அருண் காந்தி ஆத்தா…ஆத்தோவ்…ஓவ்…என்னடீ…? எலி என்னத்தையோ கரண்டுது பாரு… இந்த எலிப் பண்ணையள என்னவன்றதுனே தெரியலடீ.குருதுதெல்லாம் வேற மொட்டயாக் கெடக்குறது அதுகளுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டமாக் கெடக்கு. நானும் எவள நாளாத்தான் உனக்கிட்ட எலிப்பொறி வக்கச் சொல்லிக்கிட்டு இருக்கேன்.கேக்குறியா நீ? யேட்டி!யேட்டியோவ்…வாணி… ஓவ்…என்ன த்தா… ? அங்குன யாரு மீனுக்காரனா போறான்? இல்லத்தா கூனிப்பொடி..நிக்கச் சொல்லவா? அடிப் போடி!”அவன் நால அள்ளிப் போட்டு 10 ருவா ம்பான்…சின்னப்பய கடத்தெருவுக்கு பொய்த்து வரும்போது வாங்கிட்டு வரச் […]
ப.பார்த்தசாரதி படுபயங்கரமான சாலை விபத்தொன்றில் காலும் கையும் துண்டாய் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பாதி மயங்கிய நிலையில் நசுங்கிய உடல் பிரிந்த கைகளை வேறொருவன் சாக்குப் பையில் போட அனைத்திலும் அவன் பார்வை பட காலன் வரும் ஒலியாய் ஆம்புலென்ஸ் ஒலியெழுப்ப காலத்தாமதமில்லா சிகிச்சையில் உயிர் பிழைத்த ஒருவனின் வாழ்க்கை பாதையை ஏதோ ஒன்று விளிம்பிலிருந்து நெடுந்தூரமாய் நீட்டிக்கிறது தள்ளாடியபடி பயணிக்க.
கோவை புதியவன் ஏர் பஸ் வெளிச்சத்தில் இருட்டாகிப் போனது ஏழையின் பயணம் அப்பாவின் புகையில் மூச்சுத் திணறியது பீடி சுற்றும் மகளின் வாழ்க்கை கதாநாயகன் கட்-அவுட்டுக்கு ஊற்றிய பாலில் வழிந்தோடியது ரசிகனின் முட்டாள்தனம் வாசலில் பிச்சைக்காரன் வயிறு நிரம்பியது கோவில் உண்டியலுக்கு சாதிக்க மலையேறியபின் சறுக்கி விழுந்தது பயம் மட்டுமே. thendral_venkatguru@yahoo.co.in
(1207 -1273) ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நேற்றிரவு என் குருநாதர் போதித்த அறிவுரை இது : வறுமைப் பாடத்தைப் பற்றியது எதுவுமே ஒருவருக் கில்லாமை ! எதன் மீதும் இச்சை கொள்ளாமை ! நான் அமணமாய் நிற்கிறேன் ரூபிக் கற்கள் நிரம்பிய சுரங்கத்தின் உள்ளே செந்திறப் பட்டு உடுத்தி ! மினு மினுப்பு மழுங்கிப் போனது கடலைக் காண்கிறேன் இப்போது ! ஓரே கணத்தில் நேரும் நகர்ச்சிகள் […]
பூப்போலத் தூங்குமென்னை பூகம்பமாய் எழுப்பியது… இன்று போய் நாளை வாருங்களென்றே என் உறக்கத்தை உடுத்திக் கொண்டேன். தூக்கத்திலே மொட்டுவிட்ட வரிகள் அதிகாலையில் துகிலுரித்துக் கிடந்தன வெந்நீரில் விழுந்து விட்ட கிருமியாய் சொற்கள் கரைந்தே போயின வெள்ளம்போல் பொங்கி வந்த பாட்டு விடிந்ததும் வடியக் கண்டேன் வெங்காயம் போல் உரித்து வந்த கற்பனை வெந்தயம் போல் கசக்கக் கண்டேன் பசுமையிலே ஓரிரவு பறிபோனாலும் இன்பா நளினமாய் வருவதை இப்போதெல்லாம் நசுக்கிடாமல் பேனாமுட்களில் கோர்த்துக் கொள்கிறேன் பொங்கிவரும் கவிதை பொசுங்கிவிடாமல்…
ஊனத்தின் நிழல் படிந்த மங்கலான இடத்தில் எழுதப்பட்டுள்ளது, எனக்கான கேள்விகள் ஆனால்? விடைஎழுத யார்யாரோ! ஒளிபுக முடியாத ஒரு இருள் பேழைக்குள் அடைக்கப்பட்டுள்ளுது எனது பகல்கள்! வியர்க்காத ஒரு மனிதனின்ஊனில் மாட்டிக்கொண்டுள்ளது என்னது தாகத்தின் தண்ணீர்! ஏனோ? சலித்து போகாத எனது விடைத்தாள்களில் மட்டும் எப்போதும் பிழைதிருத்தம்!
சென்னை புத்தகக் கண்காட்சி கடை எண் : 119 ‘கறுப்பு பிரதிகள்’ பதிப்பகத்தோடு வல்லினமும் இணைந்து மலேசிய படைப்பிலக்கியங்களை தமிழகத்திற்கு அறிமுகம் செய்யும் திட்டத்தை முதலில் வகுத்துக்கொடுத்தவர் ஷோபா சக்திதான். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இத்திட்டம் குறித்து தோழர் நீலகண்டனிடம் பேசியபோது அவரும் உற்சாகமாக ஆமோதித்தார். முதலில் சீ. முத்துசாமியின் சிறுகதை தொகுப்பை வெளிகொணர்வதென முடிவானது. அதற்கான அடிப்படை வேலைகளையெல்லாம் செய்துமுடித்துவிட்ட நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் அத்திட்டம் கைவிடப்பட்டது. கடந்த ஆண்டு தமிழகப்பயணத்தின் போது தோழர் […]
நேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு கதை, கட்டுரை, குறும்பட போட்டி்கள் புத்தாண்டில் முதல் முயற்சியாக புற்றுநோய்விழிப்புணர்வு குறித்த இந்த போட்டிகளுடன் நேசம் தன் பணியை துவங்குகிறது. மார்பகம், கர்ப்பபைவாய், ரத்தம், எலும்பு, நரம்பு, தொண்டை, நுரையீரல் என்று உடம்பில் எந்த பாகத்திலும் புற்றுநோய் வரலாம். இதை கண்டறிவது என்பது கொஞ்சம் சிரமமான காரியம் என்றாலும் சில சோதனை அல்லது அறிகுறிகள் மூலம் ஸ்க்ரீனிங் எனப்படும் புற்றுநோய்கண்டறிதல் சோதனையை செய்வது நல்லது. 40 வயதுக்கு மேல் […]
_____ குருசு.சாக்ரடீஸ் நேற்று பெய்தது பாலைவனத்து மழை விரட்டி சேகரிக்கிறது என் பால்யம் சிரட்டையில் நிரம்புகிறது மழை ஏக்கத்தில் ததும்பும் துளிகளாய் நீ கொண்டுதந்த ஈரத்தில் வெக்கையின் உதிர்ந்த சிறகுகள் பூப்பெய்திய பெண்ணின் தொடக்க பருவத்திலிருக்கிறது பாலை நான் புரண்ட மணல்வெளிகளில் ஈரம் தருவித்த பெண்ணின் வாசம் வந்துபோன தடங்களற்ற பாலைமழையை கொண்டாட நீ அனுப்பி தந்த பைரிகள் உச்சந்தலையை கொத்துகின்றன தப்பித்தோடும் மணல்வெளியில் தனிமையின் கதவுகளை என் மரணத்தின் முன் தட்டுவேன் அது தன் முகங்களை […]
ஏக்கக்கண்கள் விளையாட்டுப் பொருட்களின் மீதே அம்மாவின் தோள்களில் கனவைச் சுமந்துகொண்டே ஊமையாகிறாள் ரத்தம் கசியும் தொடையின் கிள்ளலுக்கு அஞ்சியபடியே குழந்தை கோ.புண்ணியவான் Ko.punniavan@gmail.com