குருசு.சாக்ரடீஸ் பிரார்த்தனைகூடத்தின் பாடல் அலையில் போன்சாய்களாய் உருமாறும் கன்னியாஸ்திரிகள் ரோமபுரியின் கனவில் வார்த்தெடுக்கப்பட்ட போன்சாய்களின் பாடல் திணறும் சுவாசத்தில் உயிர்க்கின்றன பறவைகள் போன்சாய்கள் முணுமுணுக்கும் வெதுவெதுப்பான காலையை வரவேற்க காத்திருக்கின்றன போக்கிடமற்ற பறவைகள் பிரார்த்தனைக்கான பாடல்கள் கை தவறிய நாணயத்தைப் போல கூடத்தில் உருள்கின்றன வெளியேறும் வழியற்ற உலகத்தின் அறைக்குள் தண்ணீர் சிற்பங்களை செதுக்கும் போன்சாய்கள் திராட்சை ரசத்தில் கரைக்கின்றன ஹிருதயங்களை பெருமூச்சில் கருத்தரிக்கின்றன பூக்கின்றன வண்ணத்துபூச்சிகள் அமர இலை விரிக்கின்றன கனவுகளை குவளையில் பருக தருகின்றன […]
மதியழகன் சுப்பையா காஞ்சிபுரம் இலக்கியக்களம் அமைப்பு சார்பாக வழக்கு எண் 18/9 திரைப்பட விமர்சனக் கூட்டம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த்து. இதில் இப்படத்தின் இயக்குனர் பாலாஜி சக்திவேல் மற்றும் பாடலாசிரியர் நா. முத்துக்குமார் ஆகியோர் முன்னிலையில் கவிஞர் அ. வெண்ணிலா தலைமை தாங்க நான், அஜயன் பாலா மற்றும் பகலவன் ஆகியோர் வழக்கு எண் 18/9 திரைப்படம் குறித்த எங்கள் மதிப்பீடுகளை வைத்தோம். ஏற்புரையின் போது பாலாஜி சக்திவேல் குறைகளை கண்டிப்பாக திருத்திக் கொள்வதாகச் சொன்னார் மற்றும் […]
எழுதியவர்: ’கோமதி’ காலை முதல் பக்கத்து போர்ஷனில் ஏதோ தகராறு. விவரம் சரியாகப் புரியவில்லை. ஆனால், காரசாரமான விவகாரம். நான் அலுவலகம் புறப்படும் வரை தொடர்ந்ததால் எனக்குப் புறப்படவே முடியவில்லை. எப்படியாவது விவரம் அறியவேண்டும். என் மனைவியோ அவள் உண்டு அவள் வேலை உண்டு என்றிருப்பவள். எதையும் காதில் வாங்க அவளால் முடியாது. நான் வாசலில் வண்டியை புறப்படவைக்க முயன்றுகொண்டி ருந்த போது ஜகன் இரைந்துகொண்டிருந்தான். ”ஒன்று, நீ போகணும், இல்லை, நான் […]
ஆக்கம்: நடராஜா கண்ணப்பு லண்டன் “திருப்பி அனுப்பாதே ” சுலோகம் தாங்கியவர்கள் “ச்சிப்போல்” விமான நிலைய தடுப்பு முகாம் பின்பக்க தெருவில் நிறைந்து விட்டார்கள். முதலாவது மேல் மாடி யன்னலில் தெரிந்த குழந்தை கையிலேந்திய அந்தச் சோகமான தாயின் முகத்தைப் பார்த்ததும். “அவையளைத் தான் திருப்பி அனுப்பப் போறாங்களாம்” பிள்ளையோடு நிக்கும் அந்த அனுப்பப் படப் போகும் பெண்ணை அடையாளம் கண்டுவிட்டார் மூர்த்தி “என்ட மடியில் தவழ்ந்த பிள்ளை இப்ப இங்க இந்தச் சிறைக்குள்ள.” மனம் உருகி […]
மரணித்த மழலை கைவிட்ட முலைகளாய் விம்மி வலித்து கசிகிறது எனதன்பு-நீயோ அதனை கழிவறையில் பீய்ச்சியடிக்க பணிக்கிறாய் வறண்ட உன் பாலையில் ஒற்றை மலர் தேடி ஓயாமல் அலைகின்றேன்-நீயோ மனப் பிறழ்வுக்கான மருந்தொன்றை சிபாரிசு செய்கிறாய் இயந்திரத்திற்கு சிக்கிய செங்கரும்பாய் வெம்மையில் நசுங்கி வழிகிறது இரவு புயல் தின்ற முதிர்ந்த நெற்கதிரென உன் வயலெங்கும் உதிரும் எனது இருப்பு … செ.சுஜாதா, பெங்களூர்.
திருப்பூர் மத்திய அரிமா சங்கம் ஆண்டுதோறும் அரிமா சுதாமா கோபாலகிருஸ்ணன் வழங்கும் குறும்பட விருதுகள், சக்தி விருதுகளைத் தந்து வருகிறது. இவ்வாண்டு பரிசு பெற்றோர் பட்டியல் கீழே தரப்பட்டிருக்கிறது. பரிசளிப்பு விழா :.18/6/2012 மாலை 6 மணி, மத்திய அரிமா சங்கக் கட்டிடம், ஸ்டேட் பாங்க் காலனி, காந்தி நகர், திருப்பூரில் நடைபெற உள்ளது. . . * சுதாமா கோபாலகிருஸ்ணன் வழங்கும் அரிமா குறும்பட விருது 2012 ============================================================ பெறுவோர்: 1.ச.பாலமுருகன் , கோவை ( […]
அன்புடன் தோழர்களுக்கு வணக்கம் எழுத்து பதிப்பகத்தின் தலித் வரலாற்று நூல் வரிசை விமர்சன கூட்டம் ராணிபேட்டை, சென்னை, மதுரை,சிவகங்கை, சேலம், புதுச்சேரி, திருச்சி, கும்பகோணம், போளூர், காரைக்குடி, திருவொற்றியூர் இலங்கையில் ஹட்டன், கண்டி, யாழ்ப்பாணம், கொழும்பு நகர்களைத் தொடர்ந்து ஆரணியில் எதிர்வரும் 16 -06 -12 அன்று நிகழவிருக்கும் விமர்சன கூட்டத்திற்கு உங்களை அன்புடன் பங்கேற்க அழைக்கிறோம். நண்பர்களுக்கும் நிகழ்வை குறித்த தகவல்களை பகிர்ந்துகொள்ளவும்.
அர.வெங்கடாசலம் (விளம்பரக் கட்டுரை) என் நண்பன் மிகவும் கொதித்துப் போயிருந்தான். ”எவ்வளவு தூரம் அவனை நம்பி இருந்தேன். இப்படிச்செய்துவிட்டானே. அவனுடைய அப்பா அம்மா எல்லாம் எவ்வளவு நல்லவர்கள். அவர்களுக்குப்போய் இப்படிப்பட்ட ஒரு பிள்ளையா? நம்ப வைத்துக் கழுத்தை அறுத்துவிட்டானே.” என்றெல்லாம் மற்றொரு நண்பனைப் பற்றிப் பேசிக்கொண்டு வந்தான் அவன். “எனக்கொரு சந்தேகம் அவன் உண்மையில் அத்தாய் தந்தையருக்குப் பிறந்தவனா அல்லது ஏதாவது தத்து எடுத்த பிள்ளையா?” அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த என்னை அவன் கேட்ட கேள்வி தூக்கி வாரிப்போட்டது. […]
டிவிஆர் ஷெனாய் ஒரு அரசனக்கு தனது செல்ல பிராணியாக இருந்த குரங்கு மீது மிகவும் பிரியம். அந்த செல்ல குரங்கை தனக்கு மெய்க்காப்பாளனாக நியமித்தான். ஒரு நாள் அரசன் தூங்கிகொண்டிருக்கும்போது ஒரு ஈ அரசனை சுற்றி பறந்துகொண்டிருந்தது. குரங்கால் அந்த ஈயை அடித்து விரட்ட முடியவில்லை. ஆகவே அந்த குரங்கு அருகிலிருந்த வாளை எடுத்து பளேர் பளேரென்று ஈயை அடித்து துரத்தியது. ஈ தப்பிவிட்டது. தூங்கும் அரசன் தப்பவில்லை. விஷ்ணுசர்மன் ந்ரிபசேவகவானரா- கதையை இவ்வாறு முடிக்கிறார். “நீண்டநாள் […]
ஜே கோபிகிருஷ்ணன் கேரளாவில் பிறந்து கேரளாவிலேயே கடந்த 37வருடங்களாக வாழ்ந்து வரும் எனக்கு, கேரளாவை யாரேனும் “கடவுளின் சொந்த நாடு” என்று சொன்னால், சிரிக்கத்தான் தோன்றுகிறது. இப்பத்த்தான் விளம்பர வார்த்தைகள் நம் மனதுக்குள் ஊடுருவி, ஆக்கிரமித்து, ஆள ஆரம்பித்துவிடுகின்றன. இந்த விளம்பர வாசகம், கேரளா சுற்றுலாத்துறையின் விளம்பர வாசகமாக 15 வருடங்களுக்கு முன்னால் உபயோகப்படுத்தப்பட்டது. இதனை உருவாக்கியவர் கேரளா கேடரைச் சேர்ந்த உத்தரபிரதேச ஐஏஎஸ் ஆபீஸர். அவரது பெயர் அமிதாப்காந்த். மலையாளிகளான நாங்கள், எங்களுக்கு கொடுக்கும் ஒவ்வொரு […]