author

சீஅன் நகரம் -5 மதில் மேல் சவாரி

This entry is part 20 of 28 in the series 22 மார்ச் 2015

நாங்கள் விமான நிலையத்திலிருந்து தங்கும் விடுதிக்குச் செல்லும் வழியெல்லாம், சீ’அன் நகரம் மற்ற நகரங்கள் போன்றே அடுக்கு மாடிக் கட்டடங்களை கொண்டதாகவே காணப்பட்டது.  ஆனால் விடுதிக்கு அருகே செல்லச் செல்ல, நகரம் தொன்மை வாய்ந்த பாரம்பரியச் செல்வங்கள் நிறைந்த நகரமாகத் தென்பட்டது. நாங்கள் தங்கிய விடுதி ரென்மின் சதுக்கம் என்று அழைக்கப்படும் கோட்டையுள் நகரமாக விளங்கிய இடத்தில் இருந்தது.  சதுரமான மதில் சூழந்த கோட்டையின் ஒரு வாயில் வழியே நுழைந்தோம்.  அங்கு கண்ட கட்டடங்கள் கீழே நவீன […]

சீஅன் நகரம் -4 டவோ மதகுரு லவோட்சு

This entry is part 16 of 22 in the series 8 மார்ச் 2015

 சீ’அன்னில் பார்க்க வேண்டிய பல இடங்கள் இருக்கின்றன.  ஹவோசான் மலைகள், நீருற்று குளியல் பகுதி, பான் போ அருங்காட்சியகம் என்று பலப்பல இருந்தன.  அதில் எங்களை சீனாவில் இருக்கும் நான்கு பெரிய பாண்டா சரணாலயங்களில் ஒன்றான லுவோ குவான் சின்லிங் மலைப்பகுதியில் இருக்கும் பாண்டா சரணாலயம் மிகவும் கவர்ந்தது.  தங்கையின் மகளுக்கு வயது ஆறு.  அவளுக்கு பாண்டா என்றால் மிகவும் பிடிக்கும்.  குங்பூ பாண்டா படத்தை எப்படியும் 50 முறையேனும் பார்த்திருப்பாள்.  அதிலிருந்து பாண்டாவை பார்க்க வேண்டும் […]

சீஅன் நகரம் -3 உலகின் எட்டாம் அதிசயம்

This entry is part 7 of 26 in the series 22 பெப்ருவரி 2015

  சீ’அன் செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதே, அங்கு அகழ்ந்து எடுத்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த டெரகோட்டா என்று கூறப்படும் களிமண் வீரர்களும், குதிரைகளும், தேர்களும் தான். அதைப் பற்றி அறிந்த சமயத்திலிருந்தே, அதைச் சென்று பார்த்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் அடிக்கடி வந்து போகும். ஹாங்காங்கின் அருங்காட்சியகத்தில் டெரகோட்டா வீரர்களின் உருவங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு பலரும் சென்று கண்டு வந்த போதும், அந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள முடியாத போது, எப்போதாவது […]

சீஅன் நகரம் -2 யுவான் சுவாங்

This entry is part 2 of 24 in the series 8 பெப்ருவரி 2015

சீஅன் நகரம் மக்கள் வெள்ளத்தில் மிதந்து நவீன நாகரிகப் பூச்சுடன் பல வகைகளில் மாறியுள்ள போதிலும், இன்னும் பல இடங்களில் பழமைத் தன்மைகள் மாறாமல் பாதுகாக்கப்பட்டு வருவதை நாம் காண முடிகிறது. எங்களது முதல் நாள் பயணத்தை நாங்கள் பகோடா என்று அழைக்கப்படும் உயர் கோபுர அமைப்புடன் கூடிய புத்த மடமான பெரிய காட்டு வாத்து பகோடாவிலிருந்து ஆரம்பித்தோம்.  அதன் ஏழு மாடிக் கோபுரம் உயர்ந்து நிற்பதை உள்ளே நுழையும் முன்னரே காண முடிந்தது. தா யன் […]

சீஅன் நகரம் – வாங்க.. சாப்பிடலாம் வாங்க

This entry is part 11 of 23 in the series 18 ஜனவரி 2015

நாங்கள் சீஅன் நகரம் செல்லப் புறப்பட்டது மிகவும் எதேட்சயாக நடந்தது. பல வருடங்களாக செல்ல வேண்டும் செல்ல வேண்டும் என்று ஏற்பாடுகள் செய்த போதெல்லாம், அதை சாத்தியப்படுத்த முடியவில்லை. ஆனால் இந்த வருடம் பல மாதங்களாக, கிருஸ்துமஸ் விடுமுறை நாட்களில் எங்காவது செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்த போதும், இந்த இடத்தைப் பற்றி எண்ணவில்லை. எந்தத் திட்டமும் டிசம்பர் 22ஆம் தேதி வரையிலும் தீட்டவுமில்லை. அன்று தான் திடீரென்று பயணம் மேற் கொள்ள வேண்டும் என்ற […]

ஹாங்காங் தமிழ் மலரின் டிசம்பர் 2014 மாத இதழ்

This entry is part 11 of 23 in the series 21 டிசம்பர் 2014

அன்புடையீர், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தமிழ் மலரின் ஓராண்டு நிறைவினை ஆதரவு தந்த உங்களுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம்.   ஹாங்காங் தமிழ் மலரின் டிசம்பர் 2014  மாத இதழ் இதோ உங்களுக்காக!!!   கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி.  770க்கும் அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர்.   தொடர்ந்து அதே ஆதரவினை இந்த இதழுக்கும் தர வேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.   http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot இந்த இதழுக்கு எழுத விரும்புவோர் வரவேற்கப்படுகின்றனர். நன்றி.   சித்ரா சிவகுமார்

ஹாங்காங் தமிழ் மலரின் அக்டோபர் மாத இதழ்

This entry is part 1 of 21 in the series 19 அக்டோபர் 2014

அன்புடையீர், ஹாங்காங் தமிழ் மலரின் அக்டோபர் மாத இதழ் இதோ உங்களுக்காக!!! கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 730க்கும் அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர். தொடர்ந்து அதே ஆதரவினை இந்த இதழுக்கும் தர வேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பி வையுங்கள். http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot ஹாங்காங்கில் வாழும் தமிழர்களில் இந்த இதழுக்கு எழுத விரும்புவோர் வரவேற்கப்படுகின்றனர். நன்றி. சித்ரா சிவகுமார்

கவிக்கு மரியாதை

This entry is part 1 of 24 in the series 8 ஜூன் 2014

  சித்ரா சிவகுமார் யாழி படகு விழா, சீனாவில் டுவன் வூ, கான்டன் பிரதேசங்களில் டுஅன் இம் என்று அழைக்கப்படும் படகுப் போட்டி விழா, சீனாவிலும், ஹாங்காங்கிலும், தைவானிலும் மிகவும் புகழ்பெற்ற நாடறிந்த பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படும் விழா.  சீனர்கள் இல்லாத நாடே இல்லை என்று சொல்லலாம்.  அவர்கள் இருக்கும் அனைத்து நாடுகளிலும் இன்று இவ்விழா சிறப்பாக எடுக்கப்பட்டு வருகிறது என்று கூடச் சொல்லலாம். நம் நாட்டில் கேரள மாநிலத்தில் சிறப்பாக நடக்கும் படகுப் போட்டிப் போன்று, ஆண்டு […]

சீன காதல் கதைகள் 4. வெண்ணிற நாக கன்னி

This entry is part 1 of 22 in the series 18 மே 2014

4. வெண்ணிற நாக கன்னி ஹாங்சாவ் நகரின் அழகே அழகு. அந்த இயற்கை அழகிற்கு அழகு சேர்க்கும் வகையில் மேற்கு ஏரி மிகவும் அகன்ற பரப்பில் பரந்து விரிந்து காணப்பட்டது. அந்த ஏரியின் நடுவே அழகிய பாலம் ஒன்று, மக்களைக் கழிப்பில் ஆழ்த்தி வந்தது. அந்தப் பாலம் உடைந்த பாலம் என்;று அனைவராலும் அழைக்கப்பட்டு வந்தது. கல்லறை சுத்தம் செய்யும் நாளன்று, ஏராளமான பயணிகள் அந்தப் பாலத்தின் மேலும், ஏரியின் நாலாபக்கங்களிலும் வசந்த கால அழகை ரசிக்கவும், […]

சீன காதல் கதைகள் 2. இடையனும் நெசவுக்கன்னியும்

This entry is part 1 of 33 in the series 12 மே 2014

சீனாவின் நட்சத்திர உலகில் பல விதமான நட்சத்திரங்கள் உண்டு. அந்த உலகிற்கு ஒரு பேரரசனும் இருந்தான். அவன் மாணிக்கப் பேரரசன் என்று அழைக்கப்பட்டான். அவனுக்கு ஏழு பெண் குழந்தைகள். அவர்களை பேரரசிப் பாட்டி கவனித்து வந்தார். அவர்களில் மிகவும் புத்திசாலித்தனமான ஒரு மகள், நெய்வதில் திறமை படைத்தவளாக இருந்தாள். அவள் தான் திருவோண நட்சத்திரமான ஜி நு சிங். சொர்க்கத்தில் ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு பணியில் திறமை படைத்தவர்களாக இருந்தனர். ஒரு நட்சத்திரம் இதமான காற்றை வீசி […]