இலையுதிர்காலத்தின் பிற்பகுதியில் டர்னிப் இலைகள் கருகிப் போயிருந்தன ஜன்னல் எரிந்து கொண்டிருந்தது. அறையைப் புகை நிறைத்தது. ரத்தச் சிவப்பாயிருந்த ஒரு ரோஜாவின் இதழைப் பிய்த்துச் சாப்பிட்டேன் புகைபோக்கியில் புகைக்குப்பதில் ரத்தம் வந்து கொண்டிருந்தது. ஸ்தாரே மெஸ்தோ’வின் தெருக்களில் ஒரு கசாப்புக்காரனிடம் இரந்து பெற்ற ஒரு ராத்தல் மாட்டிறைச்சி மெல்லக் காய்ந்து ஈக்கள் மொய்த்துக்கிடந்தது. எழுதுவது என்பதே ‘இயற்கையான வகையில் வயோதிகத்தை அடைவதாகும்’ என்று கஃப்கா என் காதுகளில் ஓதிக்கொண்டே எழுதியவற்றை தானே […]
முருங்கைக்காய் வாங்கிக்கொண்டு வரும் எண்பதுகளின் வாத்தியார் பாக்யராஜ் ,தான் அப்போது சென்ற கிராமத்துக்கு தமது மகனை அனுப்புகிறார். வழக்கம் போல கிராமத்துக்கு செல்ல மாட்டேன் என்று அடம் பிடிக்கும் மகனாக விமல்.பொட்டக்காட்டில் புழுதி பறக்க வந்திறங்குகிறார் தனது அரசாங்க வேலைக்கும்,Certificate-க்குமாக. “இதுஹள்லாம் படிச்சு என்ன கலெக்டர் வேலைக்கா போஹப்போகுதுஹ.? பொழப்பப்பாருங்க வாத்யாரே” என்று டிப்பிக்கல் வில்லனாக வரும் பொன்வண்ணன். அவரும் அவரது அடியாட்களும் வரும் எல்லாக்காட்சிகளிலும் கட்டியிருக்கும் வேட்டி சட்டையில்,ஒரு துளிகூட மண்தூசு ஒட்டாமல் வந்து செல்கின்றனர்.அத்தனை […]
இந்த அப்பட்டமான Alfred Hitchcock- ன் காப்பி படத்துக்கு விமர்சனம் எதுக்கு ? அப்டீன்னு முன்முடிவோட படம் பார்க்கப்போன என்னை தனது வலுவான திரைக்கதையால விமர்சனம் எழுத வெச்ச இயக்குனர் ராஜன் மாதவ்’விற்கு வாழ்த்துக்கள். எல்லாமே சரியா திட்டமிடப்படுது , எங்க திரும்பணும், எப்ப அடிக்கணும்,எப்ப சுடணும் என எல்லாமே கரெக்ட்டா எழுதி, ப்ளான் பண்ணி ஒரு கொலையைப்பண்றத காகிதத்தில் எழுதி வைத்துக்கொண்டு , Plan B கூட வைத்துக்கொண்டு ,திரையில் காட்சிகளை நகர்த்தி , […]
அம்மணக்குண்டியுடன் அலைந்து திரிந்து கொண்டிருக்கும் ஊரிலுள்ள அனைவரும் ஆபத்பாந்தவர்களான அடிடாஸு’ம் ,ப்யூமா’வும் வந்து தம் மானம் காக்க வேண்டி நிற்கின்றனர் தங்கம் தவிர்த்த வேறு உலோகங்கள் மனித இனத்திற்குக்கிஞ்சித்தும் பயனற்றவை ‘ஆதலால் காதலை’ச்சொல்ல இப்போதெல்லாம் ஆதாமும் தங்கம் தேடி அலைகிறான். வெள்ளாவியில் வைத்துத் துவைத்ததால் போகாத அழுக்குடன் எல்லோரும் வாழ்நாள் முழுதும் மல்லுக்கட்ட இயலாமல் ஒரு தேக்கரண்டி பொடி தேடி அலைகின்றனர் வெள்ளை உள்ளம் படைத்தவரை இனங்கண்டுகொள்ள அவரின் முகமும் செயற்கை வெள்ளையாய் […]
அசையும் புழுவுடன், அசைவற்ற மீன்தூண்டில் நரம்பு அனங்குவதற்கென மழிக்கப்பட்டிருந்த தலையுடனும், பழைய தாமிர உலோக நிறத் தோலுடனும். காத்திருந்தான் ஒரு கற்சிலை போல் நீருக்குள்ளிருந்த மீன் அவனைத்தனது வாலை மட்டும் அசைத்துக்கொண்டே பார்த்துக்கொண்டிருந்தது. வாலசைவால் சலனப்பட்ட நீர் புழுவையும் சிறிது அலைபாயச்செய்தது ஏதுமறியாத புழு ,மீனின் கண்களை உற்று நோக்கியவாறு வளைந்து நெளிந்து கொண்டிருந்தது. கலங்கிய நீர்த்திரைகளினூடே அவனால் அக்காட்சியைக்காண இயலவில்லை. பின்னர் அதிவேகமாக மீன் தனது வாலைச்சுழற்றி தூண்டில் நரம்புடன் மீனவனை உள்ளுக்கிழுத்து […]
எதையும் யோசிக்காதபோதும், எதையும் செய்ய,செய்விக்க இயலாதபோதும், ஒரு பாடலையும் பாடாதபோதும், என் கிட்டாரின் மெல்லிய விள்ளல் இசையை என் விரல்களால் தூண்ட இயலாதபோதும், என் கவிதைகளில் காதல் இல்லாதபோதும், என் கண்களில் ஈரம் குறையும் போதும், என்னைச்சுற்றி நடப்பவை பற்றி எனக்கு சிறிதும் அக்கறையில்லாத போதும், எனக்கென சாலையோரப்பெட்டிக்கடைக்காரன் ரொட்டியை மீதம் வைத்திருக்காத போதும், தூரத்தில் ஒலிக்கும் தடதடக்கும் ரயிலின் ஓசை சட்டென மறையும் போதும், என்றும் வரும் என நம்பிக்காத்திருந்த மழைக்குருவி […]
பணம் மட்டுமே குறிக்கோளாய்க்கொண்ட ஒரு சமூகம்.அதையே இந்தப்படத்தை பார்ப்பவருக்கும் எடுத்திருப்பவர்களுக்குமான மையக்கருத்தாக வைத்து,எப்படியேனும், வலிக்காமல், அதற்கென பெரும் முயற்சி என்று எதுவும் செய்யாமல் , குறுக்கு வழியில்”Easy Money”யை அடைந்து விடத்துடிக்கும் ஒரு கூட்டம் என்ற எதிர்மறை எண்ணங்கள் கொண்ட நால்வர் – அஜித்’தோடு ஐவர்,என ஒன்று கூடிச்சேர்ந்து கொண்டு யாருக்கோ சொந்தமான பணத்தை அடி’த்துச்செல்லுவதை கொஞ்சம் மிரட்டலாகவே சொல்லியிருக்கிறார் பிரபு வெங்கட். பணம் , பணம் , பணம் இதுவே தாரக மந்திரம் காதோரத்தில் சிறிது […]
அடுத்து என்ன பாடல் ஒலிக்கும் என்ற மன நிலையுடன் உள்ள வானொலி ரசிகனைப்போல உனது அடுத்த வார்த்தைகளுக்கென ஆவலுடன் காத்திருக்கிறேன். அவர் எழுதிய கவிதைப்புத்தகம் எங்கே கிடைக்கும் என்று எழுத்தாளனிடமே கேட்பது போல உன்னைப்பற்றிய கவிதை எங்கே கிடைக்கும் என உன்னிடமே கேட்கிறேன் பத்திரிக்கைகள் ஏதுவாயிருப்பினும் அவற்றின் தலையங்கங்கள் தனித்தமிழில் மட்டுமே வருவது போல கடிதங்கள் ஏதுவாயிருப்பினும் உனக்கென எழுதும்போது நானதில் காதல் மட்டுமே எழுதுகிறேன். என்னைச்சுற்றி பல மொழிகள் பேசப்படினும் என் எண்ணங்கள் தமிழில் மட்டுமே […]
காட்டிலிருந்து வெட்டிக்கொண்டுவரப்பட்ட மரம் காத்துக்கொண்டிருந்தது தன் கதை தன் மேலேயே அவனால் எழுதப்படும் என்று. வெட்டுப்படுதலும் ,பின் துளிர்த்தலும், மழை வேண்டிக்காத்திருப்பதும் வேண்டாத இலைகளைக்களைவதும் அழையா விருந்தாளிகளைத்தாங்கி நிற்பதும், அண்டி வரும் எவருக்கும், யாரெனத்தெரியாமல் நிழல் தருவதுமான மரத்தின் நினைவுகள் மறக்கடிக்கப்பட்டு எழுதுபவனின் அவமானங்களும் மகிழ்வும்,சோகமும் அப்பிக்கொண்டன எழுத்தாக அதன் மேல். மரமும் அதைக்கொஞ்சம் வாசிக்க முயன்று பின் தன்னைத்தானே தேற்றிக்கொண்டது ஏதோ ஒரு வகையில் அவை தன் கதையை ஒத்திருப்பதாக.
கவிதை எழுத அமர்ந்த நான் அதோடு மளிகைக்கடைக்கும் சேர்த்து லிஸ்ட் எழுதிக்கொண்டிருந்தேன் முக்கியமானவை , உடனடித்தேவைகள் முதலில் வைக்கப்பட்டன கொஞ்சம் இருப்பு உள்ளது,பரவாயில்லை வகைகள் அடுத்து இடம் பிடித்தன இன்னும் கொஞ்ச நாளைக்கப்புறம் தேவைப்படுபவை பின் தங்கின எப்போதும் இடம் பிடிப்பவை என்னாலேயே வரிசையின் கடைசியில் எழுதப்பட்டன. எழுதியவை அனுப்பப்படும் இடங்கள் எப்படியோ தவறுதலாக மாறி விட்டது உடனே ஒன்று திரும்ப வந்து விட்டது இன்னொன்றுக்காக காத்திருந்தேன் அது வெளிவந்து விட்டது. – சின்னப்பயல் ( chinnappayal@gmail.com […]