டாக்டர் ஜி.ஜான்சன் சிங்கப்பூர் தன்னாட்சி பெற்றபோது மக்கள் கொண்டாடினர். அதன் முதன் முதல் அமைச்சர் டேவிட் மார்ஷல் .அவர் ஒரு யூதர். பிரபலமான குற்றவியல் வழக்கறிஞர். ஆனால் அவர் நீண்ட நாட்கள் பதவியில் இல்லை. ஆங்கிலேயர்களிடமிருந்து முழு சுதந்திரம் பெற்றுத் தருவதாக சொல்லி லண்டன் சென்றவர் அதில் தோல்வியுற்றதால் பதவியை இராஜினாமா செய்துவிட்டார். அவரைத் தொடர்ந்து லிம் இயூ ஹாக் முதல் அமைச்சர் ஆனார். அப்போது தொழித் சங்கங்களில் பலம் அதிகமிருந்தது. இவை கம்யூனிஸ்டுகளின் […]
டாக்டர் ஜி.ஜான்சன் நிமோனியா என்பதை சீதசன்னி, சளிக் காய்ச்சல். நுரையீரல் காய்ச்சல் ,நுரையீரல் அழற்சி என்றும் கூறுவதுண்டு ஆனால் நிமோனியா என்பதும் அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நுரையீரல்களின் காற்று பைகளில் கிருமிகளின் தாக்குதலால் உண்டாவது நிமோனியா. இந்த கிருமிகள் பேக்டீரியா அல்லது வைரஸ் வகைகளைச் சேர்ந்தவையாக இருக்கலாம். சில வேளைகளில் இவை காளான்களாகவும் இருக்கலாம். பேக்டீரியா வகையில் முக்கியமானவை ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியே ( Streptococcus Pneumoniae ) , நீமோகாக்கஸ் ( Pneumococcus ) , ஹீமோபிளுஸ் […]
டாக்டர் ஜி.ஜான்சன் நான் மருத்துவராகப் பணிபுரிந்த முதல் இடம் ஸ்வீடிஷ் மிஷன் மருத்துவமனை. அது சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ளது. இது நூறு ஆண்டுகளுக்கு மேலான பழமை மிக்கது. ஸ்வீடன் தேசத்து மருத்துவ இறைத்தூதர்களால் தொடங்கப்பட்டது. தொடக்க காலங்களில் முழுக்க முழுக்க ஸ்வீடிஷ் மருத்துவர்களாலும், செவியர்களாலும் நடத்தப்பட்டு பேரும் புகழுடனும் விளங்கியது. இதை ஆரம்பித்தவர் டாக்டர் கூகல்பெர்க் எனும் கண் மருத்துவர். இதனால் இது கண் ஆஸ்பத்திரி என்றே பல காலமாக அழைக்கப்பட்டது. வெளிநோயாளிப் பிரிவும், […]
டாக்டர் ஜி.ஜான்சன் வாழ்க்கையில் பல சம்பவங்கள் தானாக நிகழ்ந்து நம்மை துக்கத்தில் ஆழ்த்துகின்றன, இவை நிகழாமல் தடை செய்ய நம்மால் இயலாது. இவற்றை நாம் விபத்துகள் என்று கூறி ஆறுதல் அடைகிறோம். இதற்கு ஒரு நல்ல உதாரணம் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் ஏ.எம். ராஜாவின் அகால மரணம். திருச்சி தொடர்வண்டி நிலையத்தில் வண்டி நகர்ந்தபோது ஏறிய அவர் தவறி வண்டிக்கும் பிளாட்பாரத்துக்கும் இடையில் வீழ்ந்து கோர மரணமுற்றார்! காலத்தால் அழியாத இனிய குரலுக்குச் சொந்தக்காரர் ஏ.எம். ராஜா […]
டாக்டர் ஜி.ஜான்சன் பெண்களுக்கு இடது புற நெஞ்சு வலி நெஞ்சு வலி என்றதுமே அது மாரடைப்பாக இருக்குமோ என்ற பீதி உண்டாவது இயல்பே. காரணம் இருதயம் இடது பக்கம் உள்ளது அனைவரும் அறிந்ததே. ஆனால் எல்லா இடது பக்க நெஞ்சு வலியும் இருதயம் தொடர்புடையது என்று கூற இயலாது. அதிலும் பெண்களுக்கு மெனோபாஸ் எய்தும் முன் மாரடைப்பு உண்டாவது குறைவு. காரணம் மெனோபாஸ் வரை ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் நல்ல கொலஸ்ட்டராலைக் கூட்டுவதுடன், தமனிகளில் கொழுப்பு படிந்து அடைப்பை […]
டாக்டர் ஜி.ஜான்சன் மெனோபாஸ் என்பது என்ன? மாதவிலக்கு நின்று 12 மாதங்கள் ஆகிவிட்டால் அதை மெனோபாஸ் என்கிறோம். சராசரியாக பெண்கள் 51 வயதில் இதை அடைகிறார்கள். ஆனால் 45 முதல் 55 வயதிலும் இது உண்டாகலாம்.இதைக் கூற பரிசோதனைகள் ஏதும் தேவையில்லை. மெனோபாஸ் எய்தும்பொது என்ன ஆகிறது? இந்த காலக் கட்டத்தில் பெண்களின் உடலில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகின்றன.ஹார்மோன் அளவில் மாற்றங்கள் ஏற்படுவதால் இவை நிகழ்கின்றன. சில பெண்கள் எவ்வித அறிகுறியும் இன்றி மெனோபாஸ் எய்துகின்றனர்., […]