Articles Posted by the Author:

 • பஞ்சதந்திரம் தொடர் 28 – யோசனையுள்ள எதிரி

  பஞ்சதந்திரம் தொடர் 28 – யோசனையுள்ள எதிரி

  34. யோசனையுள்ள எதிரி ஒரு அரசகுமாரன் ஒரு வியாபாரியின் மகனோடும், கல்வி கேள்விகளில் சிறந்த ஒரு மந்திரியின் மகனோடும் சிநேகமாயிருந்தான். ஒவ்வொரு நாளும் பொது இடங்களுக்கும், நந்தவனங்களுக்கும், ஓய்வு ஸ்தலங்களுக்கும் மூவரும் போவார்கள். விநோத விளையாட்டுகளிலும்,கேளிக்கைகளிலும் மூழ்கி பொழுதைக்கழிப்பர்கள். வில்வித்தை, யானை ஏற்றம், குதிரை ஏற்றம், வேட்டையாடுதல் என்றால் மூவருக்கும் எப்போதுமே பிடிக்காது. ‘ராஜநீதியை நீ வெறுக்கிறாய்’ என்று ஒரு நாள் அரசகுமாரனைத் தந்தை கடிந்து கொண்டார். இந்த அவமானத்தை அவன் தன் நண்பர்களுக்குத் தெரிவித்தான். அதற்கு […]


 • பஞ்சதந்திரம் தொடர் 27- கல்வியின் பயன்

  பஞ்சதந்திரம் தொடர் 27- கல்வியின் பயன்

  33. கல்வியின் பயன் ஒரு மலையின் பக்கத்தில் ஒரு பெண்கிளி முட்டைகள் இட்டது. அவற்றிலிருந்து இரண்டு கிளிகள் வெளிவந்தன. கிளி இரை தேடி வெளியே சென்றிருக்கும்போது, அந்தக் கிளிக் குஞ்சுகளை ஒரு வேடன் எடுத்துச் சென்றுவிட்டான். அவற்றில் ஒன்று அதிர்ஷ்டவசமாக எப்படியோ தப்பித்துக்கொண்டது. மற்றதைக் கூண்டில் அடைத்து, அவன் பேசக் கற்றுக் கொடுக்கத் தொடங்கினான். எங்கெங்கோ சுற்றித் திரிந்து வந்த ஒரு ரிஷி மற்றொரு கிளியைப் பார்த்துவிட்டு அதைப் பிடித்து ஆசிரமத்துக்குக் கொண்டுபோய் வளர்த்தார். காலம் சென்றது. […]


 • பஞ்சதந்திரம் தொடர் 26 யோசனையில்லாத உபாயம்

  பஞ்சதந்திரம் தொடர் 26 யோசனையில்லாத உபாயம்

  யோசனையில்லாத உபாயம்   ஒரு காட்டில் ஆலமரம் ஒன்றிருந்தது. அதில் நாரைகள் கூடு கட்டி இருந்து வந்தன. மரத்தின் ஒரு பொந்தில் ஒரு கருநாகம் இருந்தது. நாரைகளின் குஞ்சுகளுக்கு இறக்கை முளைப்பதற்குமுன்பே அவற்றை தின்று காலங்கழித்து வந்தது.  அப்படியே ஒருநாள் ஒரு நாரையின் குஞ்சுகளைப் பாம்பு தின்றுவிட்டது. அதனால் அந்த நாரை துக்கத்தோடு ஏரிக்கரைக்குப் போய் தாரை தாரையாகக் கண்ணீர் விட்டு அழுது தலையைத் தொங்க விட்டுக்கொண்டு நின்றது.   அதைப் பார்த்த ஒரு நண்டு, ‘’மாமா, ஏன் இப்படி […]


 • பஞ்சதந்திரம் தொடர் 25 முட்டாளுக்குச் செய்த உபதேசம்

  பஞ்சதந்திரம் தொடர் 25 முட்டாளுக்குச் செய்த உபதேசம்

  முட்டாளுக்குச் செய்த உபதேசம்   ஒரு காட்டுப்பிரதேசத்தில் குரங்குக் கூட்டம் ஒன்றிருந்தது. அவை குளிர் காலத்தில் அசாத்தியக் குளிரால் வாடிக்கொண்டிருந்தன. இரவில் ஒரு மின்மினிப் பூச்சியைக் கண்டன.. ‘அது நெருப்புத்தான்’ என்று அவை எண்ணி அதைச் சிரமப்பட்டுப் பிடித்து, காய்ந்த புல்லையும் இலைகளையும் போட்டு அதை மூடிவிட்டன. பிறகு தங்கள் கைகளையும், வயிற்றையும், மார்பையும், விலாப்புறத்தையும் அதன்முன் நீட்டிக் காட்டிச் சொறிந்துகொண்டபடியே மானசீகமான உஷ்ணத்தை அனுபவித்து இன்படைந்தன. அவற்றில் ஒரு குரங்கு குளரில் ரொம்பவும் வாடியதால் அதிலேயே […]


 • பஞ்சதந்திரம் தொடர் 24 சந்நியாசி பாம்பை மணந்த பெண்

  பஞ்சதந்திரம் தொடர் 24 சந்நியாசி பாம்பை மணந்த பெண்

  பாம்பை மணந்த பெண்   ராஜக்கிருஹம் என்கிற ஊரில் தேவசர்மா என்றொரு பிராமணன் இருந்தான். அவன் மனைவிக்குக் குழந்தைகள் இல்லை. அதனால் அண்டை அயலார்களின் குழந்தைகளைப் பார்த்துவிட்டு அவள் ரொம்பவும் அழுதாள். ஒருநாள் பிராமணன் அவளைப் பார்த்து, ‘’அன்பே, கவலைவிடு. நான் குழந்தைப் பேறு பெறுவதற்காக யாகம் செய்யும்போது ஏதோ ஒரு அசரீரி, ‘பிராமணனே, மற்றெல்லா மனிதர்களைக் காட்டிலும் மிகுந்த அழகும், குணமும், பலமும் உள்ள குழந்தை உனக்குப் பிறக்கும்’ என்று தெளிவாகச் சொல்லிற்று’’ என்றான்.   […]


 • பஞ்சதந்திரம் தொடர் 23 – தேவலோகம் சென்ற சந்நியாசி

  பஞ்சதந்திரம் தொடர் 23 – தேவலோகம் சென்ற சந்நியாசி

  கோசல ராஜ்யத்தில் அயோத்தி என்ற நகரம் இருக்கிறது. அதை சுரதன் என்றொரு அரசன் ஆண்டு வந்தான். பல சிற்றரசர்கள் வந்து அவனுக்குத் தலைவணங்கி மரியாதை செய்யும்போது அவர்களின் மணி மகுடங்கள் வீசும் ஒளியிலே சுரதனின் பாதங்கள் பிரகாசித்துக் கொண்டிருக்கும். ஒருநாள் காடுகளைக் காவல் செய்பவன் அரசனிடம் வந்தான். ‘’அரசே! காட்டிலுள்ள எல்லா அதிகாரிகளும் கொந்தளித்துக் கலகம் செய்யும் நிலைமையில் இருக்கின்றனர். அவர்களிடையே விந்தியகன் என்ற தலைமை அதிகாரிக்கு அரசர்தான் மரியாதையாக நடக்கப் பாடம் கற்பிக்க வேண்டும்’’ என்று […]


 • பஞ்சதந்திரம் தொடர் 22 – சுயநலக்கார நரி

  பஞ்சதந்திரம் தொடர் 22 – சுயநலக்கார நரி

  ஒரு காட்டில் வஜ்ரதம்ஷ்டிரன் என்றொரு சிங்கம் இருந்தது. அதனிடம் கிரவ்யமுகன், சதுரகன், சங்குகர்ணன் என்ற பெயருள்ள ஒரு ஓநாயும், நரியும், ஒட்டகமும் மந்திரிகளாக இருந்தன. ஒருநாள் ஒரு மதயானையோடு சிங்கம் சண்டை போட்டது. யானையின் கூர்மையான தந்தங்கள் அதன் உடம்பைத் துளைத்துவிட்டன. அதனால் சிங்கம் ஒதுங்கித் தனிமையில் வசித்து வந்தது. ஏழு நாட்கள் உண்ணாவிரதம் இருந்து வேதனைப்பட்டது, பசியால் உடம்பு இளைத்துப் போயிற்று. அதன் மந்திரிகளும் பசியால் வாடிப்போயின. அவற்றைப் பார்த்துச் சிங்கம், ‘’எந்த மிருகத்தையாவது தேடிப் […]


 • பஞ்சதந்திரம் தொடர் 21 புத்திகூர்மையுள்ள கிழவாத்து

  பஞ்சதந்திரம் தொடர் 21 புத்திகூர்மையுள்ள கிழவாத்து

  புத்திகூர்மையுள்ள கிழவாத்து   ஒரு காட்டுக்குப் பக்கத்தில் ஆலமரம் ஒன்று இருந்தது. அதில் பல பெரிய கிளைகள் உண்டு. அங்கு ஒரு வாத்துக் கூட்டம் இருந்து வந்தது. அந்த மரத்தடியில் கோசாம்பி என்றொரு கொடி படர்ந்தது. அதைக் கண்ட கிழவாத்து, ”இந்தக் கொடி ஆலமரத்தைப் பற்றிக்கொண்டு ஏறினால் நமக்குக் கெடுதிதான் உண்டாகும். கொடியைப் பிடித்துக் கொண்டு ஒருவேளை யாராவது மரத்தில் ஏறி நம்மைக் கொல்லலாம். சுலபமாகப் பிடுங்கி யெறிகிற மாதிரி சிறியதாக இருக்கும்போதே, நாம் இந்தக் கொடியைப் […]


 • பஞ்சதந்திரம் தொடர் 20 குருவிக்கும் யானைக்கும் சண்டை

  பஞ்சதந்திரம் தொடர் 20 குருவிக்கும் யானைக்கும் சண்டை

  குருவிக்கும் யானைக்கும் சண்டை   அடர்ந்த காடு ஒன்று இருந்தது. அதில் ஒரு குருவியும் அதன் மனைவியும் ஒரு மரக்கிளையில் கூடுகட்டி இருந்து வந்தன. நாளாவட்டத்தில் அதன் குடும்பம் பெருகிற்று. ஒருநாள் மதம் பிடித்த காட்டானை ஒன்று வெய்யில் தாள முடியாமல் நிழலுக்காக அந்த மரத்தின் கீழ் ஒதுங்கியது. மதம் பிடித்துக் கண்மூடிப்போன அந்த யானை, குருவிக் குடும்பம் இருக்கும் மரக்கிளையை துதிக்கை நுனியால் இழுத்து ஒடித்தது. கிளை ஒடிந்து குருவி வைத்திருந்த முட்டைகள் எல்லாம் கீழே […]


 • பஞ்சதந்திரம் தொடர் 19 ஆமையும் வாத்துக்களும்

  பஞ்சதந்திரம் தொடர் 19 ஆமையும் வாத்துக்களும்

  ஆமையும் வாத்துக்களும்   ஒரு ஏரியில் சம்புக்ரீவன் என்றொரு ஆமை இருந்தது. அதன் சிநேகிதர்களாக சங்கடகன் விகடன் என்று இரண்டு வாத்துக்கள் இருந்தன. ஏதோ கால வித்தியாசத்தால் பன்னிரண்டு வருஷகால மழை தவறிப்போய் நீர் வறட்சி ஏற்பட்டுவிட்டது. இந்த நிலையில் வாத்துக்கள் இரண்டும் யோசிக்கத் தொடங்கின. ஒரு யோசனை தோன்றியது. ‘இந்த ஏரியில் நீர் வற்றிவிட்டது. வேறு ஏதாவது ஏரி குளம் பார்த்துக்கொண்டு போகவேண்டியதுதான். நண்பன் சம்புக்ரீவனிடம் விடை பெற்றுக் கொண்டு போய்விடலாம்’ என்று தீர்மானித்தன.   […]