author

ஆத்துல இன்னும் தண்ணி வரல….

This entry is part 23 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

    அப்பத்தாவுக்கு உள்ளூர் வைத்தியர் வைச்ச கெடு, ‘அமாவாசை தாண்டுறது கஷ்டம்’. கண்ணும் தெரியல காதும் கேட்கல பேச்சும் கொளறுது முனகல் மட்டுமே வலிக்கூறு தாங்காம. ஏறி இறங்குற நெஞ்சு எப்ப வேணா நிக்கலாம். கண்ணும், உடம்பும், கையும் கெடந்து துடிக்குது எதுக்குன்னு தெரியல. அப்பாவுக்கோ ஆயிரம் கவல. ஆத்துல இன்னும் தண்ணி வரல ! சோத்துக்கு ஒரு வழியும் பொறக்கல ! ஆனாலும் ஆத்தா துடிக்கறது அத விட சோகமில்ல. கண்ணு கலங்கி நின்னு […]

புதிய கட்டளைகளின் பட்டியல்..

This entry is part 36 of 41 in the series 10 ஜூன் 2012

ஒரு வரையறை வைத்துக் கொள்ளமுடியவில்லை உனது எல்லை எதுவென்ற வரைபடத்தை எனது அறைச் சுவரில் ஒட்டி வைக்கிறாய் நினைவுப் படுத்திக் கொள்ளவோ அல்லது ஞாபகத்தில் இருத்திக் கொள்ளவோ புதிய கட்டளைகளின் பட்டியலொன்றை வாசலில் நின்றபடி சத்தமிட்டு வாசித்துச் செல்கிறாய் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு நானும் பின்னிக் கொண்டிருந்த வலையை நிறுத்திவிட்டு சிலந்தியும் வாய் மூடிக் கேட்டுக் கொண்டிருக்கிறோம் ******* –இளங்கோ

உட்சுவரின் மௌன நிழல்…

This entry is part 13 of 33 in the series 27 மே 2012

* இரவின் துளி ஈரம் பரவும் இவ்வறையெங்கும் கணுக்கால் தொட்டு நீளும் யாமத்தின் முதல் கீற்றை ஒற்றியெடுக்கும் உதடுகள் உச்சரிக்க மறுக்கின்றன முந்தையப் பகலை அதன் கானலை நினைவில் மிதக்கும் முகங்களின் நெளியுணர்ச்சிகள் குமிழ் விட்டு வெடிக்கிறது மொழியற்ற மொழியொன்றின் ஆழத்தில் கூரையின் உட்சுவர் சுமக்கிறது கரிய நிழலின் மௌனத்தை ******* — இளங்கோ

நழுவும் உலகின் பிம்பம்

This entry is part 4 of 30 in the series 22 ஜனவரி 2012

இளங்கோ * வெகு நேரமாய் தலையசைத்துக் கொண்டிருந்த பூவில் எறும்பொன்று நடுங்குகிறது வீசும் காற்று புரியாமல் கைவிரித்துத் தாங்கிப் படர்ந்த பச்சைக் காம்பில் சிலிர்ப்போடுகிறது உச்சி நிழல் பிறகு தூறலோடு தொடங்கிய சிறு மழை உருட்டுகிறது துளிகளை அதில் நழுவும் உலகின் பிம்பம் எறும்பின் உடலை வளைத்து கீழிறக்குகிறது மணலில் நெளியும் புழுவைக் கடந்து வெயில் காயும் மேட்டின் துளைக்குள் நுழைய.. பேச்சற்று சொற்ப வெளிச்சக் கீற்றோடு மௌனமாய் அசைகிறது வனம் ******

மரணத்தை ஏந்திச் செல்லும் கால்கள்.

This entry is part 6 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

. * சலுகையோடு நீட்டப்படும் கரங்கள் பெற்றுக் கொள்கின்றன ஒரு கருணையை மரணத்தை ஏந்திச் செல்லும் கால்கள் அடையத் துடிக்கின்றன இறுதி தரிசனத்தை இருப்புக்கும் இன்மைக்குமான பெருவழியில் சுவடுகளாகிறது திரும்புதலின் பாதையும் காத்திருந்து எரியும் தெருவிளக்கும் ***** –இளங்கோ ( elangomib@gmail.com )

சின்னஞ்சிறிய இலைகள்..

This entry is part 4 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

* பிளவுண்ட கரிய அலகில் இரைப் பற்றுதல் துள்ளத் துடிக்க இறுக்குகிறது உயிரை உயிர் வடிவம் கனமெனவோ கனமற்றோ அசைகிறது பசியின் வயிற்றில் மரக்கிளையில் துடிக்கும் சின்னஞ்சிறிய இலைகள் மெல்ல மெல்ல இழக்கின்றன தம் நிறத்தை.. ***** –இளங்கோ

வாக்குறுதியின் நகல்..

This entry is part 11 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

* ஒரு வாக்குறுதியின் நகல் தன்னகத்தே எழுதிப் போகும் சொற்களின் இடைவெளிகளில் உழுகிறது பார்வைகளை அவைச் சொல்லத் தப்பிய தருணங்களை நீட்டும் உள்ளங்கைககள் ஏந்திப் பெற விரும்புவது ஒரு சின்னஞ்சிறிய அறிமுகத்தை மட்டுமே ***** –இளங்கோ

அதிர்ஷ்ட மீன்

This entry is part 1 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

* ஆறடி நீளம் இரண்டடி அகல கடலுக்குள் கட்டைவிரல் அளவில் நீந்தத் தொடங்கிய மீனுக்கு தனக்கெனத் தூவப்படும் பிரத்யேக உணவு உருண்டைகளின் மீது பூசிக் கிடக்கும் அதிர்ஷ்டங்கள் புரிவதில்லை நீள் பாதை நோக்கி மட்டுமே சப்பையாய் வளர முடிந்ததில் ஏற்பட்ட மன அழுத்தத்தைப் போக்க மாதம் இரண்டு முறை வந்து போகும் மன அழுத்த டாக்டர் நிவாரணி ஊற்றிச் செல்கிறார் அம்மீனுக்குத் தெரியவில்லை தன்னால் ஒரு டாக்டர் உருவாகியிருப்பதும் தன் மன அழுத்தத்தால் அந்த டாக்டரின் மன […]

செதில்களின் பெருமூச்சு..

This entry is part 27 of 47 in the series 31 ஜூலை 2011

* பிடித்து உலுக்கும் கனவின் திரையில் அசைகிறது உன் நிழல் நீயுன் தூண்டில் வீசிக் காத்திருக்கிறாய் என் உரையாடலின் உள்ளர்த்தம் சிக்குவதற்கு மரப்பலகைகள் வேய்ந்த பாதையில் ஈரம் மின்னும் அந்தியின் இளமஞ்சள் நிறம் இந்த அறையெங்கும் பரவிய ரகசியத்தின் சங்கேதக் குறிப்புகளை தேடிச் சலிக்கிறேன் மூழ்குகிறது அகாலம்.. சின்னஞ்சிறிய நோக்கும் கூர்மையில் கசியும் கானல் குட்டையில் நீந்துகிறது நமது கண்கள் யாவுமே செதில்களின் பெருமூச்சென எழுதித் தருகிறாய் இந்த மௌன இரவில்.. ***** –இளங்கோ

பயணத்தின் மஞ்சள் நிறம்..

This entry is part 1 of 32 in the series 24 ஜூலை 2011

* மதிய வெயில் கோடுகளாய் குறுக்கே விழுந்திருந்த ஒரு நடைப்பாதைப் பொழுது பயணத்தின் மஞ்சளை கரு நிழல் துரத்துவதை எண்ணியிராத ஓர் எறும்பு மரணத்தின் வடிவத்தை வாசித்துக் கொண்டிருந்த அரைக் கணத்தில் பட்டென்று ஸ்தம்பித்தது கால் கட்டை விரலுக்குக் கீழ் ***** –இளங்கோ