author

விருக்ஷம்

This entry is part 6 of 10 in the series 14 ஜுலை 2024

வெங்கடேசன் நாராயணசாமி  ஒரு கூட்டில் சிறு பறவையாகப் பிறந்தேன். அன்பின் இழைகளாலும், பாதுகாப்பின் கிளைகளாலும் பின்னப்பட்ட கூடு. இவ்வாறே வாழ்வின் பரந்த வலிமைமிக்க மரத்தில் வளர்ந்தேன். நோய்ப் பாம்புகள் மற்றும் விதிக் கழுகுகளிடமிருந்து பாதுகாப்பாக வளர்ந்தேன். ஆகாயத்திலிருந்து மரத்திற்கும், மரத்திலிருந்து ஆகாயத்திற்குமாகப் பறந்து பறந்து வளர்ந்தேன். மரத்தின் இனிமையான பழங்களை உண்டு நான் விரைவில் வளர்ந்தேன். விழைவு மற்றும் ஆசையின் சிறகுகள் என்னை விசும்பெனும் வாழ்வில் பறக்க உதவின. நான் காட்டின் பிற பகுதிகளுக்குப் பறந்தேன் – […]

அன்பின் கரம்

This entry is part 5 of 10 in the series 14 ஜுலை 2024

சசிகலா விஸ்வநாதன் தரையில்விழுந்தவளை  தாங்கியது பல கரங்கள். கரங்கள் ஒவ்வொன்றும் சொன்னது ஒரு செய்தி. நாளை  அடுக்களை வேலை, எனக்கா? அலுப்புடன்! மருத்துவர் என்ன செலவு  சொல்கிறாரோ? அச்சம்! என்றைக்கு சொல் பேச்சை கேட்டாள், இவள்? ஆயாசம்! பேசாமல் படு; இரண்டு நாள்கள்!கனிவு! என் கரம் பற்றியது; எந்தக் கரத்தை? சசிகலா விஸ்வநாதன்

சிந்தனைப்பூக்கள் பத்மநாதன் !

This entry is part 4 of 10 in the series 14 ஜுலை 2024

முதல் சந்திப்பு : எங்கிருந்தாலும்  சோர்ந்துவிடாமல் அயராமல் இயங்கும்  சிந்தனைப்பூக்கள் பத்மநாதன் ! கற்றதையும் பெற்றதையும் சிந்தனை வடிவில் பதிவுசெய்துவரும் எழுத்தாளர் ! !                                                                       முருகபூபதி  “ நண்பர்கள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள்  “    என்ற சிந்தனை எனக்கு, நான் இலக்கிய உலகில் பிரவேசித்த பின்னரே தோன்றியது. 1970 களில் மல்லிகை ஆசிரியரால் நான் ஈழத்து இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னரே இலங்கை, இந்தியா உட்பட பல  நாடுகளில் எனக்கு  நண்பர்கள் உருவானார்கள். அவ்வாறு 1975 இல் […]

கவிதைகள்

This entry is part 2 of 10 in the series 14 ஜுலை 2024

ரவி அல்லது பறித்தாலும் பழகாத அறம். அவர்கள் ஏற்படுத்திய வலிகள் இருக்கிறது தழும்புகளாக வெறுப்புகள் சூழ. தண்ணீர் விடாமல் தவிக்கவிட்ட ஆற்றாமை அடங்கவே இல்லை இப்பொழுதும். மேலூட்டமிடாத கலைப்பு  தருகிறது மேனி வாடுமாறு. அனவரத ரணத்திலும் பூத்தலை நிறுத்தவே முடியவில்லை இச்செடிகளால் யாவுமதன் இயல்பில் இருப்பதால். *** எதிர்பாராதது. பார்வை தூரத்தில் பலரிடம் கையேந்தி வரும் முக்காடிட்ட கிழவிக்கு நான் உதவிட காத்து நிற்கிறேனென்பது தெரியாது இலக்கு நானாக இல்லாமல் இருப்பதால். அதன் புறக் கணிப்புகள் தாண்டி […]

பத்துப் பொருத்தம்

This entry is part 1 of 2 in the series 7 ஜூலை 2024

விஜயலட்சுமி கண்ணன் கலாவுக்கு வயது இருபது நிறைந்து விட்டது.பி.காம் முடித்து நல்ல வங்கி வேலையும் கிடைத்தது. கலாவின் தந்தை ரவிக்கு ஜோசியம், ஜாதகம் இதில்  எல்லாம் நம்பிக்கை அதிகம்.கலாவின் தாய் சுஜாதாவுக்கு இதில் சிறிதும் நம்பிக்கை கிடையாது. “ஆமா,, எங்கப்பாவும் ஜாதகமும் கையுமாக அலைந்து ஒரு ஜோசியர் பத்துப் பொருத்தத்தில் எட்டு பொருத்தமும் அமைந்த ஜாதகம் என்று சொன்னதனால் தானே ரவிக்கு கழுத்தை நீட்டினாள். என்னத்தை சாதிக்க முடிந்தது? காலம் ஓடியது. அதோடு நாமும் ஓடியது தான் […]

என்ன  வாழ்க்கைடா  இது?!

This entry is part 6 of 6 in the series 30 ஜூன் 2024

சோம. அழகு             எந்தவொரு மனநிலையிலும் அதற்கு ஏற்ற (அல்லது ஏற்பில்லாத) எவ்வுணர்வையும் பூசிக்கொண்டு எந்தத் தொனியிலும் கூற முடிகிற ஒரு வாக்கியம் இது. ரொம்பவே வெட்டியாக இருந்த அந்த சுபதினத்தன்று ஒரு நொடி சந்திரமுகியாக (ஜோதிகாவைச் சொன்னேன்!) மாறி கண்ணாடி முன் நின்று ஒவ்வொரு தினுசாகச் சொல்லிப் பரிசோதித்த பின்பே எழுதுகிறேன். இன்பம், துன்பம், சோகம், விரக்தி, கோபம், சினம், துயரம், பயம், கவலை, ஏமாற்றம், பரிவு, எரிச்சல், சலிப்பு, அலட்சியம், வெறுப்பு, வியப்பு என […]

படித்தோம் சொல்கின்றோம் :

This entry is part 5 of 6 in the series 30 ஜூன் 2024

 சி. மகேந்திரன் எழுதிய ஒரு வண்ணத்துப்பூச்சியின் மரண சாசனம் ! படித்தோம் சொல்கின்றோம் :  சி. மகேந்திரன் எழுதிய ஒரு வண்ணத்துப்பூச்சியின் மரண சாசனம் ! நதி வெள்ளம் காய்ந்துவிட்டால்,  நதி செய்த குற்றம்  என்ன…? !                                                                      முருகபூபதி  “ வண்ணத்துப்பூச்சியின் மரணசாசனம் என்பது நதிகளின் மரண சாசனம். நதியின் உருவமாக , படபடத்து சிறகசைக்கும் வண்ணத்துப்பூச்சிகள், பெரும் துயருடன் என் மனதில் குடியேறின. இதன் விளைவுதான் வண்ணத்துப்பூச்சியின் மரண சாசனம். இயற்கைக்கு மரணம் […]

வண்டின் இனிய கீதம்

This entry is part 4 of 6 in the series 30 ஜூன் 2024

வெங்கடேசன் நாராயணசாமி [ஶ்ரீம.பா. 10.47.11] ஒரு தேன் வண்டைக் கண்ட கோபிகை, கண்ணனுடன் இணையும் சிந்தனையில் தன்னையே தேற்றிக்கொள்ள, தாமோதரனின் தூதாக அதையெண்ணி கற்பனை செய்து கூறலானாள்: [ஶ்ரீம.பா. 10.47.12] கோபிகை கூறுகிறாள்: தேனீ! அக்கபடனின் நண்ப! நப்பின்னை கொங்கைகள் நசுக்கிய மார்பு மலரின் குங்குமக்கறை உன் மீசையில் எப்படி? தொடாதே எமது பாதங்களை! வணங்குவதுபோல் பாசாங்கு செய்யும் உன் நொண்டிச் சமாதானம் தேவையில்லை எமக்கு! சொல்லாமல் சொல்கிறாயா எமது போட்டிக் காதலிகளோடு அவ்வனமாலீ ஆடும் பல் […]

கவிதைகள்

This entry is part 3 of 6 in the series 30 ஜூன் 2024

ஜி. ஏ. கௌதம் நினைவிருக்கிறதா ? முன்னால் காதலியைமீண்டும் காதலிக்கும் ஒருவனின்கவிதையொன்றை எழுதும் முன்என்னை நானே கேட்டுக்கொள்கிறேன்… நினைவிருக்கிறதா !? நீ காதலிக்கப்பட்டமுதல் தருணம் ! அவள் கண்கள்முழுதும் நிறைத்தகாதலின் பூரணம் கண்டுநீ மகிழ்ந்த தருணம் ! கண்சிமிட்டாமல் பார்த்தபடிமடியிலிருந்து இதழுக்குநத்தையாக நகர்ந்துஉன் காதலைமுத்தத்தில் சொன்ன விதம் ! யாருமற்ற  உன் வாழ்வின் பாதைஅவள் பாதங்களில் முடியும்ரகசியம் அறிந்த அந்த இரவு ! அவள் கல்லூரியின்மரங்கள் அடர்ந்த பாதையில்சிந்திய மலர்கள்உங்கள் பாதங்களை ஏந்திக்கொள்ளஅவள் கரங்களை இறுகப்பற்றியபடிஅவளுடன் நடந்த […]

என் தாய் நீ

This entry is part 1 of 6 in the series 30 ஜூன் 2024

               ஆ.மீனாட்சி சுந்தரமூர்த்தி                                                                 .                 வேப்ப மரத்துக் குயில் கூவியது. அலாரமே தேவையில்லை. இதையாவது நிறுத்தி விட்டுத் தூக்கத்தைத் தொடரலாம் ஆனால் இந்த பொல்லாத பூங்குயிலை ஒன்றும் செய்ய முடியாது. சரியாக ஐந்து மணிக்கெல்லாம்  கச்சேரியை ஆரம்பித்துவிடும். யாராவது கேட்கிறார்களா, இரசிக்கிறார்களா என்றெல்லாம் பார்ப்பதில்லை.ஆளில்லாத டீக்கடையில் டீ ஆற்றுபவர் போல என்று சொல்லலாமா? ரஞ்சனிக்கு என்னவோ அது தன்னை எழுப்புவதற்கே நாள் தவறாமல் வருவதாக எண்ணம். எந்தபக்கமும் திரும்ப முடியாதபடி ஆளுக்கொரு காலைத் தூக்கிப் போட்டுக்கொண்டு ஆளுக்கொரு கையைப் […]