வி. ஆர். ரவிக்குமார் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம். இரவு மணி ஏழு. கார்த்திகை மாத காரிருள், சீக்கிரமே இருட்டிவிட்டது. வெளியில் லேசாக மழை தூறிக்கொண்டிருந்தது. பிளாட்பார்ம் எண் ஆறிலிருந்து சார்மினார் எக்ஸ்பிரஸ் இன்னும் இருபது நிமிடங்களில் ஹைதராபாத்திற்கு புறப்படத் தயாராக இருந்தது. பயணிகள் கவனத்திற்கு என்று ஒலி பெருக்கியில் மீண்டும் மீண்டும் அறிவிப்பு முழங்கிக்கொண்டிருந்தது. பல பெட்டிகளுடனும் லக்கேஜ்களுடனும் பயணிகள் வேக வேகமாக அவரவர் கம்பார்ட்மெண்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். இருக்கை உறுதி ஆகாதவர்கள் […]
மீனாட்சி சுந்தரமூர்த்தி விடிவதற்கு இன்னும் நேரமிருந்தது.வேலம்மாளுக்கு அப்போதுதான் நல்ல தூக்கமே வந்திருந்தது.புது இடம் என்பதால் தூக்கம் வரவில்லை. கந்தப்பன் மீது காலைப் போட்டுக் கொண்டு பெரியவனும் , கழுத்தைக் கட்டிக்கொண்டு சின்னவனும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.அலாரம் ஐந்துமுறை அடித்ததும் விழித்துக் கொண்ட கந்தப்பன் பிள்ளைகளைச் சரியாகப் படுக்கவைத்துப் போர்வையைப் போர்த்திவிட்டான்.ஏழு மணிக்கெல்லாம் கிளம்பினால்தான் ஷிப்டுக்குச் சரியாக இருக்கும். குளித்து முடித்துத் தயாராகி , முன்பக்கத்து அறையில் மர ஸ்டேண்டில் வைத்திருந்த பிள்ளையாரைக் கும்பிட்டு திருநீறு இட்டுக்கொண்டிருந்தபோது […]
வாழப்போகும் பெருமையை விதை சொன்னது வாழும் பெருமையை மரம் சொன்னது வாழ்ந்த பெருமையை விறகு சொன்னது மூன்று பேரும் இறைவனைக் கேட்டனர் ‘எங்களில் யார் பெரியவன்’ இறைவன் சொன்னான் ‘உங்கள்முன் நான் சிறியவன்’ அமீதாம்மாள்
வெங்கடேசன் நாராயணசாமி ( சமஸ்கிருதத்திலிருந்து ஸ்ரீமத் பாகவதம் செய்யுளின் மொழிபெயர்ப்புகள் சில ) துருவன் பகவானைப் போற்றுதல்: ௐ [ஶ்ரீம.பா-4.9.6] எனாவி உடல் உட்புகுந்து ஆட்கொண்டாய்! ஜடமாய் உறங்கும் பொறி புலன்கள் உயிர்ப்பித்து இயக்கினாய்! மூச்சானாய்! பேச்சானாய்! அறிவாற்றல் ஆன்மாவானாய்! உயிருக்குயிரான பகவானே! உணர்வெனும் பெரும்பதப் புருடனே! போற்றி! போற்றி! ந [ஶ்ரீம.பா-4.9.7] ஒன்றேயான உறுபொருள் பகவன் நும் ஆத்மசக்தியால் அனாதி மாயா ஆற்றல்மிகு குணத்திரிபால் அகண்ட பேருணர்வால் அண்டங்கள் படைத்தும் அந்தர்யாமியாய் அவற்றுள் நுழைந்தும் வெவ்வேறு விறகு […]
வெங்கடேசன் நாராயணசாமி தபாலில் அனுப்பியுள்ளது விசித்திர விதைகளை சீனா அமெரிக்காவிற்கு. கண்டித்துள்ளார் அமெரிக்க உளவுத்துறையை கவனக்குறைவிற்காக அமெரிக்க ஜனாதிபதி. சுமந்து வந்தோமிங்கு விசித்திர வாதனா விதைகளை கவனக் குறைவினால். இங்கிருந்து மீண்டும் சுமந்து செல்வோம் இவ்விசித்திர வாதனா விதைகளை இதே கவனக் குறைவினால். உள்ளிருக்கும் உள்ளானை ஓயாது உள்கிறோமா, இல்லையா, என்று உளவு சொல்பவரும் உறங்குகிறார் இவ்வும்பரரங்கில். முரசுக் கட்டிலிலுறங்கும் இம்மோசிகீரனாரைக் கண்டிக்காமல் கவனமாகக் கவரி வீசும் தகடூர் எறிந்த இச்சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை யார்?
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 319ஆம் இதழ், 26 மே , 2024 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/
சோம. அழகு கோவிட் காலம், அதுவல்லாத காலம், இளமை, முதுமை என எல்லா நிலைகளிலும் எனக்கு மட்டும்தான் ‘தனித்திரு’ என்னும் இச்சொல் இன்பத்தேனாகப் பாய்கிறதா? “‘கொடிது கொடிது தனிமை கொடிது; அதனினும் கொடிது முதுமையில் தனிமை’. வயசானாதான் அதுலாம் தெரியும். இப்போ அதுபற்றி உனக்குப் புரியாது” – இதைத்தானே சொல்லப் போகிறீர்கள்? ஒப்புக்கொள்கிறேன். முதல் வரியில் ‘முதுமை’யைச் சேர்த்துக் கொள்ள எனக்குத் தகுதி இல்லைதான். ஆனால் ‘முதுமையில் நாம் தனித்திருக்க இயலாது’ என்னும் ஒற்றைக் காரணத்திற்காக […]
ஆர் வத்ஸலா முன்பும் இருந்துள்ளன திட்டமிடப்படா மௌனங்கள் நம்மிடையே – எவ்வளவோ முறை – நமது நெஞ்சங்களை அண்டாமல் நீ கேட்காத ஒரு கேள்வியும் நான் கூறாத ஒரு பதிலும் இப்போதைய மௌனங்களை விஷமாக்கி நிற்கின்றன நமது நெஞ்சங்களின் மேலேறி மிதித்துக் கொண்டு
ஜெயானந்தன். நீயும் நானுமாய் கைகோர்த்து, வாழ்வின் கடல் நீந்தி வெகுதூரம் வந்துவிட்டோம்! நாற்பதாண்டில், “நீ” நானுமாய், “நான்” நீயுமாய் மாறிமாறி உருமாறி அர்த்தநாரியாய் உலாவந்தோம். காமம் உடல்வரை காதல் உள்ளம்வரை கரைபுரண்டு ஓடி, கால்கடுத்து, வாழ்வை தவமாய் மாற்றினாய். இன்று, முதுமையில் நீயும் நானுமாய் கோணல் பாதங்களுடன் நுரைத்தள்ளும் கடல்புரத்தில் கானும் தொடுவானம் , தொலைதூரம்! என் அன்பே என் சுயம் அழிக்க உன் முத்தம் ஒன்றே போதும்…., நம் இளமை முக்தி பெற்று முதுமையில் […]
ஆர். சீனிவாசன் 11.12.3123 அன்று வெளிவந்த நாளிதழ்களின் சில முக்கிய செய்திகளின் தொகுப்பு. தமிழ்நாட்டு செய்திகள்: நாட்டின் செய்திகள்: சர்வதேச செய்திகள் : விளையாட்டு செய்திகள்: வணிக செய்திகள்: சமையல் பொழுதுபோக்கு மற்றும் சினிமா செய்திகள்: ஞால செய்திகள் :**அரை மணிநேரம் அன்றய தலைப்பு செய்திகளை கைபேசியில் தூக்கம் கலையா கண்களுடன் படித்த சக்திவடிவேலிற்கு அடுத்தது என்ன செய்யலாம் என தெரியவில்லை. ஞால பொருளாதாரம் வீழ்ச்சி கண்டு வருடங்கள் ஆனா பிறகு, போன மாதம்தான் அவன் வேலையும் […]