ஆர் சீனிவாசன் “சீக்கரம் கிளம்பு. நேரமில்லை. இன்னும் கொஞ்சநேரத்துல ஞால ஹைபெர்வேல நெரிசல் அதிகமாயிடும்” சக்திவடிவேல் அலரிடம் சொன்னான். மெதுவாக ஜன்னலுக்கு வெளியே நிலவை பார்த்து கொண்டிருந்தாள் அலர். செயற்கை லாந்தர்களின் ஒளியில் நிலவொளி மறந்து போன காலம் அது. வெட்ட வெளியில் பூர்ண நிலவின் ஒளியில் உலகை பார்க்கும் சிறு இன்பம் மிக குறைவானவர்களுக்கு மட்டும்தான் வசீகரமாக இருந்தது. மெதுவாக மெல்லிய குரலில் “விட்டுட்டு போக மனசே இல்லை” என்றாள். “எனக்கும் தான்… ஆனா வேற […]
வசந்ததீபன் உயிருக்குள் உயிர் என்றாய் உடலின் பாதி என்றாய் உதிர்த்த இறகாக்கி நீ பறந்தாய் அவரவர்க்கு அவரது நியாயம் எனக்கும் இருக்கிறது உனக்கும் உள்ளது அறம் குறித்தோ அவகாசமில்லை சிறு நாவாய் அசைந்து போகிறது நீர்ப்பாலை விரிந்து கிடக்க கரை தொடும் ஏக்கம் கொடுங்காற்றாய் வீசுகிறது காற்றில் கண்ணீர் வாசம் இறக்கை முளைக்காத புறாக்குஞ்சுகளின் ரத்தக்கவிச்சியில் நனைந்தபாடல் கடந்து செல்ல… மிதந்து செல்கின்றன வார்த்தைகள் கனிந்து உதிரப்போகிறது வாழ்க்கை உயிர்காற்றே என்னோடு சற்று பேசிவிடு நீந்திப் போகிறேன் […]
சுலோச்சனா அருண் சென்ற ஞாயிற்றுக்கிழமை 13-10-2024 அன்று கிராமத்து வதனம் தமிழ் பெண்கள் பண்பாட்டு மையத்தின் ஆசிரியர் குழுவினரால் வெளியிடப்படும் காலாண்டுச் சஞ்சிகையான வதனம் இதழின் ‘கனடாச் சிறப்பிதழ்’ ரொறன்ரோ 925 அல்பியன் வீதியில் உள்ள சமூகமையத்தில் வெளியிட்டு வைக்கப் பெற்றது. ‘பெண்கள், மற்றும் இளைய தலைமுறையினர் எழுதும் சமையற் குறிப்புகள், எமது பாரம்பரிய விளையாட்டுகள், உணவு வகைகள், பயணக்கட்டுரைகள், தாங்கள் பிறந்த மண் பற்றிய ஆக்கங்கள், கவிதைகள், சிறுகதைகள் மற்றும் தாயகம், கனடா பற்றிய செய்திகள் […]
வசந்ததீபன் வானத்தில் மிதக்கிறது குளத்தில் மிதக்கிறது என் கனவிலும் மிதக்கிறது நிலா மயிர் நீப்பின் உயிர் வாழா கவரிமான் இலக்கியம் புனைவானது கண்காணிப்பு காமிரா வருபவர்களை கண்டுபிடிக்கணும் அவள் மீது அவன் கண்காணிக்கிறான் காகிதத்தில் எழுதி மகிழ்கிறான் 500 கோடி ஆயிரம் கோடி அடித்து வெளியே எறிந்தபடியே இருந்தேன் அந்த கரப்பான்பூச்சி வந்தபடி இருந்தது தனியனான என்னோடு இருக்கட்டுமென விட்டுவிட்டேன் இருளைக் குடித்தது ஒளியாய் உருவெடுத்தது தீபத்தின் சுடர் தெருவோரத்தில் உட்காருகிறான் இந்த நாட்டுக் குடிமகன் வீடற்ற […]
வசந்ததீபன் பிச்சைப் பாத்திரம் ஏந்தித் திரிகிறான் வீடுகளெல்லாம் மூடப்பட்டிருக்கின்றன புத்தன் அலுக்காமல் அலைகிறான் பொம்மைகளிடம் பேசக் கற்றுக் கொண்டேன் குழந்தைகளிடம் பாடக் கற்றுக் கொண்டேன் கண்ணாடியிடம் சிரிக்கக் கற்றுக்கொண்டேன் கவிதைகள் பூக்கின்றன பூக்கள் பூக்கின்றன ஈர இதயம் போர்க்களம் பூக்களம் பாக்களம் மன்னிப்பதா ? தண்டிப்பதா ? மனசைக் கேட்டுச் சொல்கிறேன் புனைவுகளால் நெய்யப்பட்டது என் உள்ளம் அதிர்வுகளை தாங்காது எழுப்பிடும் சப்தம் கனவுகளையே ஜனித்துக் கொண்டிருக்கிறது குமிழியிட்டுக் கொண்டிருக்கிறது நின்றபாடில்லை தூர்ந்து போன கிணறு.
ரவி அல்லது மேகத்தைப்போர்த்தியபொழுதினில்பெய்திட்ட மழையின்எஞ்சிய துளிகளால்வெள்ளக் காடானாதுபூமிநடக்கும் மரங்களால். -ரவி அல்லது.ravialladhu@gmail.com
சசிகலா விஸ்வநாதன் அடைக்கலம் என்று வந்தோர் அனைவரும் அவனை அடைந்து அவலம் நீத்தார். அவர் தகுதி நோக்கான்; அன்பினால் தன் தகுதி ஒன்றே தேறுவான் படகோட்டும் குகனும், சுக்ரீவ ராசனும், அசுர விபீடணும், ஒன்றே;அந்தப் பரமார்த்த பரபிரும்மத்திற்கு. சிரக்கம்பம் வைத்து இறைஞ்சிய பாஞ்சாலியும், ஒன்றுமே கேளாத வறியவன் குசேலனும் கண்ணன் கண்ணுக்கு ஒன்றே நிகர். பக்த அம்பரீசனும், பிரஹலாத சிறுவனும், உத்தவனும், விதுரனும், வீட்டுமனும்,அவன் கழலே நிழல் என்ற கொண்டு வென்றார் பரமபதம்.
பாலன் ராமநாதன் “என்ன மாமா கோயில் திருவிழா நெருங்குது ஊர் கூட்டம் போடலாம்ல”என்றான் கணேசன் ஊர்ல நல்லது கெட்டது எல்லாத்துலயும் முதல் ஆளா நிக்கிறவன் கணேசன் . “சீக்கிரமா போற்றுவோம் மருமகனே” என்றார் துரைப்பாண்டி .துரைப்பாண்டி ஊர் தலைவர் நல்ல மனிதர் பணம் காசு இல்லாட்டாலும் ஊர் மீது பற்று கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர். 25 வருடத்துக்கு முன்னாடி நடந்த கம்மா விறகு வெட்டின பிரச்சனையில் ஊருக்காக கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு சென்ற வேல்சாமியோடு பையன் அப்பாவைப் […]
கங்காதரன் சுப்ரமணியம் நான் ரொம்ப நாளாக நினைத்துக் கொண்டிருக்கிறேன் கிரிவலம் போக வேண்டுமென்று. ரொம்ப நாளாக என்றால், கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேலாக. போய் அருணாச்சலேஸ்வரனையும், உண்ணாமலையையும் தரிசித்து விட்டு வர வேண்டும் என்று ஆசை. என்ன காரணமோ தெரியவில்லை, தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. எல்லாவற்றிற்கும் வேளை வர வேண்டுமே? ஐந்து வருடங்களுக்கு முன், ஒரு சித்ராபவுர்ணமியன்று கிரிவலம் போய் வந்த என் நண்பர், அந்த அனுபவத்தை மெய்சிலிர்ப்புடன் விவரித்திருந்தார். அந்த மலை முழுக்க நிலவொளியில் ஜொலித்து, […]
சொற்கீரன் என்னைச்சுற்றிக்கொண்டுஇருக்கிறது.ஆனால் என் உள்ளெலும்புகளைஇன்னும் முறிக்கவில்லை.எனக்குள் ஊர்கிறது.என் மூளைச்செதில்களிலுமாஅது பொந்து வைக்கும்?உள்ளிருந்து ஊசிக்குருவிகளைசிறகடிக்கச்செய்கிறது.என் ஒவ்வொரு மயிர்க்கண்களிலும்வெர்ச்சுவல் பிம்பங்களைசமைத்துக்கொட்டுகிறது.சிந்தனைப்பசிக்குசோறு போடஇந்த ஆயிரம்பேரலல் யுனிவெர்ஸ் தியரியால்முடியுமா?விஞ்ஞானத்தின் பசியேவிஞ்ஞானத்துக்கு உணவு.ஆனால்இந்த அனக்கொண்டாஎன்னை இன்னும் விழுங்கவில்லை.விழுங்க முடியாதுஅதனுடைய இரையாகஇருப்பது போய்என்னுடைய இரையேஇப்போது இது தான்.அறிவுக்குஆயிரம் திசைகளிலும்வேர்!