.பசுமையும் பதற்றமும் சில துளிகள் மழை பெய்தால் கூட வந்துவிடுகின்றன எங்கிருந்தோ தவளைக் குஞ்சுகள். கூட்டமாக அவை குதித்துத் தாவுகின்றன. கும்மாளமிடுகின்றன. சிறிய முன்னங்கால்களால் உடலைத் தாங்கும் அவற்றின் மகிழ்வுக்கெல்லையில்லை. பழுப்பு நிறப் புள்ளிகளாய் …
வாழ்வின் விரிபரப்பு (*சமர்ப்பணம்: சிறுமீனுக்கு) தொடர்ந்து பார்த்துக்கொண்டேயிருந்தேன் தொட்டிமீனை அந்தச் சதுரக் கணாடிவெளியினுள்ளான நீரில் சுற்றிச் சுற்றிப்போய்க்கொண்டேயிருந்ததுமூலைகளில் முட்டிக்கொண்டபடி. எதிர்பாராமல் மோதிக்கொள்கிறதா? ஏதோவொரு தெளிந்த கணக்கிலா? அவ்வப்போது நீரின் மேற்பரப்பிற்கு வந்து குட்டிவாய் திறந்து …
ஓடும் நதியில்தான் எல்லா அசடுகளும் ஓடுகின்றன. கற்பை எண்ணி எந்த பத்தினியும் இறங்க வில்லை ஆற்றில். யோனிக்கழுவ ஒரு கை நீர் போதும் கண்ணகிக்கும், மாதவிக்கும் . கோவலன்தான் யாழை வாசிக்கின்றான் பெண்துணை தேட. …