தமிழ் இலக்கிய ஆளுமைக்கான வாழ்நாள் விருது ஜெயமோகன் எழுதிய பூமணி படைப்புகளின் விமர்சன நூல் “பூக்கும் கருவேலம் நூல்” வெளியீடு டிசம்பர் 18 ஞாயிறு மாலை 6 மணி- கீதா ஹால்,ரயில்நிலையம் எதிரில் , கோவை கலந்துகொள்ளும் ஆளுமைகள் எழுத்தாளார் ஜெயமோகன், வே.அலெக்ஸ் – அயோத்திதாசர் ஆய்வு நடுவம் எழுத்தாளார் யுவன் சந்திரசேகர், எழுத்தாளார் எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளார் நாஞ்சில்நாடன் கன்னட கவிஞர் பிரதீபா நந்தகுமார், இயக்குனர் பாரதிராஜா எழுத்தாளர் பூமணி உள்ளிட்ட ஆளுமைகள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வுக்கு […]
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ ஈரிமைகள் வழியாய் ஒழுகித் தொலைத்தக் கண்ணீர்த் துளிகளோடு முற்றுமாய் தொலைக்கப்பட்டிருக்கின்றன சில நியாபகங்கள். தூர மிளிரும் வான் நட்சத்திரங்களைப் போன்று பன்னாண்டுகள் பிந்தியும் ஈரச் சதைகளினூடே சிமிட்டிக்கொண்டிருக்கின்றன சில நியாபகங்கள் பெரு மழைக்குப் பிந்தைய தவளைகளின் குறட்டைச் சப்தங்களாய் இன்றளவும் இதயமதிறக் குமுறுகின்றன சில நியாபகங்கள் வர்ணமிறுத்தி சடுதியில் அகன்றுவிடும் வண்ணாத்திகளைப் போன்று அகன்றும் அகலா சில எண்ணங்களையிட்டு மறைகின்றன சில நியாபகங்கள் விட்ட மழைக்குப் பிந்தைய விடாதச் சாரலாய் சதா நொசநொசத்துக் கொண்டிருக்கின்றன […]
– தினேசுவரி மலேசியா பழகிப்போன பழைய முகத்தை இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் ஒப்பனைச் செய்து கொள்வது கண்ணாடியை உள்வாங்கி… முகமூடிகள் தடைவிதிக்கப்பட்டுள்ளன… ஒப்பனைகளே அக்குறையை நித்தம் நித்தம் நிவர்த்தி செய்வதால்…. இங்கு கண்களால் பேசி சிரிப்பால் கொலை செய்து மௌனத்தால் மட்டுமே கதறமுடிகிறது சிலரால்…. வாடகைக்கு வீடெடுத்து வாழ்ந்துப் பார்க்க சிலருக்கு குறைந்தப்பட்சம் ஒரு மணி நேரம்… கொப்பளித்து துப்பிவிடுவதில் இங்கு யாரும் சளைத்தவர்கள் அல்ல… துப்பி கொப்பளிப்பதிலும் கூட… […]
பெயரிடாத நட்சத்திரங்கள்”, “Mit dem Wind fliehen” ஆகிய இரு நூல்களினது அறிமுகமும் -தமிழ் சிங்கள மொழியில்- கலந்துரையாடலும் சுவிஸ் சூரிச் இல் இடம்பெற இருக்கிறது.
ஐரோப்பாவில் வாழும் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான வி. ரி. இளங்கோவனின் ‘மண் மறவா மனிதர்கள்” கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா மார்கழி மாதம் 11 – ம் திகதி (11 – 12 – 2011) ஞாயிறு பிற்பகல் 3மணியளவில் பாரிஸ் மாநகரில் (50இ Pடயஉந னந வுழசஉலஇ 75018 Pயசளை – ஆéவசழ: ஆயசஒ னுழசஅழல) நடைபெறவுள்ளது. அரசியல், இலக்கியம், சமூகம், சமயம், தமிழியல், இதழியல், மருத்துவம் ஆதியாம் பல்வேறு துறைகளில் ஒப்பரிய பணிகளைச் […]
வருகிற டிசம்பர் மாதம் 24ம் தேதி மணல்வீடு சிற்றிதழும் களரி தொல்கலைகள் &கலைஞர்கள் மேம்பாட்டு மையமும் இணைந்து நிகழ்த்துகலைஞர்களை கௌரவிக்கும் விழா ஒன்றினை ஏற்பாடு செய்திருக்கிறது.அமரர் சடையன் வாத்தியார் நினைவு விருது அறுவர்க்கும், அமரர் துரைசாமி வாத்தியார் நினைவு விருது ஒருவர்க்குமாக ஏழு மூத்த கலைஞர் பெருமக்களுக்கு விருதும் பணமுடிப்பும் வழங்கப்படவிருக்கிறது. அவ்வமயம் கவிஞர் கறுத்தடையான் அவர்களின் ஊட்டு கவிதைப்பிரதி வெளியீடும், தோற்பாவை, கட்டபொம்மலாட்ட, கூத்துக்கலைஞர் அம்மாபேட்டை கணேசன் அவர்களை குறித்த விதைத்தவசம் என்றவோர் ஆவணப்பட திரையிடலும், […]
மலேசியாவில் டான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசளிப்பு விழா 2011: சை.பீர் முகமதுவின் “சந்ததிகளும் ரப்பர் உறைகளும்” கவிதைத் தொகுப்புக்குப் பரிசு. (கே.எஸ்.செண்பகவள்ளி மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்) மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் அக்டோபர் 4ஆம் நாள், டான் ஸ்ரீ கே.ஆர்.சோமா மண்டபத்தில் 12ஆம் ஆண்டாக “டான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசளிப்பு” நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6.00 மணிக்கு தேநீர் உபசரிப்புடன் தொடங்கிய நிகழ்ச்சியில் மேலும் பல முக்கிய பிரமுகர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், […]
அன்புமிக்க திண்ணை இணைய இதழ் ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். நேர்காணல் இதழ் நான்கு இப்போது வந்துள்ளது. தமிழ் நவீன நாடகத்துறைக்கு முக்கியப் பங்காற்றி வரும் ந.முத்துசாமி , நவீன இலக்கியத்திற்கு மிகச்சிறந்த கொடைகளைக் கொடுத்துள்ள வண்ணநிலவன், திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் நாசர் பற்றியும் இதுவரை வந்துள்ளது. இதில் வண்ணநிலவன் மற்றும் நாசர் பற்றிய நேர்காணல் இதழ்களை vallinam.com.my இணைய இதழின் 27,28 இதழ்களில் படிக்க முடியும். பிரெஞ்சிலிருந்து முக்கிய நூல்களை தமிழில் மொழிபெயர்த்துள்ள தனித்துவமான மொழிபெயர்ப்பாளர் […]