கவிமன வேதியியல் மாற்றங்கள் Dr. Jekyll ஆகவும் Mr.Hyde ஆகவும் மாறிக்கொண்டே யிருப்பவர்கள் முன்னவராக இருக்கும்போது அன்பே சிவம் என்று பண்ணிசைக்கிறார்கள்…. பின்னவராக மாறி காது கூசுவதாய் தங்களுக்குப் பிடிக்காதவர்களை வசைபாட ஆரம்பித்து விடுகிறார்கள். கொன்றழிக்கத்தோதாய் சொற்களின் கூர்நுனியில் நஞ்சுதோய்த்து அவர்கள் வைத்திருக்கும் கத்தி கபடா துப்பாக்கி வெடிகுண்டு வகையறாக்கள் வேகமாய் துடிக்கவைக்கின்றன ஏற்கெனவே எதனாலெல்லாமோ எந்நேரமும் படபடப்பாக உணரும் பாழ் இதயத்தை. முன்னவராக எண்ணி நட்புபாராட்டிக்கொண்டிருந்தவர்கள் காலடியின் கீழ் தரை நழுவுவதாய் உணர்ந்து மூர்ச்சையாகிவிழும் தருணம் […]
ஜனநேசன் 4 காலை 6 மணி ஆயிற்று. ரயிலுக்குள் சூரியவெளிச்சம் ஊடுருவியது. அக்கம் பக்கத்தில் எழுந்து பல்துலக்கியும், கழிவறைக்குப் போவதுமாக இருந்தார்கள். ஜன்னல் திரையை நன்றாக விலக்கிப் பார்த்தான். சிறுசிறு நிலையங்களில் நிற்காமல் ரயில் ஓடிக்கொண்டிருந்தது. பக்கத்திலிருப்பவரிடம் கேட்டான். இது எந்த “மாநிலம், எந்த ஊர்”, “ஊர் தெரியவில்லை. ஆனால் ஓரிசாவைக் கடந்து பீகார் மாநிலத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்” என்றார். இவனும் பல்துலக்க வேண்டியதை எடுத்துக்கொண்டு காலைக் கடமைகளை முடித்து வந்தான். ரயிலில் குளிக்கமுடியாமல் ஒரு […]
முனைவர் ம இராமச்சந்திரன் மக்கள் இணைந்து வாழ வேண்டிய கட்டாயத்தில் உருவாக்கப்பட்டது சமுதாயம்.மனிதனது தேவைகள் அனைவருக்கும் கிடைக்காத நிலையில் அவர்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளைக் களைவதற்கான ஒரு அமைப்பாகச் சமுதாயம் உருவாக்கப்பட்டது.மக்களிடையே தோன்றும் பொருளாதாரச் சிக்கல்கள் அதிகார ஏற்றத்தாழ்வுகள் பண்பாட்டு இயலாமைகள் முதலியவற்றைச் சமன்படுத்துவதற்காக மக்களிடையே காணப்படும் முரண்பாட்டை நீர்த்துப்போகச் செய்வதற்கும் சமுதாயம் துணையாக இருந்தது. சமுதாயத்தில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என்று அவரவர் தேவைகள் விருப்பங்கள் ஒரு ஒழுங்குமுறையில் நடப்பதற்கும் நடக்காமல் போவதற்கான செயல்பாடுகள் கட்டமைக்கப்பட்டன என்ற வகையில் […]
மணிமாலா மதியழகன், singapore இயற்கை ஆர்வலரான திரு. சுப்ரபாரதி மணியன் அவர்கள் தான் காணும் சமுதாயச் சிக்கல்களை, புறச்சூழலை, மனிதர்களின் அகவுணர்வுகளைத் தன் படைப்பில் வெளிப்படுத்துகிறார். இவரது படைப்புகளில் பெரும்பாலும் திருப்பூரே கதைக்களமாகவுள்ளது. பின்னலாடை தொழில் உற்பத்தியின் மூலம் அந்நியச் செலவாணியை அதிகளவில் ஈட்டி, ‘டாலர் சிட்டி’ என்னும் பெருமையுடன் விளிக்கப்படும் நகரம் திருப்பூராகும். இங்கே பஞ்சு மில், பின்னலாடை தொழிற்சாலை ஆகியவற்றில் மக்கள் படும் பாடுகள் இவரது கதைகளின் பாடுபொருளாகின்றன. தேநீர் இடைவேளை, புத்துமண், முறிவு ஆகிய நாவல்கள் இக்கருத்தை மெய்ப்பிக்கும் விதமாக […]
திரைப்பட இயக்குனர் புகழ் சிறப்புரை ஆற்றினார் . அப்போது அவர் “ இலக்கியமும் ,திரைப்படமும் இன்றைய கலாச்சாரத்தின் இரு கண்கள். இலக்கிய வாசிப்பு மனிதர்களை மேம்படுத்தும். சிந்தனத் தளத்தை விரிவாக்கும். வாசிப்பதும் எழுதுவதும் மனிதனை மேம்படுத்தும் முயற்சிகள் “ என்று குறிப்பிட்டார். திருப்பூரியம் என்றத் தலைப்பிலான திருப்பூர் வாழ் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் திருப்பூர் மையப்படைப்புகள் பற்றியக் கருத்தரங்கம் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி திருப்பூர், தமிழ் உயராய்வுத்துறை நடத்தியது 11/5/222 அன்று சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி திருப்பூரில் […]
கோ. மன்றவாணன் பேருந்தில் ஏறி அமர்ந்திருந்த நான் “…………………க்கு ஒரு டிக்கெட்” என்று சொல்லிப் பணத்தை நடத்துநரிடம் கொடுத்தேன்.. அவர் தன் விரலால் நாவின் எச்சிலைத் தொட்டுப் பயணச்சீட்டை நனைத்து என் கையில் கொடுத்தார். அதை வாங்க அருவருப்பாக இருந்தது. யார் பயணச்சீட்டுக் கேட்டாலும் எச்சில் தொட்டுத்தான் கொடுத்தார். அவற்றை வாங்கும்போது சிலர் முகம் சுழித்தனர். பலர் எந்த முகக்குறியும் காட்டாமல் வாங்கிப் பைக்குள் பத்திரப் படுத்தினர். இப்படி எச்சில் தொடுவது சில நடத்துநர்களுக்கு […]
ஜனநேசன் 3 பாண்டியன் அன்றைய அஸ்ஸாம் மாநிலமாக இருந்த ஷில்லாங்கில் இந்திய ராணுவத்தில் துணைக் கேப்டனாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு 22 வயது. ஆறடி உயரத்தில் கறுப்பாக கட்டான தேகம். களையான முகம். ஞாயிற்றுக்கிழமை அன்று பகலில் நான்கு மணி நேரம் முகாமிலிருந்து வெளியே சென்று வர அனுமதி உண்டு. அப்படி ஒரு ஞாயிற்றுக்கிழமை முகாமுக்கு வெளியே சகவீரர்களுடன் நகரின் நடுவில் அமைந்திருந்த பூங்காவிற்கு வந்தனர். கனத்து வளர்ந்து விரிந்து நிழல்பரப்பிய […]
ப. சிவகாமி ( நொயல் நடேசன் அவர்களின் ‘ பண்ணையில் ஒரு மிருகம் ‘ என்ற புதினத்திற்கு எழுதப்பட்ட முன்னுரை ) கே. டானியல், செ. கணேசலிங்கன், இளங்கீரன், நீர்வை பொன்னையன் , காவலூர் இராசதுரை, டொமினிக் ஜீவா , செ. யோகநாதன், எஸ். பொ , தெணியான், பெனடிக்ற்பாலன், என். கே. ரகுநாதன் போன்றோரின் சாதிப்பாகுபாட்டிற்கு எதிரான இலக்கிய வரிசையில் சிறந்த இடத்தைகொண்டிருப்பவர், இலங்கையைத் தாயகமாகக்கொண்டு தமிழ்நாட்டில் சிலகாலம் வாழ்ந்து , பலவருடங்களாக […]
கடல்புத்திரன் ஜீவாவிற்கு அம்மாவையும் , அப்பாவையும் இந்த நாட்டுக்கு எடுத்த பிறகு சாதனை புரிந்தது போல இருக்கிறது . மனதில் நிம்மதி பூக்கத்தான் செய்தது . ஆனால் , கிராமத்தைப் போல வருமா ? . பழக்கப்படாத கட்டடக்காடாக விரியும் , செயற்கையாகப் படைக்கப்பட்ட நகரை நினைத்தால் பயமாக இருக்கிறது . சாலைகளில் பொறுமையில்லாமல் ஓடும் வாகனங்களினால் முதியவர்களே அதிகமாக உதிர்கிறார்கள் . அங்கே இயற்கை இவர்களைஅரவணத்துக் கொள்கிறது . இங்கே இல்லை . […]
ஆ. ஸ்டாலின் சகாயராஜ். திருத்தாத தவறு வருந்தாத நினைவு விரும்பாத மனது வினை செய்த பழக்கம் அளவொன்றை மீறி வடிகாலை தாண்டி நனைத்த இடமெல்லாம் நேரம் என்னை மறக்க செய்து கொண்டிருந்தது நான் விழித்து கொண்டிருந்தாலும் அங்கே வழுக்கும் நிகழ்கால உணர்வுகளுடன் கமுக்கமாய்
பின்னூட்டங்கள்