நாவல் தினை அத்தியாயம் முப்பத்துநாலு CE 5000 வைத்தியர் பிரதி நீலன் ஆல்ட் க்யூவில் இருந்து வந்திருக்கிறார். ஆல்ட் க்யூ அவர் வசிக்கும் பிரபஞ்சமாகும். நாம் இருக்கும் இந்தப் பிரபஞ்சம் காஸ்மோஸ் என்ற பெயர் கொண்டது. ஆல்ட் க்யூ, காஸ்மோஸுக்கு மாற்றுப் பிரபஞ்சமாகும். Alternate Universe. அங்கே மற்றொரு பெருந்தேளரசர், மற்ற குயிலி, மற்றொரு வானம்பாடி, மற்றொரு குழலன் இன்னும் கோடிகோடி உயிர்கள் ஆல்ட் […]
இரா முருகன் நீலன் மறைந்து விட்டார். நீலன் நீடூழி வாழட்டும். விடிகாலையில் குழலன் மின் செய்தி வாசித்தபடி தன் உடம்பைக் குளியலறைக்கு அனுப்பிச் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது குயிலியின் மின்னஞ்சல் வந்தது. ஏமப் பெருந்துயில் மண்டபத்தில் உறக்கத்தில் இருப்பவர் நீலன் இல்லை என்பது குழலனுக்கும் வானம்பாடிக்கும் குயிலிக்கும் மட்டும் இப்போதைக்குத் தெரிந்த உண்மை என்பதால் நீலன் பற்றிய அனைத்துச் செய்திகளையும் இம்மூவரும் மட்டும் பரிமாறிக்கொள்வது நடப்பில் உள்ளது. அவ்வகையில் இன்றைக்கு விடிகாலையில் பெருந்தேளரசர் ஆணைப்படி குயிலி ஏமப் […]
இரா முருகன் பள்ளிக்கூடம் போய்விட்டு வந்தியா, தெருவில் திரிந்து கொண்டிருந்தியா? பத்து பனிரெண்டு வயதுள்ள ஆண் குழந்தைகள் உள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பார்த்துச் சத்தம் போட்டார்கள். காரணம் இல்லாமல் இல்லை. காலையில் ஸ்கூல் போனபோது உடுத்தி விட்ட சுத்தமான யூனிபார்ம் முழுக்க திட்டுத் திட்டாக சாக்கடை வண்டலோடு சாயந்திரம் வந்து நின்றால் சத்தம் போடாமல் என்ன செய்வார்கள். ஓடைக் குழாயில் அடைப்பு நீக்குவது எப்படி என்று சிறப்பு வகுப்பு இருந்தது. ஆசிரியர் எப்படி ஓடைக் […]
நீலன் வைத்தியர் எழுந்து விட்டார். பெருந்தேளர்தம் பேரரசு நடாத்தும் நிலந்தரை எங்கணும் இதுதான் பேச்சு. கரடி குட்டிக்கரணம் அடித்தபடி பறந்ததைக் கூட யாரும் லட்சியம் செய்யவில்லை. போன வாரம் வரை இப்படி ஆகியிருந்தால், எப்படி, கரடி கரணம் அடித்தபடி பறந்திருந்தால் வீடுகளில் கலவி செய்திருக்கும் மானுடரும் வளையில் புணர்ந்தபடி இருக்கும் தேள்களும் ரதி விளையாட்டு நிறுத்தி கரடியின் இடுப்பை ஆர்வமாக நோக்கி, அதற்கு வாய்க்கப்பட்ட பிரம்மாண்டத்தைப் பார்த்து ரசிக்க அங்கங்கே தலையுயர்த்தி நின்றிருக்கும். நீலன் வைத்தியர் […]
இரா முருகன் பெருந்தேளர் மாளிகை விழாக் கோலம் பூண்டிருந்தது. விடியற்காலையில் பெருந்தேளர் சஞ்சீவனி எதிர்கொள்ளுதலைத் தலையாய கடமையாகப் பிரகடனப்படுத்த இருக்கிறார். ஒவ்வொரு குடும்பமும் பெருமகிழ்ச்சியோடு சாவா மருந்து பருகி நீள உயிர்க்கப் போகிறார்கள். குடும்பம் இல்லாத ஒவ்வொரு குடிமகனும் குடிமகளும் சஞ்சீவனி பெருமருந்தை உடலில் ஏற்று மரணமில்லாப் பெருவாழ்வு வாழத் தயாராக இருக்கப் போகிறார்கள். அதிகம் யாரும் செலவழிக்கக் கையைக் கட்டிக்கொண்டு தேளரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. வெறும் ஒன்றரை பைனரி காசு செலுத்தி என்ன என்ன […]
மலைப் பிரதேசத்துப் பறவைக் கூச்சலில் கர்ப்பூரமய்யன் விழித்தெழுந்த பொழுதில் ஆமைகள் பறக்கத் தொடங்கின. திருவல்லிக்கேணியில் இருந்து பெயர் தெரியாத இங்கே வந்து ஒரு வாரமாகி விட்டது. திருவல்லிக்கேணியில் யார் உண்டு கர்ப்பூரத்துக்கு? பெண்டாட்டி கபிதாள் தேள்வளையில் கை நுழைத்து கடுமையான விஷம் உள்புக மூளை செயலற்று நின்றுபோய் இறந்துவிட்டாள். ரெண்டாமத்துப் பெண்டாட்டி பூரணி கிணற்றில் சாடி மரித்தாள். கர்ப்பூரத்தின் ஜீவிதம் தொடங்குவதற்கு முன்பே முடிந்து விட்டது. அப்படியுமா ஒருத்தன் சகல விதமான பிரச்சனைகளில் இருந்தும் தப்பி வருவான் […]
பிரதி நீலன் வைத்தியர் கைகளை ஒன்றோடொன்று இறுகப் பற்றி சிக்கிமுக்கிக் கற்களை நெருங்க வைத்துத் தேய்ப்பது போல் ஏழெட்டு முறை தேய்த்தார். விழித்து மூடிய இமைகள் மேல் வெதுவெதுப்பான உடல் சூட்டோடு அந்தக் கரங்களை விரித்து வைத்து மலர்த்தினார். சுற்றுப்புறம் எங்கும் மூக்கைக் குத்தும் மருந்து வாடையும் இருளின் வாடையுமாக எங்கே தொடக்கம், எவ்விடம் முடிவு என்று புதிரானது. அவர் பெயர் நீலன் தான். யாரோ அவரை பிரதி நீலன் என்று பெயர் சொல்லச் சொல்கிறார்கள். ஆல்ட் […]
மேசை மேல் தலையில்லாத குழலனின் உடல் அசைந்து கொண்டிருக்க தலை அறையை தரையிலிருந்து மூன்றடி உயரத்தில் சுற்றி வந்து கொண்டிருந்தது. அக்ரெலிக் பெயிண்ட் வாடை தூக்கலாக வந்து கொண்டிருந்த இடம் அது. எந்தத் தலைமுறையிலோ அக்ரெலிக் வண்ணம் தேள்க் கூட்டத்துக்கு ஒவ்வாமை தருவதாக குணம் கொண்டிருந்தது. தேளர்கள் நடமாட்டத்தைக் கிட்டத்தட்ட அறவே இல்லாமல் செய்யச் சுவர்களை தினமும் அக்ரலிக் வண்ணமடித்து அந்த வாடை நீங்காமலும் குறையாமலும் கவனம் வைத்திருப்பது வழக்கம். குயிலியின் நாசியில் பலமாக அறைவதாக […]
ஊர்வலம் பிரம்மாண்டமானதாக இருந்தது. கலந்து கொண்ட ஜீவராசிகளில் தரையில் சுவாசிக்க முடியாதவை கூட பெரிய பாலிவினைல் தொட்டிகளில் நீர் நிரப்பி அதில் சுவாசித்து உலாவில் கலந்து கொண்டன. நெருப்பின்றி கந்தக உருண்டைகளை நீண்ட குழாய்களில் நிரப்பி அதிர்வெடிகள் நிலமதிர வெடித்த நூறுகால் பூரான்கள் இரண்டு வரிசையாக அகலவாட்டில் நடந்து வந்தன. இசைக்கருவி எதுவோ நாராசமாக ஒலித்தது. நடுவே இரு குழுக்களாக வெல்வெட் போல் மெத்தென வழுவழுத்த உடல் கொண்ட செவிப் பூரான்கள் அந்த அகண்ட […]
அன்பு நண்பர்களே அறிவியல் தமிழின் அடுத்த பெ.நா.அப்புசாமி பேரா. ஜெயபாரதன் எழுத்துகளைத் திண்ணையில் வாசிக்கத் தவறுவது இல்லை. தமிழில் முதல் தடவையாக முதியோர் இல்லம் சேர்ந்த மூத்தோர் ஒருவரின் (அவரே தான்) முதியோர் இல்லக் குறிப்புகளை அவர் எழுதுவது சிறப்பாக உள்ளது. வானப்பிரஸ்தம் பற்றி விரிவாகச் சொல்லும் இந்த கட்டுரைத் தொடருக்கு என் வாழ்த்துகள். டாக்டர் ஜெயபாரதனுக்கு இன்னுமொரு நூறாண்டு கிளரொளி இளமையோடு சூழட்டும். அன்புடன் இரா.முருகன்