படம் முழுக்க ஒரு வித பாச உணர்வையும், சொந்த ஊர்(தஞ்சாவூர்), சொந்த வீடு போன்ற, வாழ்வோடு பின்னிய சிக்கல் நிறைந்த மனிதர்களின் மன உணர்வுகளை வைத்து, இரண்டு நபர்களின் மேல், கதையின் பாரத்தைப்போட்டு, வண்டியை இழுத்துச்செல்கின்றார் டைரக்டர். திஜாவின் கதைகளில் வரும் மண்வாசனை இதிலும் தெரிகின்றன. வீடு என்பது, வெறும் கல்லும் மண்ணம் கட்டிய வஸ்து அல்ல. அதற்கும் உயிர் உண்டு. அதுவும் அம்மா அப்பாவோடு பேசும். அக்கா தங்கை தம்பியோடு உறவாடும். வளர்க்கும் நாய் பூனையோடு […]
விலாசமில்லா கடிதங்கள் விலகி போன மேகங்கள். ——–‐——————————— தர்மராஜா கோவில் மைதானத்தின் வடக்கு ஒரத்தில் கூத்துக்கொட்டகை எப்போதும் நிற்கும், சித்திரை மாதத்தில். மணி மாமா திரெளபதி ஆட, வர்ண புடவைகளை வெய்யிலில் உலர்த்துவார் வாயில் கறீம் பீடியோடு . கட்டியங்காரனுக்கு பிஸ்மில்லா பிரியாணி வாழை இலையோடு காத்திருக்கும். காளி மார்க் கோலி சோடா பெட்டியில் நிற்கும் வரிசையாக. வாலை ஆட்டும் பேட்டை நாய்கள் எப்போதும் நிற்கும் அவரோடு. குத்தாலம் நல்லக்கண்ணு ஆர்மோனியத்தை ஸ்ருதி பார்ப்பார். மிருதங்கம் சோமு […]
ஜெயானந்தன் நடைப்பயணத்தில் எதிர் திசையில் மழலை ஒன்று கையசைத்து மழலை பள்ளிக்கு தவழ்ந்தது. திரும்பிப்பார்க்கையில் ரோஜா மொட்டவிழ்த்து புன்னகை பூத்தது. முதல் மாடியில் சாருகேசி வீணை வருடினாள். மூன்றாம் மாடியில் மாலி புல்லாங்குழல் தவழ்ந்தது. நேற்று சென்ற அதே பூங்காவிற்கு சென்றேன். கொஞ்சம் பட்டாம்பூச்சிகளும் புறாக்களும் பறந்தன. சில பூக்கள் எனக்காக பூத்திருந்தன. சிலர் அமர்ந்திருந்தார்கள் யாரும் யாரோடும் பேசவில்லை. நான் என் கவிதை பிரசவத்திற்கு தவம் கிடந்தேன். -ஜெயானந்தன்.
ஜெயானந்தன் தர்மராஜா கோவில் மைதானத்தின் வடக்கு ஒரத்தில் கூத்துக்கொட்டகை எப்போதும் நிற்கும், சித்திரை மாதத்தில். மணி மாமா திரெளபதி ஆட, வர்ண புடவைகளை வெய்யிலில் உலர்த்துவார் வாயில் கறீம் பீடியோடு . கட்டியங்காரனுக்கு பிஸ்மில்லா பிரியாணி வாழை இலையோடு காத்திருக்கும். காளி மார்க் கோலி சோடா பெட்டியில் நிற்கும் வரிசையாக. வாலை ஆட்டும் பேட்டை நாய்கள் எப்போதும் நிற்கும் அவரோடு. குத்தாலம் நல்லக்கண்ணு ஆர்மோனியத்தை ஸ்ருதி பார்ப்பார். மிருதங்கம் சோமு கர்ணத்தை சூடேற்றுவார். வாலாஜா வரதராஜன் தவிலுக்கு […]
ஜெயானந்தன் மரத்தின் மடியில் படுத்துக்கிடந்தேன். முகத்தை மூடிய புத்தகம் கனவால் அலைந்த மனசு. சூரியனோடு இலைகள் கொண்ட ஸ்பரிச ஆலோபனைகளின் சங்கீதம் காது மடல்களில் பட்டு உலக மனிதர்களோடு உறவுக்கொள்ள அழைக்கின்றது. விரைந்தோடும் மனிதக்கூட்டம் வணிகப் பாடல்களில் செத்து முடிகின்றது. நடந்து சென்ற தாகூர்தான் என்னை அணைக்க ஓடிவந்தார். அவர் உடல் முழுக்க கவிதை தோட்டம். உள்ளத்திலோ ரவீந்திர சங்கீதம். “நளந்தா அழிந்து விட்டதா” எனக்கேட்டு அழுதார். சாந்தி நிகேதன் கதி என்னவோ எனக்கு தெரியாது. நான் […]
நேற்றைய நடைப்பயிற்ச்சியில் காலில் மிதிப்பட்டது, ஆல விதை என எனக்கு தெரியாது. ஏதோ ஒரு சமயம் அவ்வழி நடந்தேன். வா! என அழைத்து விருட்சமாக, மனதார வாழ்த்தியது வீசும் தென்றலாய். ஜெயானந்தன்
ஜெயானந்தன் உடைந்து போன மேகங்களை பார்த்து, பார்த்து பூரித்தது பூமி. இறுகிப்போன மனங்களில் கூட ஈரம் சுரந்து ராகம் பாடின. பூமியிலே விழுந்த அமிர்த மழை காட்டாறாய் கவிதை பாடி, ஆடிக்கு போட்ட விதை அறுவடைக்கு ஆடின. ஆதிலெட்சுமி கல்யாணத்துக்கு மாப்பிள்ளை வீடு வந்தாச்சு. கோடீஸ்வரன் கோவிலுக்கு பூசைகள் போட கிளம்பியாச்சு தவிலுக்கும்,நாதஸ்வரங்களுக்கும் தூசிதட்டினார் வளையப்பட்டி. ஆடு மேய்க்கும் அன்னத்துக்கும் ஷீட்டி பாவாடை தச்சாச்சு. கரந்தை மூனிஸ்வரனுக்கு படையல் போட்டாள் அன்னக்கிளி.! ஆறு குளம் நிரம்பியாச்சு அயிரை […]
குறுக்கு வெட்டாய் பிளந்து போட்டார்கள். ஓ! வென அலறி தலை சாய்ந்து கிடந்தது உடல் மரம்! தலை ஒரு பக்கம் உடல் ஒரு பக்கம். கா!கா! வென கதறி அழுத காக்காய் கூட்டம். கிரீச்……கீரீச்… என குருவிகள் ஓலம். ட்விட்….ட்விட்…. கருங்குருவி கதறல், டக் டக் .டக்,,,,, என மரங்குத்தி துக்கம். கூடுகளை தேடி தூக்கனாங் குருவிகள் கூட்டம். மரண ஓலம் பூமியெங்கும் மரித்துப்போனது ஆலமரம். மெளனமாய் சினுங்கியது மண்! “எல்லாம் முடிந்துவிட்டது” வேர்! தூரத்தில் புல்டோசர் […]
தொலைந்து போன ஒத்தை கொலுசில்தான் ஜானுவின் வாழ்க்கை நீள்கிறது. முந்தானை முடிச்சில் தொங்கும் பத்து ரூபாயில்தான் சிசுக்களின் மூச்சுக்காற்று தொடர்கின்றது. வறண்டுபோன திண்ணைகளில்தான் தாத்தாக்களின் பெருமூச்சு கேட்கின்றது. பலூன்காரனுக்கு- எப்போதும் பத்துவீதிகளே போதும். பஞ்சு மிட்டாய்க்காரனிடம் எப்போதும் குழந்தைகள். சிவன்கோயில் அய்யருக்கு தட்டுகளில் ஜீவனம். பலாச்சுளை விற்பவனுக்கு பத்து ஈக்கள் சொந்தம். குருட்டு பிச்சைக்காரிக்கு கோவில் வாசலே சுவர்க்கம். வரும்போகும் வாழ்கைக்கு யாரிடம் கேட்பது முகவரி!. […]
யாருமற்ற பெருவெளியில் சுயம்பாய் கிடந்தார் முனி. பக்கத்துல ஓடும் வெண்ணாத்தங்கரை . நீண்டுயர்ந்ந அரசமரம் காலதேவனின் சாட்சியாக. வரும்போகும் தலைமுறைக்கு குலதெய்வம் குடியிருந்த ஊர்க்கதைகள் ஏராளம். சாராயம்,சுருட்டு பொங்க சட்டி, பொரியும் தான் முனிக்கு முடிகொடுத்து ஊர் திரும்பும் ஆசாமிகள். மரத்தசுத்தி மாடுமேய்கும் பெரிசுகளுக்கு கண் எல்லாம் படையல் மேல்தான். சாராய பாட்டில் தேடி கிடாய் கறிக்கும் பருந்தாய் சுற்றும் பரிதாபமாய்! – ஜெயானந்தன்