புத்தகம் வெளியிட்டுத்தரும் பெரிய மனிதர்கள் எல்லோரும் ஒரு எழுத்தாளனுக்கு சம்பந்திமார்கள். சர்வ ஜாக்கிரதையாய்ப்பழகி வந்தால்தான் உண்டு. உண்டு என்று சொல்லிவிட்டீர்களே அது என்ன என்று என்னைக் கேட்டால் எப்படித்தான் நான் சொல்வது. எழுத்தாளனாய் இருந்து ஒருவன் கொஞ்சம் மொத்துப்பட்டால் மட்டுமே இதுகள் எல்லாம் அத்துப்படி ஆகும். யாருக்கேனும் யான் பட்ட இந்த அவத்தையை உடன் சொல்லிவிடவேண்டும் என்று உறுத்தலாயிருக்கிறதே பிறகென்ன செய்ய. ஆகத்தான் கதை. புத்தக வெளியீட்டாளர்களை எடுத்தேன் கவிழ்த்தேன் என்றெல்லாம் ஒரு எழுத்தாளர் பேசிவிடலாம். அதற்கென்னக் […]
புத்தாண்டு பிறந்த அன்று அதனை வாழ்த்தி வரவேற்பதற்காக அய்ந்துகிலோ பச்சரிசி வாங்கி வண்ணங்கள் பல சேர்த்து அலுவலக வாயிலிலே கோலம் போட்டிருந்தார்கள். கோலம் போட்ட அய்ந்து கிலோ அரிசியும் அய்ந்து ரூபாயுக்கு பெருநகர ரேஷன் கடை வாயிலில் வாங்கியதாம். மத்திய அரசின் ஒரு அலுவலக வாயிலில்தான் அந்த அழகுக்கோலம். அந்தக்கோலம் போட்டவர்கள் ஐவரும் அந்த அலுவலகத்துப் பெண் ஊழியர்கள். அவ்வலுவலக அதிகாரிகள் சிலரும் கூடவே இப்படியும் அப்படியும் அக்கோல கோஷ்டியோடு தொங்கிகொண்டிருந்தார்கள். கம் கணபதியே நம என்று […]
மலையாள மூலம் – ஆர். உன்னி ஆங்கில வழி தமிழில்- எஸ்ஸார்சி பெருங்கடற்கரையா, பாலைவனமா, களர்நிலமா, எங்கிருந்தால்தான் என்ன நடத்தல் மட்டுமே தனிச் சுகம்-தொரயூ அவனிடம் ஒரு சாவி ஒரு கிளிஞ்சல் பச்சையாய் இலையொன்று இருந்தது. அவர்களுக்குச்சோதனையில் அவனிடமிருந்து வெறெதுவும் கிடைக்கவில்லை. அவர்கள் அவனை மாறி மாறித்தான் சோதனை போட்டார்கள். அவனுடைய நரைத்த தலை முடி முகம் தொங்கும் தாடி, வாயொடு குதத்திறப்பு எல்லாமே சோதனைக்குள்ளானது. இதோ தெரிகிறதே காவல் நிலையம் அதன் உள்ளே இருக்கும் ஒரு […]
அவன் மாலை அலுவலகம் முடிந்து தன் கோர்ட்டர்ஸ் வீடு நோக்கிப்புறப்பட்டான்.. கோர்டர்ஸ் பிரதான வாயிலில் அதே மினி லாரியின் உறுமல் ஒலி கேட்டது. ஆமாம் அதே மினி லாரி தான் வந்து கொண்டிருந்தது. ஆசாரி அதனுள்ளாக அமர்ந்துகொண்டிருந்தான். தன் கைகளை அசைத்து வேலை முடிந்து தான் திரும்புவதைச் சொல்லியிருக்கவேண்டும். லாரியின் பின்னாலேயே அவன் தன் டிவி எஸ் வண்டியில் வந்தான். மினிலாரி கோர்ட்டர்சின் வாயில் பகுதியில் முன்பாக நின்றுகொண்டது. ஆசாரி லாரியின் முன்பக்கத்தில் இருந்து இறங்கி வந்து […]
– எஸ்ஸார்சி (குறுநாவல்) அவனும் அவளும் மும்பை சென்று வந்தார்கள். விடுப்புச்சலுகைப்பயணம் என்கிற அந்த வசதியை பயன்படுத்திக்கொண்டுதான். மைய அரசின் ஒரு அலுவலகத்தில் அவன் பணி புரிவதாலே அவர்கள் தந்த சலுகை. நான்காண்டுகளுக்கு ஒரு தடவை பறந்து விரிந்த இந்த இந்திய தேசத்தில் எங்கேயாவது ஒரு ஊருக்கு குடும்பத்தோடு சென்று திரும்பலாம். குடும்பம் என்பது எது என்கிற வினாவுக்கு ச்சரியாக விடை தெரிந்திருக்க வேண்டும். தெரியாவிட்டால் கூட அப்படி ஒன்றும் பாதகம் இல்லை. நீட்டி முழக்கி வியாக்கியானங்கள் […]