author

பாவங்கள்…

This entry is part 6 of 12 in the series 12 மார்ச் 2017

நாளென்பது கேடாய் நான் என்பது தீண்டதகாததாய் வாழ்வின்று பாழாய் போனது யாருக்கும் இல்லை அபத்தமாய்… ஓடி களைத்ததில் ஒரு மிடறு நீர் கொடுக்க கைகள் இல்லை அன்பென்பது வெறும் வார்த்தையாய்… உண்டு உறங்கி எழுந்து இருந்து மிச்ச சுழற்சியில்  சுழன்று சுழன்று ஓடாய் தேய்ந்தாலும் உயிர் இன்னும் விடாமல் ஒட்டிக்கொண்டே… மதி கெட்ட மனது கையேந்தி கையேந்தி காயங்களைத் தழும்பாக்கிக் கொண்டது புறங்கணிப்பில் மானம் கெட்டு வாழ்வுதனில் சிறுமைப்பட்டு இருத்தலில் பாவங்களைக் கணக்கிட்டு ஆசைகளுக்கெல்லாம் தீயிட்டு வார்த்தைகளையெல்லாம் […]

ஊமை மரணம்

This entry is part 1 of 21 in the series 19 அக்டோபர் 2014

சொற்கள் தேவை இல்லை இனி மௌனங்களை பேச… காதுகளை நீ அடைத்துக் கொண்டாய் நாக்கினை நான் அறுத்து கொண்டேன்… சொற்கள் செவி பறைக் கிழிக்க காதுகளையும் அறுத்துக் கொண்டேன் நான்… கண் அசைவில் மொழி பகிரவும் நீ விரும்பவில்லை விழிகளை துளைத்தெடுத்தேன் எட்டி உதைக்கும் உன் கால்களைக் கண்டேன் என்னை நானே நுடமாக்கினேன் ஊமையாய் , செவிடராய், குருடராய் முடமாய் அசைவற்று நான் நிற்கிறேன் மனம் மட்டும் மரணிக்கவில்லை… – தினேசுவரி, மலேசியா

மீந்த கதை!

This entry is part 6 of 21 in the series 21 அக்டோபர் 2012

வாழ்க்கைக்கு வெளியில் தொலையவோ வாழ்க்கைக்குள் மறையவோ சாத்தியம் எதுவும் இல்லை இங்கு… வாய்வழி சென்றவை பின் வாயில் வெளியேறி மறிக்கப்பட்டும் மறக்கப்பட்டும் பற்கள் இடுக்கில் சிக்கிய உணவு போல ஒவ்வொரு நொடியும் மீந்த கதை சொல்ல மட்டுமே முடிகிறது நம்மால்… தினேசுவரி, மலேசியா    

வம்பளிப்புகள்

This entry is part 30 of 39 in the series 18 டிசம்பர் 2011

-தினேசுவரி, மலேசியா ‘அழிப்பு’க்கும் ‘அளிப்பு’க்கும் இடைவெளி அதிகம் இருப்பினும்.. அளித்து அழிப்பதற்கு இங்கு அழைப்பவர்களே அதிகம்…..   அன்பளிப்புகளில் மூழ்கிப்போக எப்படியோ கண்டுப்பிடித்து விடுகின்றனர் சில ‘வம்பளிப்புகளை’… வம்பாகி போகும் போது தெளிகிறது அளிப்புகளின் இறுதி வாசல் அழிப்பே என்று………   இருந்தும் ‘அளிப்பு’க்கும் ‘அழிப்பு’க்கும் இடைவெளி என்பது அதிகம் தான்…