம். பெரிய கப்." "டு பிஸ்தா ஐஸ்க்ரீம் ப்ளீஸ் .... ஐஸ்க்ரீம் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்…

பெற்றால்தான் பிள்ளையா?

காலை வேலைகளுடன் அந்தக் காலை நடையும் சேர்ந்து கொண்டது செல்வாவிற்கு. ரேஸ் கோர்ஸ் சாலையில் வாசம். காலை ஏழு மணிக்கு நடை தொடங்கும். ஃபேரர் பார்க் தொடக்கப் பள்ளி, திடல், நீச்சல்குளம், பெக்கியோ ஈரச்சந்தை…

‘காதல் இரவொன்றிற்க்காக

எமிலி ஜோலா பிரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா   -I-   [caption id="attachment_1396" align="alignright" width="216" caption="Émile Zola"][/caption] P**** என்பது மேட்டுப்பிரதேசத்தில் அமைந்த சிறியதொரு நகரம். கோட்டைமதிற் சுவரையொட்டி செங்குத்து சரிவுகளும்…

கலைகள். சமையல்

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 39

तृतीयाविभक्तिः (tṛtīyāvibhaktiḥ) சிறப்பு விதிகளில் ஒன்றான सह (saha) அதாவது ‘உடன்’ என்ற வார்த்தையைப் பற்றி இந்த வாரம் தெரிந்து கொள்வோம். ’ सह ’ इति पदं यत्र प्रयुज्यते तत्र तृतीयाविभक्तिः…

கவிதைகள்

ஒன்றுமறியாத பூனைக்குட்டி..:-

ஷாப்பிங் மால்களில் முயல்குட்டிகளும் பூனைக்குட்டிகளும் கடந்த போது அவன் கண்கள் அவைபோல் துள்ளின. கூட வரும் மனைவி பார்க்கும்போது கீழ்விடுவதும் பின் ஏந்திக்கொள்வதுமாக நீண்டன அவன் கண்கள் குறுகலான கடையில் இருந்த காலண்டர் சாமியின்…

அலையும் வெய்யில்:-

பார்க் பெஞ்சுகளில் சூடு ஏறி அமர்ந்திருந்தது. மரங்கள் அயர்ந்து அசைவற்று நின்றிருந்தன. ஒற்றைப்படையாய்ப் பூக்கள் பூத்திருந்தன. கொரியன் புல் துண்டுகள் பதிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. டெரகோட்டா குதிரை சாயம் தெறிக்கப் பாய்ந்தது. இலக்கற்ற பட்டாம்பூச்சி செடிசெடியாய்ப்…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) பிதற்றும் சிறுவன் (கவிதை -37)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நீ சொல்ல நினைப்பதை நான் பேச வில்லை என்றால் எனது கன்னத்தில் அறைந்து விடு ! பிதற்றும் சிறுவன் தவறிப்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -4)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "மௌனத்தையும், அமைதியையும் நேசிப்பவனுக்குப் பிதற்றுவாயரிடமிருந்து எங்கே ஓய்வு கிடைக்கும் ?  கடவுள் என் ஆத்மா மீது பரிவு காட்டி மௌன…

வட்ட மேசை

எத்தனையோ நாற்காலிகள் இருந்தாலும் அமர்ந்தது என்னவோ அந்த வட்ட மேசையின்மீது- சற்றே குனிந்து கையூன்றி எதிர் இருக்கையில் விவாதமும், விமர்சனமும், கவிதையும், நெருக்கமும் மற்றெல்லாமாக என விழுந்துகொண்டு இருந்தன சொற்கள் மேசையின் மீதாக ஒன்றின்மீது…

நிழலின் படங்கள்…

எங்கிருந்தோ கூவுகிறது தனித்த அந்திமப்பறவை ஒன்று அலறல்களடக்கி மெல்லிய  அனத்தல்கள் மட்டுமே கூவல்களாக அதன் சப்தங்கள் நடுநிசியில் உயிரில் பாய்ந்து ஊடுருவி சிலிர்த்து எழும்பின ரோமகால்கள் சொந்தங்களையிழந்த தாக்கம் என்றோ தொட்டுச் சென்ற மிச்சமிருக்கும்…

நெருப்பின் நிழல்

ஒற்றை மெழுகுவர்த்தி பிரகாசமான சுடர்.   . காற்றின் அசைவுக்கு சுற்றி சுழன்று அணைகிற போக்கில் சப்பனமிட்டு -பின் நிலைபடுத்தி நெடுநெடுவென்று அலைஅலையாய்... வாழ் சூட்சம  நெளிவுகள் .   . சூட்சமங்களின் அவசியமற்று…

பீரப்பா தர்காவிற்கு வந்திருந்தார்

பீரப்பா டீக்கடையில் ஒரு சாயா குடிக்க வந்திருந்தார். நெடுநாளாய் சமாதியில் ஓய்ந்திருந்த சோர்வு அவருக்கிருந்தது. முன்னூறு வருடங்களுக்கு முன்பு தன்னோடு விளையாடிய குழந்தைகளும் விளையாடிய இடமும் உருத்தெரியாமல் போயிருந்தது. உயிரோடு சமாதிக்குள் போனபிறகு பிள்ளைகளுக்கு…

கவிதை

எங்கே போயிருந்தது இந்த கவிதை மழை வரும் வரை.   * ஈரநிலமாய் மாறுதலுக்கு தயாராகிறார்கள் சன்னல்கள், கார் கண்ணாடி, சுவர்கள், மெட்ரோ ரயில்கள்   மரங்கள் அகோரிகள் வெயில், மழை, தூறல், பனி..…

அறிகுறி

  தனக்குத்தானே உருகிக்கொள்வது, பின் தேற்றிக்கொள்வது, நடந்தவற்றை மறுகோணம் கொண்டு பார்ப்பது, இப்படி நடந்திருந்தால் நான் எப்படியோ இருந்திருப்பேன் என்று நினைத்துக்கொள்வது, ஏற்கனவே நடந்தவற்றில் தனக்கு பிடித்த வகையில் முடிவுகளை மாற்றி வைத்துக்கொண்டு மனதிற்குள்ளேயே…

கணமேனும்

குழந்தைகள் பற்றிய எந்த கவிதையையும் நினைக்கையிலும் வாசிக்கையிலும் வரிகளினூடே திரிகின்றனர் எண்ணற்ற குழந்தைகள். நமது குழந்தையோ நண்பரின் குழந்தையோ எதிர் வீட்டுச் சிறுமியோ பயணத்தில் அருகமர்ந்த சிறுவனோ... நினைவுகளில் புதையுண்டு கனவுகளில் பிறப்பெடுக்கும் தொலைந்த…

ஒரிகமி

காகிதத்தில் கற்பனை மடிப்புகள் விரிந்து புதுப்புது உருவங்கள் பார்வையாளர் உள்ளத்தில் மிதக்கும். ஒரிகமி கலைஞனின் மெல்லிய விரலழுத்தத்தில் குதித்தெழுகின்றன குதிரைகளும், பறவைகளும். ஒரே தாளில் தோன்றுகின்ற வியத்தகு உருவங்களை உள்ளத்தில் கசங்காமல் பதித்துக் கொண்ட…

மனவழிச் சாலை

கவலைகள் அவ்வப்போது கடுகாகவும் கடுஞ்சீற்றத்துடனும் வரும்...   அதன் வருகையின் அடையாளமாய் மனதில் சிறு குழிகளும் பெருங்குண்டுகளுமாய் இருக்கும்...   எதிரே வருபவர்களெல்லாம் அதில் தடுக்கி விழலாம். குழிகளையும் சாலையையும் பொறுத்து காயங்களும் ஏற்படலாம்.…

சதுரங்கம்

நாட்கள் நத்தை போல் நகர்கிறது கணக்குச் சூத்திரம் போல வாழ்க்கை வெகு சிக்கலாக இருக்கிறது தாழப் பறந்து கொண்டுள்ளதால் உயரே பறப்பவர்களின் எச்சம் என் மீது விழுகிறது சிலந்தி வலையில் சிக்கிக் கொண்டதைப் போல…

ஊரில் மழையாமே?!

மற்றொரு மழை நாளில்... மடித்துக் கட்டிய லுங்கியும் மடக்குக் குடையுமாய் தெருவில் நடந்த தினங்கள்...   கச்சலில் கட்டிய புத்தக மூட்டையும்.. "அடை மழை காரணமாக பள்ளி இன்று விடுமுறை"யென- தேனாய் இனித்த கரும்பலகையும்...…