Articles Posted by the Author:

 • பஞ்சதந்திரம் தொடர் 18 சமுத்திரமும் நீர்க்குருவியும்

  பஞ்சதந்திரம் தொடர் 18 சமுத்திரமும் நீர்க்குருவியும்

  சமுத்திரமும் நீர்க்குருவியும்   பெரிய சமுத்திரம் ஒன்று இருந்தது. அதில் மீன், முதலை, ஆமை, சுறாமீன், திமிங்கிலம், நத்தை, முத்துச்சிப்பி, கிளிஞ்சல் முதலான இன்னும் எத்தனையோ ஜந்துக்கள் நிறைய இருந்தன. அதன் கரையோரத்தில் ஒரு நீர்க்குருவியும் அதன் மனைவியும் இருந்து வந்தன. ஆண் குருவிக்கு உத்தான பாதன் என்று பெயர். பெண் குருவிக்குப் பதிவிரதை என்று பெயர். ருது அடைந்ததின் பலனைப் பெற்று அந்தப் பெண் குருவி முட்டையிடும் தருணத்தில் இருந்தது. அது தன் கணவனைப் பார்த்து, […]


 • பஞ்சதந்திரம் தொடர் 17 சிங்கமும் தச்சனும்

  பஞ்சதந்திரம் தொடர் 17 சிங்கமும் தச்சனும்

  சிங்கமும் தச்சனும்   ஒரு நகரத்தில் தேவகுப்தன் என்றொரு தச்சன் இருந்தான். தினந்தோறும் அவன் சாப்பாட்டைக் கட்டி எடுத்துக்கொண்டு மனைவியோடு காட்டுக்குப் போய் பெரிய மரங்களை வெட்டி வருவது வழக்கம். அந்தக் காட்டில் விமலன் என்றொரு சிங்கம் இருந்தது. அதைச் சுற்றித் திரிந்தபடி மாமிசபக்ஷணிகளான ஒரு நரியும் ஒரு காக்கையும் இருந்தன. ஒருநாள் காட்டில் சிங்கம் தனியே திரிந்து கொண்டிருக்கும்போது அந்தத் தச்சனைக் கண்டு விட்டது. தச்சனும் அந்த பயங்கரமான சிங்கத்தைப் பார்த்துவிட்டான். ‘இனி செத்தோம்’ என்று […]


 • பஞ்சதந்திரம் தொடர் 16 ஏமாந்துபோன ஒட்டகம்

  பஞ்சதந்திரம் தொடர் 16 ஏமாந்துபோன ஒட்டகம்

  ஏமாந்துபோன ஒட்டகம்   ஒரு ஊரில் சாகரதத்தன் என்றொரு வியாபாரி இருந்தான். நூறு ஒட்டகங்களின்மேல் விலையுயர்ந்த துணிமணிகளை ஏற்றுவித்து, அவன் எங்கோ பயணம் புறப்பட்டான். போகிற வழியில், விகடன் என்கிற ஒட்டகம் பாரம் தாங்க முடியாமல் துன்பப்பட்டு, உடல் தளர்ந்து போய்க் கீழே விழுந்தது. அதன்மேலிருந்த துணி மூட்டையை வியாபாரி கீழிறக்கிவைத்தான். மூட்டையிலிருக்கும் துணிகளைப் பாகம் பாகமாகப் பிரித்து மற்ற ஒட்டகங்கள் மீது சமபாரமாக ஏற்றினான். ‘இந்தக் காடு பயங்கரமாயிருக்கிறது, இங்கே தங்க முடியாது’ என்று முடிவு […]


 • பஞ்சதந்திரம் தொடர் 15 அன்னமும் ஆந்தையும்

  பஞ்சதந்திரம் தொடர் 15 அன்னமும் ஆந்தையும்

  அன்னமும் ஆந்தையும்   ”ஒரு காட்டில் பெரிய ஏரி ஒன்றிருந்தது. அங்கே மதரக்தன் என்கிற  அன்னப்பறவை ஒன்று இருந்தது. அது பலவிதமாய் விளையாடி ஆனந்தமாகப் பொழுது போக்கிக் கொண்டிருந்தது. இப்படி வெகு காலம் சென்றபிறகு,  ஒருநாள் அதற்கு யமனாக ஒரு ஆந்தை அங்கு வந்து சேர்ந்தது. அதைப் பார்த்த அன்னம், ”எங்கிருந்து வருகிறாய் நீ? இது ஜன சஞ்சாரமில்லாத காடாயிற்றே!” என்று கேட்டது.   அதற்கு ஆந்தை; ‘உன் குணங்களைக் கேட்டுத்தான் இங்கு வந்தேன். நான் நற்குணத்தைத் தேடி உலகம் […]


 • பஞ்சதந்திரம் தொடர் 14 நீல நரி

  பஞ்சதந்திரம் தொடர் 14 நீல நரி

  நீல நரி   ஒரு நகரத்தின் அருகில் இருந்த குகையில் ஒரு நரி இருந்தது. அதன் பெயர் சண்டரவன். ஒருநாள் பசியால் வாடிப்போன அந்த நரி இரவானவுடனே இரைதேடப் புறப்பட்டுத் திரிந்தபடியே நகரத்திற்குள் நுழைந்தது. அதைக்கண்டவுடன் ஊர் நாய்கள் பயங்கரமாய்க் குரைத்தன; ஓடிவந்து அதன்மேல் விழுந்து கூரிய பற்களால் கடித்துவிட்டன. குலைக்கும் சத்தம் கேட்டுப் பயந்துபோய், உடம்பெல்லாம் காயங்கள் உண்டாகி, திக்குத் திசை பாராமல் நரி தாவியோடியது. ஓடுகிற ஓட்டத்தில், யாரோ ஒரு சாயப் பூச்சு வேலை […]


 • பஞ்சதந்திரம் தொடர் 13 சீலைபேப்பேனும், தெள்ளுப்பூச்சியும்

  பஞ்சதந்திரம் தொடர் 13 சீலைபேப்பேனும், தெள்ளுப்பூச்சியும்

  சீலைபேப்பேனும், தெள்ளுப்பூச்சியும்   ஒரு அரசனின் அரண்மனையில் தனக்கு நிகரில்லை என்னும்படி மிக அழகான பஞ்சணை ஒன்று இருந்தது. அதன் மேல்விரிப்பு மடிப்பின் ஒரு ஓரத்தில் மந்த விசர்ப்பிணி என்னும் ஒரு சீலைப்பேன் இருந்துவந்தது. அரசன் தூங்கும்போது அவனுடைய ரத்தத்தைக் குடித்து அது வளர்ந்தது. பிள்ளையும் பேரனுமாகப் பெற்றெடுத்துப் பெரிய குடும்பமாக வாழ்ந்தது. அரசனின் ரத்தம் குடித்துக் குடித்து அதன் உடம்பு அழகாகவும் புஷ்டியாகவும் காணப்பட்டது. இப்படி இருக்கும்போது ஒரு நாள் காற்றில் அடித்துக்கொண்டு வந்த ஒரு […]


 • பஞ்சதந்திரம் தொடர் 12 நன்றி கெட்ட மனிதன்

  பஞ்சதந்திரம் தொடர் 12 நன்றி கெட்ட மனிதன்

  நன்றி கெட்ட மனிதன்   ஒரு ஊரில் யக்ஞதத்தன் என்றொரு பிராமணன் இருந்தான். அவனது குடும்பத்தைத் தரித்திரம் பிடுங்கித் தின்றது. ஒவ்வொரு  நாளும் அவன் மனைவி அவனைப் பார்த்து, ”ஓய், பிராமணா! சோம்பேறி! கல்நெஞ்சனே! குழந்தைகள் பசியால் துடிக்கிறது. உன் கண்ணில் படவில்லையா? எப்படி நிம்மதியோடு இருக்க முடிகிறது உனக்கு? காடு மேடு எங்காவது போய்ச் சாத்தியமானதைச் செய்து சோறு கிடைக்க வழி பார்க்கிறதுதானே!” என்று சொல்லிக்கொண்டே இருப்பாள்.   தினசரி இதே பல்லவியைக் கேட்டுகேட்டுச் சலித்துப்போன அந்தப் […]


 • பஞ்சதந்திரம் தொடர் 11 – விஷ்ணுரூபம் கொண்ட நெசவாளி

  பஞ்சதந்திரம் தொடர் 11 – விஷ்ணுரூபம் கொண்ட நெசவாளி

  விஷ்ணுரூபம் கொண்ட நெசவாளி   கௌட ராஜ்ஜியத்தில் புண்டரவர்த்தனம் என்ற நகரம் ஒன்றிருந்தது. அங்கே இரு நண்பர்கள் இருந்தனர். ஒருவன் தச்சன்; இன்னொருவன் நெசவாளி. இருவரும் தத்தம் வேலையில் நிபுணர்கள். அதனால் அவர்கள் தொழிலிலே சம்பாதித்த பணத்திற்குக் கணக்கு வழக்கு எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. அவர்கள் மென்மையான வேலைப்பாடுகளுள்ள, விலை உயர்ந்த ஆடைகளை உடுத்தினர். பூ, தாம்பூலம் அணிந்து அலங்கரித்துக் கொண்டனர். கற்பூரம், அத்தர், கஸ்தூரி முதலிய வாசனைப் பொருட்களை உபயோகித்தனர். பகலில் ஒன்பது மணி நேரம் […]


 • பஞ்சதந்திரம் தொடர் 10 சிங்கமும் முயலும்

  பஞ்சதந்திரம் தொடர் 10 சிங்கமும் முயலும்

  சிங்கமும் முயலும்   ஒரு காட்டில்  சிங்கம் ஒன்றிருந்தது. அதன் பெயர் மந்தமதி. அதற்குக் கர்வம் தலைக்கேறி திமிர் பிடித்துத் திரிந்தது. இடைவிடாமல் மிருகங்களைக் கொன்று கொண்டிருந்தது. எந்த மிருகத்தைக் கண்டாலும் அதற்குப் பிடிக்க வில்லை. இந்த நிலைமையில் மான், பன்றி, எருமை, எருது, முயல் முதலிய வன மிருகங்களெல்லாம் ஒன்று கூடின. எல்லாம் சேர்ந்து முகவாட்டத்துடன் சிங்கத்திடம் போயின. கால் முட்டுக்கள் பூமியைத் தொடும்படி மண்டியிட்டுத் தலை வணங்கின. மிகவும் தாழ்மையுடன், ”அரசே! இப்படி நீங்கள் அர்த்த […]


 • பஞ்சதந்திரம் தொடர் 9 – காகமும் கருநாகமும்

  பஞ்சதந்திரம் தொடர் 9 – காகமும் கருநாகமும்

  காகமும் கருநாகமும்   ஒரு வட்டாரத்தில் பெரிய ஆலமரம் ஒன்றிருந்தது. அதில் ஒரு காக்கையும் அதன் பெட்டையும் கூடு கட்டி இருந்துவந்தன. அவற்றின் குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளிவந்து பெரிதாவதற்கு முன்பே, அந்த மரத்தின் பொந்தில் இருந்த ஒரு கருநாகம் மேலேறி வந்து சாப்பிட்டு விடுவது வழக்கம். இந்த அக்கிரமத்தால் காக்கைக்கு எவ்வளவோ மனோ வேதனை ஏற்பட்ட போதிலும், வெகுகாலமாக வசித்த ஒரு பாசத்தால் அந்த ஆல மரத்தை விட்டு வேறு மரத்துக்குப் போக அதற்கு மனம் வரவில்லை. […]