குரு அரவிந்தன் இம்முறையும் கனடா தேர்தல் முடிவுகள் ஜட்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்குச் சாதகமாக வந்திருக்கின்றன. இப்படித்தான் வரும் என்று முன்பு எழுதிய கட்டுரையிலும் குறிப்பிட்டது போலவே, நடந்திருக்கின்றது. 170 ஆசனங்கள் இருந்தால்தான் இங்கு தனியாக ஆட்சி அமைக்க முடியும். லிபரல் கட்சிக்கு 156 ஆசனங்களே கிடைத்திருக்கின்றன. ஏனைய எதிர்கட்சிகள் கொள்கையின் அடிப்படையில் ஒன்றுசேர வாய்ப்பில்லை என்பதால், லிபரல் கட்சிதான் இம்முறையும் கனடாவில் சிறுபான்மை ஆட்சி அமைக்க இருக்கின்றது. இச்சந்தர்ப்பத்தில் நடந்த […]
. குரு அரவிந்தன் இவன் இவள் ஐம்பால் பற்றவும், இவள் இவன் புன்தலை ஓரி வாங்குநள் பரியவும், காதல் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது, ஏதில் சிறு செரு உறுப மன்னோ, நல்லை மன்ற அம்ம பாலே மெல் இயல் துணை மலர்ப் பிணையல் அன்ன, இவர் மணம் மகிழ் இயற்கை காட்டியோயே. (குறுந்தொகை – 229 மோதாசனார்) காங்கேசந்துறை சீமெந்து தொழிற்சாலையில் காலைநேரச் சங்கு ஊதியதும், அயலவர்கள் பரபரப்பானார்கள். தொழிற்சாலைக்குச் சொந்தமான குவாட்டேஸில் […]
குரு அரவிந்தன் மகப்பேறு மருத்துவமனைப் படுக்கையில் அரைகுறை மயக்கத்தில் இருந்த நிருவிடம் குழந்தையைக் குளிப்பாட்டிக் கொண்டு வந்து கொடுத்தாள் நர்ஸ். குழந்தையின் முகத்தை உற்றுப் பார்த்தவள், ‘செல்லக்குட்டி கண்ணா’ என்று குழந்தையின் கன்னத்தில் மெதுவாக முத்தம் ஒன்றைப் பதித்து விட்டுக் குழந்தையை அணைத்து முகம் புதைத்து விசும்பத் தொடங்கினாள். ‘அம்மா குழந்தையைக் கொடுங்க நான் வெச்சிருக்கிறேன்’ என்றாள் இக்கட்டான சூழ்நிலையைப் புரிந்து கொண்ட தாதி. ‘நோ.. நோ.. இவன் அவரோட செல்லக் கண்ணன், அவர் வரும்வரை […]
குரு அரவிந்தன் அமீரா தூக்கத்தில் வீரிட்டபடி எழுந்தாள்.‘என்னம்மா என்னாச்சு கனவு கண்டியா?’ அருகே படுத்திருந்த தாய் அவளை அணைத்து ஆறதல் சொன்னாள். ‘டாட் சொன்ன சொல்லைக் காப்பாற்ற இல்லையேம்மா’ என்று சொல்லி விம்மி விம்மி அழுதாள். அவளுக்கு ஆறுதல் சொல்லி அவளைத் தூங்க வைத்தாலும் மெலோடியால் தூங்க முடியவில்லை. மகளை மட்டுமல்ல, தன்னையும் ஏமாற்றி விட்ட துயரத்தில் குலுங்கிக் குலுங்கி அழுதாள். வேகமாக நடந்து முடிந்த எல்லாமே ஒரு கனவு போல அவளது கண்ணுக்குள் நிழலாடியது. 19-3-2020 […]
குரு அரவிந்தன் எழுத்தாளர் திருமதி பத்மா சோமகாந்தன் அவர்கள் புதன்கிழமை 15-7-2020 மாலை கொழும்பில் காலமாகியதாகத் தெரிவித்திருந்தார்கள். இவர் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திருமதி பத்மா சோமகாந்தன், மிகவும் அன்போடும் பாசத்தோடும் பழகக்கூடியவர். மூத்த எழுத்தாளரும், பெண்ணியச் சிந்தனையாளருமான இவர் தனது எழுத்து ஆளுமையால் பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பல கட்டுரைகளை ஊடகங்களில் எழுதியது மட்டுமல்ல, நூலாகவும் வெளியிட்டிருந்தார். ஈழத்து சோமு என்று இலக்கிய உலகில் அழைக்கப்பட்ட திரு. நா. சோமகாந்தன், திருமதி பத்மா சோமகாந்தன் ஆகிய […]
பின்னூட்டங்கள்