Articles Posted by the Author:

 • பேராசிரியர் மௌனகுருவின் இரண்டு நூல்கள் !  

    படித்தோம் சொல்கின்றோம் : ஜூன் 09 பிறந்த தினம் கொண்டாடும்   கூத்தே உன் பன்மை அழகு –   கூத்த யாத்திரை                                                                               முருகபூபதி  “ ஈழத்தமிழ் நாடக மரபு ஆறாத்தொடர்ச்சி உடையது. அதில் தத்தம் பங்களிப்பு செய்தோரினால் அம்மரபு மேலும் செழித்து வளர்ந்துள்ளது. தம் முன்னோரின் தோளின் மீது நின்றுதான் அடுத்த நாடக தலைமுறை உலகை பார்க்கிறது. தன்னை தாங்கி நிற்பவரின் பார்வைப் புலத்திற்கு தெரியாத பல காட்சிகள் மேலே நிற்பவரின் கண்களுக்கு தெரிய […]


 • விழிப்பு

  விழிப்பு

    தெலுங்கு மூல ஆசிரியர் : பி.அஜய் ப்ரசாத் பி.அஜய் ப்ரசாத் (முழு பெயர் – பாதர்ல பிரசன்ன அஜய் ப்ரசாத்) ஆந்திரமாநிலம், குண்டூர் மாவட்டம், நகரிகல்லு கிராமத்தில் ஜூன் 9இ 1972இல் பிறந்தவர். 2005ஆம் ஆண்டு முதல் தெலுங்கில் சிறுகதைகளை எழுதி வருகிறார். இவரின் கதைத் தொகுதி 2018ஆம் ஆண்டு “லோயா மற்றும் சில கதைகள்” என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. இவரின் இரண்டாவது கதைத் தொகுதி “காலி பொரலு” ஆகும். இவரின் கதைகள் ஆங்கிலம், இந்தி, […]


 • காற்றுவெளி(கவிதைச் சிறப்பிதழ்)ஆனி 2022

  காற்றுவெளி(கவிதைச் சிறப்பிதழ்)ஆனி 2022

    காற்றுவெளி(கவிதைச் சிறப்பிதழ்)ஆனி 2022வணக்கம்,காற்றுவெளி ஆனி(2022) இதழ் கவிதைச்சிறப்பிதழாக உங்கள் பார்வைக்கு வருகிறது.படைப்பாளர்களுக்கு எமது நன்றி.இந்த இதழை அலங்கரிப்பவர்கள்:கவிதைகள்:       ஆர்த்திகா சுவேந்திரன்       பாரதிசந்திரன்       துவாரகன்       சித்தாந்தன் சபாபதி       இயல்வாணன்       சாந்தக்கண்ணா         சரஸ்வதிராசேந்திரன்       சுகன்யா ஞானசூரி       ஆனந்த குமார்       ஐ.தர்மசிங்       ந-சிறீதரன்       சாந்தி […]


 • கொலுசு இதழ்

  கொலுசு இதழ்

    வணக்கம்  கொலுசு இதழ் 2016  இலிருந்து மின்னிதழாக இன்று வரை வந்து கொண்டிருக்கிறது. இதற்காக யாரிடமும் இதுவரை எந்தவித கட்டணமும் நாங்கள் வசூலிக்கவில்லை. எல்லாவற்றையும் நாங்களே சமாளித்து வருகிறோம். கொலுசு இதழ் கடந்த ஆண்டிலிருந்து அச்சு இதழாக வெளிவருகிறது. இன்றைய காலகட்டத்தில், சிற்றிதழ் நடத்துவது பொருளாதார ரீதியில் மிகக் கடினம் என்றாலும் படைப்புகளை அச்சில் பார்ப்பது என்பது அலாதியான தனி சுகம் என்ற காரணத்திற்காக தொடர்ந்து நடத்தி வருகிறோம். இந்த சூழ்நிலையில் தாங்கள் ஆண்டு சந்தாவோ […]


 • பாலினப் போர் 

  அழகர்சாமி சக்திவேல்  பன்னெடுங்காலமாக, இந்த உலகம் முழுவதுமே, வீர விளையாட்டுக்கள் விளையாட, ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். வீரம் என்பது ஆணுக்கு மட்டுமே உரிய பண்பு என, பெரும்பான்மையான ஆண்கள் நினைத்த அந்த மூடநம்பிக்கையை உடைக்க, உலகத்துப் பெண்கள்,  பலவழிகளிலும் போராட வேண்டியதாயிற்று. அப்படிப்பட்ட போராட்டங்களில் ஒன்றுதான், பாலினப்போர் (Battle of Sexes) என்று சொல்லக்கூடிய, ஆணும் பெண்ணும், விளையாட்டுக் களத்திலே, நேருக்கு நேர் மோதும் பந்தயங்கள் ஆகும். இது போன்ற பாலினப் போர்ப் பந்தயங்களில், போராடி, பல பெண்கள் வெற்றி பெற்று […]


 • பயணம் – 5

  ஜனநேசன் 5 மறுநாள் இரண்டாம் சனிக்கிழமை.  மாமாவுக்கு விடுமுறை.  ஒரு காரை வாடகை எடுத்தக் கொண்டு அவனை சிரபுஞ்சிக்கு அழைத்துச் சென்றார்.  மேகாலாயா, அஸ்ஸாம் எல்லைக்கும் பங்களாதேஷ் எல்லைக்கும் நடுவே உயரமான அடர்ந்த பசுமையான மலைகள் சூழ்ந்த சிரபுஞ்சிக்குப் போனோம்.  மார்ச் மாதம் வெயில் ஆரம்பித்திருந்தது.  நீரின் சாரமில்லை.  உயர்ந்த மலைகளும் சரிந்து தாழ்ந்த பள்ளத்தாக்குகளையுமே பார்க்க முடிந்தது.  அவற்றில் நீர்த்தாரைகளால் பச்சைபாசக்கோடுகள் தெரிந்தன.  அவற்றில் எல்லாம் மழைக்காலத்தில் அருவிகள் வழியுமாம்.  சுற்றிலும் அருவிகள் சூழ்ந்த திட்டில் […]


 • சொல்வனம் 271 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

  சொல்வனம் 271 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 271 ஆம் இதழ் இன்று (22 மே 2022) பிரசுரமாகியது. இந்த இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/   இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: சிதைந்த நகரமும் சிதையாத் தொன்மங்களும்– ரகுராமன் காட்சிப் பிழைகளும் கவன ஈர்ப்புகளும் – லலிதா ராம் காலக் கணிதம் – உத்ரா அகிலம் அண்டம் – பானுமதி ந. ஃபெனி – முந்திரிக்கனிச்சாறு – லோகமாதேவி உனக்காக உறைபனியில் – ச. கமலக்கண்ணன் மௌலானா ஸஃபர் அலி கான் -அபுல் கலாம் ஆசாத் குரங்குகளுக்குத் தீனி அளித்தால் வனங்கள் அழியுமா? – கோரா உலகைக் காப்பாற்றிக் கொள்ளும் நான்கு நடவடிக்கைகள் என்ன? – ரவி நடராஜன் நாவல்கள்: வாக்குமூலம் – அத்தியாயம் 2- அவன்  – வண்ணநிலவன் மிளகு அத்தியாயம் இருபத்திரண்டு – இரா. முருகன் கதைகள்: ஒரு இயற்பியலாளரைக் காதலித்துக் கலப்பதெப்படி?– டீஷா ஃபில்யா (தமிழாக்கம்: ஷ்யாமா) குருதிப் பலி – சுஷில் குமார் எரியும் காடுகள்-3 – மைக்கெல் மார்ஷல் ஸ்மித் (தமிழாக்கம்: மைத்ரேயன்) ஏழாவது மலர் – முகுந்தன் – […]


 • உள்ளங்கைப்புண்

  உள்ளங்கைப்புண்

  லாவண்யா சத்யநாதன். ஆடுதிருடி மாடுதிருடி அயலூர் சந்தையில் வேட்டியில் முடியும் களவாணிப்பயல்களைக் கட்டிவைத்தடிக்கும் பட்டிக்காட்டு முரட்டுநீதி இல்லாமல்போனதில் கயவாளிகளுக்கு குளிர்விட்டுப் போயிற்று. அதிகாரச் செயலியை கைப்பேசிக்குள் வைத்தவன் தோலிருக்கச் சுளைவிழுங்கி உலகளுக்கும் பெருமாளாவது உள்ளங்கைப்புண். ஆனால் பகல்பொழுதுக் களவுக்கு பூர்வஜென்ம புண்ணியம் யோகஜாதகமென்று பொன்னாடை போர்த்தும் உன் மூளைப்பாசியை அமிலத்தால் கழுவினாலொழிய நீ திருந்தப் போவதில்லை. நானும் விடுவதாயில்லை. –லாவண்யா சத்யநாதன்.   உங்களுக்கும் தெரிந்தவர்கள்தான் வெளியில் பயணவழி நெடுக ஒலித்தபடியிருந்தது ஒரு பெண்மானின் கதறல். மலைகளும் […]


 • ஹைக்கூ

  பேரா.ச.சுந்தரேசன்   நான் பார்க்கும் பொழுதெல்லாம் உன் முகத்தைக் காட்டுகிறது ஆடியில் நீ ஒட்டிய ஸ்டிக்கர் பொட்டு!     மிருகங்கள் எதுவும் பேதம் பார்ப்பதில்லை மனிதன் சொன்னான் அவை மிருகசாதியென்று.     ஒவ்வொரு முறையும் சாலையோரத் தகரத்துண்டு ஏமாற்றிவிடுகின்றது கானல் காசாய்…!   பேரா.ச.சுந்தரேசன் இலொயோலா கல்லூரி, வேட்டவலம் திருவண்ணாமலை மாவட்டம்.


 • வானத்தில் ஓர் போர்

  ரோகிணி கனகராஜ்   இருட்டு நிசப்தத்தைப் போர்த்திக் கொண்டு சுருண்டு படுத்திருந்த வேளையில்… வானத்தில் ஓர்போர் நடந்துக்கொண்டிருக்கிறது…   போர்வீரர்களென  திரண்ட மேகங்கள் ஆவேசக் காட்டெருமைகளென முட்டிமோதிக்கொள்கின்றன… இடியின் சத்தம் குதிரையின்  குளம்பொலியென கேட்டுக்கொண்டிருக்கிறது…   பளபளவென வாளெடுத்து சுழன்றுசுழன்று வீசுகின்றன மின்னல்கள்… அரசியல்வாதிக்குப் பயப்படும் அப்பாவி மக்களென அஞ்சிநடுங்கி விண்மீன்களும் நிலவும் ஓடிஒளிந்து கொள்கின்றன…   வானமகள் கண்ணீர்விட்டு அழுகிறாள் வீணாய்போன இந்த யுத்தம் தேவையா என விழித்துக்கொண்ட ஊருடன் சேர்ந்து மெல்ல விழித்துக்கொள்கிறது அதுவரை […]