இந்த லெனின் விருது வழங்கும் விழா எதிர்வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று சென்னை அண்ணா சாலையிலுள்ள மாவட்ட மைய நூலக அறையில் (தேவநேயப் பாவாணர் நூலகம்) LLA Building, மாலை 6 மணியளவில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் கலந்துக் கொள்ளவிருப்பர்வர்கள். தமிழ் ஸ்டுடியோ வழங்கும் ‘லெனின் விருது’ – பெறுபவர்: ஆர்.ஆர். சீனிவாசன் இடம்: தேவநேயப் பாவாணர் நூலகம் (LLA Building), அண்ணா சாலை நாள்: 15-08-2011 நேரம்: மாலை 6 மணிக்கு இயக்குனர் பாலு மகேந்திரா, […]
கோவிந்த் கோச்சா TIDEL / ASCENDAS International IT park அருகே திருவான்மியூர் ரயில் ஸ்டேஷன் அருகே எடுக்கப்பட்ட படங்கள்
கனடாவில், அறக்கொடை நிறுவனமாகப் பதிவுசெய்யப்பட்ட தமிழ் இலக்கியத் தோட்டம் உலகெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்ப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். இது வருடா வருடம் வாழ்நாள் தமிழ் கல்வி, இலக்கிய சாதனைகளுக்காக உலகத்தின் மேன்மையான சேவையாளர் ஒருவரை தேர்வு செய்து அவருக்கு விருது வழங்கும். இந்த விருது பாராட்டுக் கேடயமும், 1500 கனடிய டொலர்கள் பணப் பரிசும் கொண்டது. ரொறொன்ரோ பல்கலைக் கழகத்தில், கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தால் நிறுவப்பட்ட நிதியத்தின் ஆதரவில் வருடா வருடம் நடைபெறும் உரைத்தொடருடன் […]
அன்புடையீர்! கனிவான கைகுவிப்பு இனிய நல் வாழ்த்துகள். பிரான்சு கம்பன் கழகம் தன் பத்தாம் ஆண்டு விழாவை வரும் ஐப்பசி (நவம்பர்) த் திங்கள் சிறப்பாகக் கொண்டாட இருக்கிறது. இதன் தொடர்பாகக் 1 கம்பன் விழா மலர் வெளியிடப்படும். அதில் இடம் பெற மரபுக் கவிதைகள் வரவேற்கப்படுகின்றன . நிபந்தனைகள் : தலைப்பு : தங்கள் விருப்பம் பொருள் : கம்பன் (கம்பனின் காவியம், பாத்திரங்கள், கவித்திறம் …) பேரெல்லை : நாற்பது வரிகளுக்கு மிகாமல்.(அல்லது 4 […]
கோவை கஸ்தூரி சீனிவாசன் அறநிலையம் வழங்கும் திருமதி ரங்கம்மாள் விருதுக்கு நான் எழுதிய “வெட்டுப்புலி’ நாவல் தேர்வாகியுள்ளது. ÷இதுகுறித்து கஸ்தூரி சீனிவாசன் அறநிலையம் வெளியிட்டுள்ள செய்தி: ÷இலக்கிய முன்னேற்றத்துக்காக இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சிறந்த தமிழ் நாவலுக்கு, திருமதி ரங்கம்மாள் பரிசு வழங்கப்படுகிறது. 2009, 2010-ம் ஆண்டுகளில் வெளியான 20 நாவல்கள் இவ்வாண்டு பரிசுப் போட்டிக்கு வரப்பெற்றன. இதில் தமிழ்மகன் எழுதிய “வெட்டுப்புலி’ நாவல், பரிசுக்குத் தேர்வாகியுள்ளது. ÷இதில் நாவலாசிரியர் தமிழ்மகனுக்கு பரிசுத் தொகையாக ரூ. 20 ஆயிரம், […]
கோவி நேசனின் ‘சிறுவர் அரங்க கோலங்கள்’ மறைந்த கோவிந்தசாமி லோகநேசன் (கோவி நேசன்) எழுதிய ‘சிறுவர் அரங்கக் கோலங்கள்’ என்னும் சிறுவர் நாடகப் பிரதிகளைக் கொண்டமைந்த நூல் வெளியீடு 31.07.2011 ஞாயிறு காலை 8.00 மணிக்கு யாழ்ப்பாணம், வதிரி தமிழ்மன்ற மண்டபத்தில் கவிஞர் வதிரி கண எதிர்வீரசிங்கம் தலைமையில் இடம்பெற்றது. ஆசிரியராக, அதிபராக, பல்துறை ஆற்றல் மிக்க கலைஞனாகத் திகழ்ந்த கோ. லோகநேசன் மறைந்த 31 ஆம் நினைவு நாளிலே இந்நூல் வெளியீடு இடம்பெற்றது. நிகழ்வில் செல்வி […]
வணக்கத்துக்கு உரியவர்களுக்கு இத்துடன் வடக்கு வாசல் இசைவிழாவின் அழைப்பினை தங்களின் மேலான பார்வைக்கு இணைத்திருக்கிறேன். யதார்த்தா பெண்ணேஸ்வரன்
எஸ். அர்ஷியா அப்பாவுக்கும் எனக்குமிடையில் பாசத்தைத் தாண்டி நட்பு துளிர்விட்டது, எனது எட்டாவது வயதில்தான்! அப்போது அவர், தனது நாற்பதின் துவக்கத்தில் இருந்தார். அரசு வேலையை எழுதிக்கொடுத்துவிட்டு, சொந்தமாகத் தொழில் துவங்கும் முயற்சி யில், ஓடியபடி இருந்தார். கொஞ்சம் இறுக்கமான தருணம், அது. என்றாலும், சா¢யாக எட்டரை மணிக்கு இரவு உணவுக்காக எங்கிருந்தாலும் வீட்டுக்கு வந்துவிடுவார். அதை ஒரு வழக்கமாக வைத்திருந்தார். அப்பா, அம்மா, செல்வி அக்கா, சுந்தர் அண்ணா, நான் ஒன்றாகத்தான் இரவு உணவைச் சாப்பிடுவோம். […]
பிரபஞ்சத்தில் நம் சூரியனை போன்ற ஏராளமான சொல்லப்போனால் பல கோடி கோடி நட்சத்திரங்கள் இருக்கின்றன. கடந்தகாலத்தில், பல்வேறு தத்துவவியலாளர்கள் நம் சூரியனை போன்றே மற்ற நட்சத்திரங்களை சுற்றியும் கிரகங்கள் இருக்கலாம் என்று யூகித்துள்ளனர். 1885இல் சென்னையில் கேப்டன் w.s.ஜேக்கப் என்பவர் கிழக்கிந்திய கம்பெனியின் சென்னை வானியல் மையத்தில் binary star 70 Ophiuchi என்ற நட்சத்திரத்தை ஆராய்ந்து அதன் நிலையற்ற தன்மையை கண்டு அதனை சுற்றி கிரகங்கள் இருக்கலாம் என்று கூறினார். ஆனால், முதன் முதலாக கனடிய […]
இரைச்சலிடும் தையல் இயந்திரம் ஒருக்கால் அறுந்துபோன என் கனவுகளைத் தைக்கலாம். ஆனால் ஊசியின் ஊடுருவலும் பாபினின் அசைவும் கனவுகளை மிகக்கோரமாய் ரத்தம் கசியவைக்கும். குருதிப்பெருக்கில் திகிலுற்று என் பாட்டி கேட்பாள் “ஏன் உன் கனவுகள் தைக்கப்பட வேண்டும்?”. பதில் என்னவோ சுலபம்தான். அறுந்துபோன கனவுகளை ஒரு தையல் தைக்கும்போது நிர்வாணமான மனதை மூடிக்கொள்ள ஏதோ ஒன்று கிடைத்து விடுகிறது. ரமணி