வரலாறும் நமது அடையாளங்களும் பற்றி ஜோ டி குருஸ் உரை
ஆட்சியாளர்கள் நமது சமூக அமைப்பை வெகு வேகமாக பாசிசத்தை நோக்கி கொண்டு சென்று கொண்டுருக்கிறார்கள் வரலாற்றில் ஹிட்லர் , முசோலினி, ஸ்டாலின், லெனின், காஸ்ட்ரோ, மாசேதுங் , அயோதல்லா கோமனி ஆகியோர் தங்கள் நாடுகளில் நிலை நாட்டிய பாசிசத்தின் ஐந்து முக்கிய கூறுகள் இருந்தன. ஓன்று மிதமிஞ்சிய தேசிய வெறிவாதம், இரண்டு நாடளுமன்றங்கள் அரட்டை அரங்கங்களாக குறைக்கப்படுவது. மூன்று அரசின் தாளத்திற்கு ஏற்ற வகையில் ராகம் போடும் நீதி அமைப்பை உருவாக்குவது. நான்கு , தொழிற்சங்கங்கள் போன்ற […]
வினாத்தொகுப்பு : பாரதி இளவேனில் {அன்பாதவன்} { மூன்றாம் பகுதி } ஆசிரியப் பணியில் மறக்கஇயலா சம்பவங்கள் —————? முப்பத்தெட்டாண்டு பணி குறித்து நிறையவே பேச வேண்டு ம். இடைநிலை ஆசிரியனா கப் பணியேற்ற எனக்கு உடனேயே பள்ளியில் இலக்கிய மன்றத் தலைவர் பொறுப்பும் ஆசிரியர் இயக்கப் பொறுப்பும் கிடைத்தன. ஆசிரியர் இயக்கத்தில் கொண்ட ஈடுபாடு மாநில இயக்கப் பொறுப்பாளர்கள் என்னை அறியவும் மதுரை, கோவை, சென்னை,ஆகிய நகரங்களில் நடைபெற்ற மாநில மாநாடுகளுக்கு மிதிவண்டியில் செல்லவும் வழிவகுத்தது. […]
நண்பர்களே, ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, மா. அரங்கநாதன் போன்ற தமிழின் தவிர்க்க முடியாத இலக்கிய ஆளுமைகளை கவிஞர் & ஆவணப்பட இயக்குனர் என பன்முகங்களைக் கொண்ட ரவிசுப்ரமணியன் அவர்கள் ஆவணப்படுத்தியுள்ளார். என்னிடம் ஜெயகாந்தன் ஆவணப்படத்தை பல நூற்றுக்கணக்கான வாசகர்கள் கேட்டுக் கொண்டே இருக்கின்றனர். இந்த மூன்று ஆளுமைகளின் ஆவணப்படத்தையும் ரவிசுப்ரமணியன் தன்னுடைய இணையத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த மூன்று ஆவணப்படங்களையும் நான் பொக்கிஷம் என்றே சொல்வேன். இந்த ஆவணப்படங்களை இலவசமாக ரவிசுப்ரமணியன் அவர்கள் இணையத்தில் பார்க்கலாம். எனவே இனியும் […]
அன்பு திண்ணை ஆசிரியருக்கும் வாசகருக்கும் வணக்கம். திண்ணை இணைய தளத்தில் வெளியான என் படைப்புகளையும் அச்சில் வந்த பிற படைப்புகளையும் tamilwritersathyanandhan.wordpress.com என்னும் வலைத் தளத்தில் வலையேற்றம் செய்திருக்கிறேன். வாசித்து உற்சாகம் தர வேண்டுகிறேன். நன்றி சத்யானந்தன்.
28. “அம்மாவும் ஜெகதீசனும் இடைக்குல பெண்மணி ஜெகதாம்பாள் பாதுகாப்பில் இருக்கிறார்கள்; அவர்களிருவரையும் அதிக நேரம் அந்நியபெண்மணியின் பொறுப்பில் விட்டு வைப்பதும் நல்லதல்ல. இன்னொருமுறை வருகிறேன். சாவகாசமாக உன்னிடம் சம்பாஷிக்க விஷயங்கள் இருக்கின்றன”, எனக்கூறி சித்ராங்கி செண்பகத்திடம் விடைபெற்றாள். – இதோ பக்கத்தில்தானே இருக்கிறீர்கள், ஒரு வண்டியை அனுப்பி அழைத்துவர ஏற்பாடு செய்யட்டுமா, என்ற சேடியின் வற்புறுத்தலுக்கு சித்ராங்கி கூறிய சமாதானம் அவளுக்கு நியாயமானதாகத் தோன்றியிருக்குமாவென்கிற அக்கைறையின்றி புறப்பட்டாள். வண்டிக்காரன் மாடுகளை இழுத்துப்பிடித்து, நாக்கில் சொடுக்குப்போட்டு ஏர்காலிலிருந்து சித்ராங்கின் […]
ரியாத் தமிழ்ச்சங்கத்தின் ஏழாண்டு நிறைவை முன்னிட்டு பாலையில் தமிழ்மாலை என்னும் விழா கடந்த 11.05.2012 அன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்தியத் தூதரகத்தின் திட்டப்பணி உதவி தலைவர் (DCM) திரு, மனோகர் ராம், மன்னர் சவூத் பல்கலைகழகத்தில் பணியாற்றும் தமிழ் விஞ்ஞானி பேராசிரியர். மாசிலாமணி ஆகியோர் முன்னிலை வகித்த இவ்விழாவில், இந்தநாள் இனியநாள் புகழ் பேச்சாளர் கலைமாமணி சுகி.சிவம், மனோதத்துவப் பேராசிரியர் முனைவர் அப்துல்லாஹ் (பெரியோன்தாசன்) ஆகியோர் சிறப்பு சொற்பொழிவாளர்களாகப் பங்கேற்று நகைச்சுவையுடன் நன்னெறிக் கருத்துகளைக் கூறிச் சிறப்பித்தனர். […]
அன்புமிக்க திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். இத்துடன் நேர்காணல் இதழ் ஐந்து வெளியீட்டு விழாவும் ஓவியர் கிருஷ்ணமுர்த்தி அவர்களுக்குப் பாராட்டு விழாவும் பற்றிய அழைப்பிதழ் அனுப்பியுள்ளேன். திண்ணை இணைய இதழில் வெளியிட வேண்டுகிறேன். அன்புடன், அய்யனார்
கோமதி நடராஜன் உடல்வலிமையும் ,மனவலிமையும், நிறைந்திருந்த நாளில், பூமியில் பதிந்த, மலையைப் பெயர்த்துத் தரச்சொன்னார், நெம்பி எடுத்துத் தந்தேன். வேரோடியிருந்த , மரத்தைப் ,பிடுங்கித் தரச் சொன்னார், கிள்ளி எடுத்துக் கொடுத்தேன். மனமும் சோர்ந்த , உடலும் களைத்த , இன்று தரையில் கிடந்த ஊசியைக் கேட்டார், ”ஊசிதானே ,உன்னால் ஆகாதா ”என்றேன் மலையையும் மறந்தார் மரத்தையும் மறந்தார் ”உன்னால் ஒரு பிரயோசனமில்லை” என்றவாறு அகன்றார்.
அன்புடையீர் வணக்கம் கூத்து மகத்தான கலை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தொன்மையும் பழமையும் வாய்ந்தது மாத்திரமல்ல,அது நமது ஒப்பற்ற பண்பாட்டு அடையாளமுமாகும். மனிதனுக்கு மண் அளித்த மாபெருங்கொடையென்று இதைச் சொல்லலாம். மலிந்து பெருகிவரும் நுகர்வுக் கலாச்சாரம் கூத்து, பாவைக்கூத்து, கட்டபொம்மலாட்டம் இன்னும் பிறவுள்ள தொல்கலைகளை நிர்மூலமாக்கி வருவது கண்கூடு. இருப்பினும் நுண்கலைகளின்தாய்வடிவம் அவற்றில்தான் கற்சிற்பமாய் உயிர்ப்புடன் வீற்றிருக்கிறது என்பது தெளிவு.மரபார்ந்த தொல்கலைக்ககூறுகளிலிருந்து நசிந்துவிட்ட நிகழ்கால வாழ்மானங்களை ஆற்றுப்படுத்திக்கொள்வதுடன், சக உயிர்களின் மீதான கரிசனத்தையும், அக்கறையையும், அதிகாரங்களுக்கு எதிரான […]