மல்லிகை    ஜீவாவுக்கு   எதிர்வரும்   27  ஆம் திகதி 88 வயது பிறக்கிறது

மல்லிகை ஜீவாவுக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி 88 வயது பிறக்கிறது

முருகபூபதி இலங்கையின் மூத்த எழுத்தாளரும் 45 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து மல்லிகை கலை, இலக்கிய மாத இதழை வெளியிட்ட அதன் ஆசிரியருமான டொமினிக்ஜீவாவுக்கு எதிர்வரும் ஜூன் 27 ஆம் திகதி 88 வயது பிறக்கிறது. 1927 ஆம் ஆண்டு ஜூன் மாதம்…

ஏன் என்னை வென்றாய் அத்தியாயம்- 2

ஏன் என்னை வென்றாய் அத்தியாயம்- 2 சிவக்குமார் அசோகன் மேனேஜர் அறையில் வசந்தி சீரியஸான முகத்துடன் பேசிக் கொண்டிருப்பதையும், மேனேஜர் ரெங்கராஜன் மெளனமாகக் கேட்டுக் கொண்டிருப்பதையும் பார்த்த போது குருவுக்கு சற்று கோபம் வந்தது. 'இவள் என்ன லூஸா? ஸ்கூல் பிள்ளை…

துவாரகா சாமிநாதன் கவிதைகள்

துவாரகா சாமிநாதன் என் வீட்டு கண்ணாடி என் வீட்டின் பின்புறம் 108 வாகனத்தின் ஓயாத அழுகை தெருவின் திருமண மண்டபத்தில் மகிழ்வும் எதிர் வீட்டின் துக்க அனுசரிப்பும் வாழ்வின் சித்திரங்களாக வரைந்து காட்டியது என் வீட்டு கண்ணாடி வாழ்வின் உள்ளீடுகளில் வரைகோடுகளின்…

உறக்கம்

நிஷாந்தன் தூங்காமல் அடம் பிடித்து அழுத குழந்தையிடம் கொடுத்தேன் பொம்மை ஒன்றை. சமாதானமடைந்த குழந்தை உறங்கத் தொடங்கியது. பொம்மை மட்டும் விழித்திருந்தது தனியாக.
துபாயில் எமிரேட்ஸ் தமிழ்ப் பள்ளிக்கூட இரண்டாம் ஆண்டு விழா

துபாயில் எமிரேட்ஸ் தமிழ்ப் பள்ளிக்கூட இரண்டாம் ஆண்டு விழா

துபாய் : துபாயில் எமிரேட்ஸ் தமிழ்ப் பள்ளிக்கூடத்தின் இரண்டாம் ஆண்டு விழா ஜூன் 6ம் தேதி மாலை வெகு விமரிசையாக நடைபெற்றது. துவக்கமாக எமிரேட்ஸ் தமிழ்ப் பள்ளிக்கூடத்தின் மாணவர்கள் அனைவரும் சேர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். எமிரேட்ஸ் தமிழ்ப் பள்ளிக்கூட துணை…

மையல்

ஸ்வரூப் மணிகண்டன்  தேய்பிறை நிலவில் எரிகின்றது காடு. நிலவெரித்த மிச்சத்தை சேர்த்து வைக்கும் எனது முயற்சிகளை முடிபோட்டுத் திரிகொளுத்துகிறது உன் அருகாமை. காட்டில் தொலைவதற்கும் காடே தொலைவதற்கும் உள்ள வேறுபாட்டை யோசிக்க விடாமல் தற்பொழுதில் நின்று திரிகிறது காலம்.

பிரான்சு கம்பன் கழக மகளிர் விழா அழைப்பிதழ்

மகளிர் விழா அழைப்பிதழ் அன்புடையீர்! அருந்தமிழ்ப் பற்றுடையீர் வணக்கம்! பிரான்சு கம்பன் கழக மகளிரணி நடத்துகின்ற ஐந்தாம் ஆண்டு மகளிர் விழாவுக்கு உறவுகளுடனும் நண்பர்களுடனும் வருகைதந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.  நாள்: 29.06.2014 ஞாயிற்றுக் கிழமை 15.00 முதல் 20.00 வரை இடம்: L'Espace Associatif des Doucettes, rue  du Tiers Pot (à côté Collège Henri Wallon 95140 Garges les Gonesse அன்புடன் திருமதி சிமோன் இராசேசுவரி தலைவர்: கம்பன் கழக மகளிரணி திருமதி ஆதிலட்சுமி வேணுகோபால் செயலாளர்: கம்பன் கழக மகளிரணி திருமதி லெபோ லூசியா பொருளாளர்: கம்பன் கழக மகளிரணி மற்றும்…

மறுவாசிப்பில் தி. ஜானகிராமன்..

அன்புடையீர் வணக்கம்.. நலனே விளைய வேண்டுகிறேன்..   28,06,2014 அன்று மாலை 06.30. மணிக்கு இலக்கியவீதியின்,   இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில்-   மறுவாசிப்பில் தி. ஜானகிராமன்..   தலைமை: திரைப்பட இயக்குநர் திரு ஞான, ராஜசேகரன். இ.ஆ.ப.  …

தீட்சை

ரவிசந்திரன் கவிதை கேட்டேன் காதல் தந்தாய் காதல் கேட்டேன் காமம் தந்தாய் கல்வி கேட்டேன் காசு தந்தாய் காசு கேட்டேன் கஷ்டம் தந்தாய் நிம்மதி கேட்டேன் உன்மத்தம் தந்தாய் வேகம் கேட்டேன் நிதானம் தந்தாய் தானம் கேட்டேன் சந்தானம் தந்தாய் மொழி…