எவையெல்லாம் இசை என்று கூறத்தகுதியில்லையோ அப்படிப்பட்ட இப்போதைய இசைக்கு மத்தியில் , இந்த மயிலின் இசை கொண்டு வந்து கொடுத்திருக்கிறார் ராஜா சார் நமக்காக. இன்னும் கொலவெறி’யோட சுத்திக்கிட்டு இருக்கிற தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு அருமருந்தாக இந்த எண்பதுகளின் இசை மீண்டும் அவரின் பறைசாற்ற வந்திருக்கிறது. எனக்கென்னவோ ஜெயா ப்ளஸ்’ஸ ஆன் பண்ணிவிட்ட மாதிரி ஒரு Feeling. மயிலிறகின் தென்றலாக நம்மை வருடிச்செல்கிறது அத்தனை பாடல்களும்.அவரின் அதே மண் மணம் மாறாத இசை. அனைத்துப்பாடல்களிலும் இக்கால இசைக்கென/பாணிக்கெனத் தம்மை […]
தோனி – நாட் அவுட் வருடிச்செல்லும் மயிலின் இறகினையொத்த இசையைப்பற்றி இப்போதுதான் ரசித்தகணத்திற்குள் இன்னுமொரு கூக்ளி ராஜா சாரிடமிருந்து “தோனி” வழியாக.முதலிலேயே சொல்லிவிடுகிறேன் , நீங்கள் ஒரு “நெஞ்சத்தைக் கிள்ளாதே”வையோ “மூடுபனி”யையோ அல்லது ஒரு “முள்ளும் மலரும்” போன்ற இசையை எதிர்பார்த்து இங்கு வந்திருப்பீர்களானால் உங்களை ராஜா இந்தத்தடவை திருப்திப்படுத்த மாட்டார் என்றே சொல்லுவேன்.கொஞ்சம் வித்தியாசமாக, கதைக்களனுக்குப் பொருத்தமான இசையாகத்தான் தோன்றுகிறது எனக்கு இந்த “தோனி-நாட் அவுட்”-ன் பாடல்கள் அனைத்தும்.அதிகப்பாடல்களும் இல்லை மொத்தமே நான்கு பாடல்கள்.அனைத்தும் ஒவ்வொரு […]
A Life Full Of Love பியானோவின் நோட்ஸுடன் தொடங்கிப்பின் அதே நோட்ஸ்களை வயலின் இசையோடு தொடரும் தீம் ம்யூஸிக், கொஞ்சம் சைனீஸ் டச்சுடன் ஒலிக்கத்தொடங்கி , தொடர்ந்தும் நம்மை கூடவே அழைத்துச்செல்கிறது. ரஹ்மான் சொல்லுவார் அதிகமா சைனீஸோட இசையில சிந்துபைரவி ராகம் கொஞ்சம் அதிகமாகவே பயன்படுத்துவாங்கன்னு, அதோட அவங்க இசையின் அடிப்படையும் அதுவாவேதான் இருக்கும், கொஞ்சம் விவரம் தெரிஞ்சவங்க சொல்லுங்க இதுல சிந்துபைரவி டச் இருக்கான்னு. இன்னும் தொடர்ந்தும் கேக்கும்போது எனக்கு யானி’யோட Tribute-ம் , […]
எழுதிக்கொண்டிருந்த கவிதையை தென்றல் அடித்து கலைத்துக்கொண்டிருந்தது எழுதி முடித்த சொற்களின் மேல் பல இடங்களில் அது தன் புள்ளிகளை கோலங்களை இட்டுச்சென்றது சில வரிகளில் சந்திகளில் ஒற்று மிகுந்து அவற்றை வலுவாக்கியது சில வரிகளில் ஒற்றுகளை சேதப்படுத்தி சொற்களைத் தனிமையில் நிற்கச்செய்தது. இப்படி எல்லாம் செய்த தென்றல் பாதியிலேயே விட்டுச்சென்றுவிட்டது கவிதையை முடித்து வைக்க இன்னொரு தென்றலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் யாரேனும் அதைக்கண்டால் கொஞ்சம் என்னிடம் அனுப்பி வையுங்கள். […]
கற்பனைல நடக்கிறதயும், நனவில நடக்கிறதயும் பிரித்துப்பார்க்க இயலாத ஒருவனின் கதை இந்த (Delusional குரு) மௌனகுரு.(அப்டியே வெச்சுக்கலாம் அதான் நல்லது) “போலீஸ் அவர ஃபாலோ பண்றதாகவும், கண்காணாத இடத்துக்குக் கூட்டிட்டுப் போயி தன்ன என்கவுண்டர் பண்ண முயற்சிக்கிறதாகவும் , அவரா கற்பனை பண்ணிக்கிட்டு தன்னையும் குழப்பிக்கிட்டு, அதோட கூடவந்த இன்னும் ரெண்டு பேர தன் கண் முன்னாலயே போலீஸ் என்கவுன்ட்டர் பண்ணீட்டதாகவும் சொல்லிட்ருக்கார். இத சீக்கிரமே குணப்படுத்தீரலாம், நீங்க நினைக்கிற அளவுக்கு இது பெரிய பிரச்னையில்ல, கல்லத்தூக்கி […]
சிலிக்கான் சில்லில் சேமித்து வைக்காத எதுவும் நினைவிலிருப்பதில்லை இரண்டையும் நான்கையும் கூட்ட கை விரல்கள் நீட்டி யாரும் முயற்சிப்பதில்லை மின்தூக்கிக்கென அரை மணி நேரம் காத்திருப்பினும் நான்கே நான்கு படிகள் ஏறிச்செல்ல யாருக்கும் முடிவதில்லை. ஃபேஸ்புக் நினைவூட்டாவிடில் தனது பிறந்தநாளை யாரும் கொண்டாடுவதேயில்லை. தீர்ந்துவிட்ட எரிவாயு உருளைக்கு பதிவு செய்ய செல்பேசி நினைவூட்டாவிடில் இயல்வதில்லை இவையெல்லாவற்றையும் அதிகாலையில் நினைவூட்ட அலாரம் இன்றி எழ முடிவதில்லை – சின்னப்பயல் ( chinnappayal@gmail.com )
மீன் குழம்பு என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும், மீன் குழம்பை புளிப்பா காரசாரமா சுள்ளுன்னு வைக்கணும் என்பார்கள். கர்ப்பிணி பெண்கள், ஜுரம் வந்து வாய் கசந்தவர்கள், பியர் குடித்தவர்கள், என எல்லோருக்கும் ரொம்பப் பிடிக்கும், மீன் உணவு ஒன்று தான் வெயிட் போடாதது, எவ்வளவு வேண்டுமானாலும், எந்த ஊர் போனாலும் சாப்பிடலாம். அதில் இது ஒரு ஈசியான முறை. மீனை கடைசியில் தான் போடணும் இல்லை என்றால் குழைந்து விடும். தேங்காய் பவுடர் இல்லாதவர்கள், தேங்காய் பத்தை நான்கு […]
ஹஜ்ஜுக்கு பயணிக்க நினைக்கும் ஒரு முதியவனின் கதை.அத்தரும் ஜவ்வாதும் விற்றுக்கொண்டு பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் சலீம் அவர் மனைவியுடன் ஹஜ் பயணத்துக்கு தயார் செய்வதை சித்தரிக்கும் படம்.மது அம்பாட்டின் ஒளி ஓவியத்தில் நம்மையும் கேரளப்பசுமையை ரசிக்கவைத்துக்கொண்டே பயணத்தை எந்தவித வியாபார நோக்கமில்லாமல் வெகு இயல்பாக சித்தரிக்கிறார் இயக்குனர். பாங்கு ஒலி கேட்டு நான்கு மணிக்கு எழுந்து ஸுபஹு’வுக்கு செல்ல கிணற்றடியில் குளித்துவிட்டு தொம்தொமென்று மரப்படிகளில் ஏறும் தம்பி அந்தோணிக்கு வாய்க்காதது , “இண்ணல ராத்திரி முழுவன் வயிற்றிலெ வாயு […]
எனது தேவைக்கென பிரதிகள் எடுத்துக்கொள்ள வசதியாய் நெகட்டிவ்கள் சேமித்து வைக்கிறேன் பிறர் அவ்வளவு விரைவில் அறியாவண்ணம் அவற்றைப் பெட்டகத்தினுள் சேமித்து வைக்கிறேன். அந்த நெகடிவ்வின் அருகில் புதிதாக எடுக்கப்பட்ட பாஸிட்டிவ்வை வைத்து நோக்கும் போது இன்னும் பொலிவுடன் நெகட்டிவ்வே பரிமளிக்கிறது எத்தனை பாஸிட்டிவ்கள் உண்டாக்கப்படினும் நெகட்டிவ்வில் உள்ள பூதம் போன்ற பிம்பமே மனதில் பாசி போல் படிந்து கிடக்கிறது. நாட்கள் கடந்து போவதால் நெகட்டிவ்களின் மேல் உண்டாகும் சிறு கறைகள் மேலும் அதன் மீதான ஞாபகங்களை வலிய […]
சிலந்தி வலையில் சிதறித்தெளித்த மழைத்துளி சிறைப்பட்டுக்கிடந்த சிலந்தியின் கால்களையும் நனைத்திருந்தது ஈரம். குடித்துவிட்டுக்கீழே வைத்த உள்ளிருப்பவை வெளித்தெரியும் கண்ணாடிக்குவளையில் அடியிலிருந்து மேலே வந்த மீதமுள்ள நீர் சிறு பாசிமணிகள் போல் அதன் சுவரில் ஒட்டிக்கொண்டிருந்தது கண்ணாடிக்குள்ளும் ஈரம். அடித்துப்பெய்த மழையின் சாரல்கள் என் ஜன்னல் கம்பிகளிலும் தொக்கி நின்று கொண்டிருக்கின்றன. இரும்புக்கம்பிகளிலும் ஈரம். – சின்னப்பயல் (chinnappayal@gmail.com)