வரும் மனிதருக்கு வழி சொல்ல சிதற விட்டுச் செல்லும் நம்பிக்கை கற்களில் மூதாதையரின் பல்வேறு முகங்கள். பிரமாண்ட பிரமிட்டின் முனை சிதைந்து காலமா யுருண்டு தரைக்கு வரும் கல். அதை உற்று நோக்கும் ஆய்வின் கண்களில், மேலே சிதைந்த பகுதியில் பட்டுச் சிதறும் கதிரொளி. காலத்தை குத்தி நிறுத்த ஒரு மனிதன் எழுப்பிய பிரமிட்டின் முனையில் அவன் மூக்கு மழுங்கியதாய் எண்ணி வருகிற சிரிப்பு பாலைவனத்தில் எதிரொலிக்கும். குளிரூட்டப்பட்ட பெரிய அறையில் உலகப் பொருளாதாரத்தை ஒரு நொடியில் […]
காகிதத்தில் கற்பனை மடிப்புகள் விரிந்து புதுப்புது உருவங்கள் பார்வையாளர் உள்ளத்தில் மிதக்கும். ஒரிகமி கலைஞனின் மெல்லிய விரலழுத்தத்தில் குதித்தெழுகின்றன குதிரைகளும், பறவைகளும். ஒரே தாளில் தோன்றுகின்ற வியத்தகு உருவங்களை உள்ளத்தில் கசங்காமல் பதித்துக் கொண்ட மக்களின் கரகோஷம் அரங்கைக் குலுக்கியது. சிந்தனையைக் கொட்டி விதைத்து அறுவடை செய்யும் தாளில் பொம்மைகள் செய்யும் பேதமை. கணக்கிட்டு உருவாகும் பதுப்புது வடிவங்களின் மடிப்புகளிலும் ஒடுங்கிப் போகிறது அறிவு என்றது விஞ்ஞான மூளை. பக்கம் பக்கமாய் இயற்கை எழுதி […]
என் இரவின் கழுத்தைக் கவ்விச் செல்கிறது பூனை. நெஞ்சை யழுத்து மந்த இரவினோசை திசையறியாச் சிறகுகளின் படபடப்பு. இருளின் முடியாத சுரங்கக் குழாயினுள் தலையற்ற தேவதை அசைத்துச் செல்லும் வெள்ளை யிறக்கைகளாய் தோட்டத்திலிருந்த வளர்ப்புப் புறாவின் போராட்டம். இறுக்கமாய்ப் பற்றி மரணத்திற்கு அழைத்துப் போகும் சிறு வேட்டை மிருகத்தின் எச்சில் நூல் காற்றில் நீண்டு அறுந்த போது என்னில் ஏதோ ஒன்று தொடர்பிழக்கும். சில நினைவுகளை எட்டி உதைத்துப் புறந்தள்ளி நடக்கும் காலத்தின் பாதங்கள் ஒரு […]
அமீரின் தாத்தா தாடிக்கு வயது எழுபத்தைந்து என்பார் அப்பா. அண்டை வீட்டுத் தாத்தாவின் தாடியலைகளில் மிதப்பது பிடிக்கும் காஷ்மீர் பையனுக்கு. உள்ளே அழுத்தும் துயரங்களைத் தேக்கி வைத்திருக்கும் பள்ளத் தாக்குகளான முகச் சுருக்கங்களுக் கிடையே வெள்ளையருவியாய்த் தொங்கும் தாடி. தாத்தா தன் பேரன் அமீருடன் விளையாடும் போது சிரிப்பார். காஷ்மீர் பையனோ பரமபத விளையாட்டில் பாம்புகளிடையே எப்போதும் உருண்டு கொண்டிருப்பான். “எனக்கும் ஒரு நாள் தாடி வளருமா?” “பரமபத விளையாட்டில் காய்கள் பிழைப்பது பகடைக் காய்கள் […]