Articles Posted by the Author:

 • மாதிரி மலர்கள்

  மாதிரி மலர்கள்

    ஜோதிர்லதா கிரிஜா   (20.2.1983 கல்கியில் வந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் ”ஞானம் பிறந்தது” எனும்  சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. ஜெயா டி.வி.யில் அதன் தொடக்கத்தின் போது திரைப்படக் கல்லூரி இளைஞர்கள் சிலரால் நாடகமாக ஒளிபரப்பப்பட்டது.)       மீனாட்சியம்மாள் முந்திய இரவு முழுவதும் கண்ணைக் கொட்டவில்லை. உள்ளத்தில் உறைந்திருந்த பரபரப்பின் விளைவாக என்ன முயன்றும் அவளால் தூங்கமுடியவில்லை. இவ்வளவுக்கும் மறு நாளுக்கு எக்கச்சக்கமான வேலைகள் காத்திருந்தன. இருந்தும், முந்திய இரவு உறங்காத களைப்பு ஒரு சிறிதுமின்றி […]


 • சன்னல்

  சன்னல்

  ஜோதிர்லதா கிரிஜா (குங்குமம் 2.9.1988 இதழில் வந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் மகளுக்காக எனும் தொகுப்பில் இடம் பெற்றது.)        எதிர் வீட்டு மாடி சன்னல் எப்போதும் திறந்தே இருந்தது. முன்பெல்லாம் அவ்வாறு திறந்திருந்தது குறித்துச் சங்கரகிருஷ்ணனுக்கு மறுப்பு ஏதும் கிடையாது. ஆனால் தம் புது மனைவியைக் கூட்டி வந்து வாழத் தொடங்கியதற்குப் பிறகு அந்தக் கிரிசை கெட்டவன் தன் வீட்டு மாடியறை சன்னலைத் திறந்தே வைத்திருந்ததை அவரால் தாங்க முடியவில்லை. அவனது செயலில் தெரிந்த பண்பின்மை மட்டுமே […]


 • தலைமுறை விரிசல்

  தலைமுறை விரிசல்

    ஜோதிர்லதா கிரிஜா (25.2.1979 ஆனந்தவிகடனில் வந்தது. ஜோதிர்லதா கிரிஜா கதைகள் எனும் கலைஞன் பதிப்பகத் தொகுப்பில் உள்ளது.)        “என்னடி பானு, என்ன பண்றதா யிருக்கே?” என்று கவலையும் வேதனையும் வெளிப்பட்ட குரலில் வினவிய கமலம் மகளின் முகத்தின் மீது தனது நெடிய பார்வையை ஓடவிட்டவாறு அந்த அறையின் வாசற்படியில் நின்றாள்.        பானுமதி திரும்பிப் பார்த்தாள். கையில் இருந்த பேனாவை மூடிவைத்துவிட்டுத் தான் உட்கார்ந்துகொண்டிருந்த நாற்காலியின் முதுகில் நன்றாய்ச் சாய்ந்து பின்னோக்கி வளைந்து கால்களை […]


 • கறிவேப்பிலைகள்

  கறிவேப்பிலைகள்

                ஜோதிர்லதா கிரிஜா (சினி மிக்ஸ் 1.1.1984 இதழில் வந்தது. மனசு எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)       ராணி கண்ணாடிக்கு முன் நின்று தன்னை மறுபடியும் சரிபார்த்துக்கொண்டாள். அவள் மனம் மகிழ்ச்சியில் துள்ளிக் கொண்டிருந்தது. எத்தனை ஆண்டுகளாகக் கண்டு வந்த கனவு இன்று நினைவாகப் போகிறது! அதிலும் அவள் இதற்கு முன்னால் பார்த்து வந்த தொழிலுக்கு ஏற்ப – அவளது தொழில் சாமர்த்தியம் முழுவதையும் […]


 • சீதைகளைக் காதலியுங்கள்

  சீதைகளைக் காதலியுங்கள்

      ஜோதிர்லதா கிரிஜா (26.12.1975 தினமணி கதிரில் வந்தது. தொடுவானம் எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றது.)        காலை எட்டு மணிக்குப் படுக்கையை விடு எழுந்த ரவி ஏழு மணிக்கெல்லாம் தன்  வேலை நிமித்தமாக நண்பன் ஒருவனைச் சந்திப்பதாக இருந்தது நினைவுக்கு வந்தவனாக மிகவும் சலிப்புற்றுப் போனான். அந்த நண்பன் தனக்குத் தெரிந்த ஒரு பெரிய செல்வந்தரிடம் அவர் கம்பெனிகளில் ஒன்றில் அவனுக்கு வேலைக்கு ஏற்பாடு செய்வதாகச் சொல்லியிருந்தான். அதற்கு முந்திய […]


 • தேர்வு

  தேர்வு

                           ஜோதிர்லதா கிரிஜா   (1984 அமுதசுரபி தீபாவளி மலரில் வந்தது. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்-இன் “அதென்ன நியாயம்?” எனும் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றது.)         ஜெயராமன் யோசித்துக் கொண்டிருந்தான். தனக்கு வரப்போகிற மனைவியைப் பற்றி, அவளுடன் தான் நடத்தப் போகிற இல்வாழ்க்கையைப் பற்றி, அவளுக்கும் தன் குடும்பத்தினருக்கும் இடையே நல்ல படியாக உறவு ஏற்படுமா என்பது […]


 • கணக்கு

  கணக்கு

  ஜோதிர்லதா கிரிஜா   (18.3.2005 குங்குமம் இதழில் வந்தது. சேது-அலமி பப்ளிகேஷன்ஸ்-இன் “மாற்றம்” எனும் தொகுப்பில் உள்ளது.)        சுமதியின் கலைந்த தலையையும் கழுவப்படாத முகத்தையும் பார்க்கப் பார்க்கப் பாராங்குசத்துக்குப் பாவமாக இருந்தது. நாள்தோறும் அதிகாலை ஐந்துக்கெல்லாம் எழுந்துவிடுகிறாள். மற்ற இரு மருமகள்களைப் போல் அவள் ஓர் அலுவலகத்தில் வேலை செய்து சம்பாதிக்கவில்லைதான்.  ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த பெண். அவர் மூத்த மகன் காதலித்து மணந்த நல்ல பெண். அந்தக் குடும்பத்துள் நுழைந்த நாளிலிருந்து சமையற்கட்டே கதியாய்க் […]


 • கதிர் அரிவாள்    

  கதிர் அரிவாள்    

      ஜோதிர்லதா கிரிஜா (29.8.1982 கல்கியில்  வந்தது.  ஞானம் பிறந்தது எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ் – இன் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றது,)   வள்ளியம்மா, ‘காதுக்கடுக்கன் தாரேன், கெண்டை போட்ட வேட்டி தாரேன், வாங்க மச்சான், வாங்க மச்சான், வாங்க மச்சான் திருநாளுக்கு’ என்று மெல்லிய குரலில் பாடியது கேட்டு முத்தழகு சிரித்துக்கொண்டார். வள்ளியம்மா சாதாரணமாகப் பாட்டெல்லாம் பாட மாட்டாள். வயலில் நாற்று நடும் போதும், கதிர் அறுக்கும் போதும், களத்து மேட்டில் நெல் […]


 • கோவில்கள் யார் வசம்?

  கோவில்கள் யார் வசம்?

    அன்புக்குரிய திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு. வணக்கம். நண்பர் BSV அவர்களின் எதிர்வினைக்கான என் பதிலைக் கீழ்க்காணும் கடிதமாய் வெளியிட வேண்டுகிறேன்:  Thiru BSV  கூறுகிறார்: “அமைச்சர் சொன்னது சரியே காரணம். த​ங்களிடம் கோயில்களை ஒப்படையுங்கள் எனக் கேட்கும் எவரும், கொடுத்தால் நன்றாக நடத்தப்படும் எனபதற்கு என்ன உத்தரவாதம்? Evidence or past experience? வெறும் பக்தி போதுமா? உண்மை என்னவென்றால், எவருக்குமே இக்கேள்விகளுக்குப் பதில் தெரியவில்லை. அவர்களுக்கு முன் அனுபவமும் இல்லை. முதலில் ஒரு ப்ளூ […]


 • விடிந்த பிறகு தெரியும்

  விடிந்த பிறகு தெரியும்

      ஜோதிர்லதா கிரிஜா (20.4.1972 குமுதம் இதழில் வெளிவந்தது. “விடிந்த பிறகு தெரியும்” எனும் தலைப்பை “தர்ம சங்கடக் கதை” என்று மற்றி, குமுதம் வெளியிட்டது. கலைஞன் பதிப்பகத்தின் “ஜோதிர்லதா கிரிஜா கதைகள்” எனும் தொகுப்பில் உள்ளது.)       கையில் பெட்டியோடு நான் தெருவில் நடந்துகொண்டிருக்கிறேன். பெட்டியின் சுமையை விட மனத்தின் சுமை அதிகமாக இருப்பதால், கை நடுங்குகிறது. இடக்கையிலிருந்து வலக்கைக்கும், வலக்கையிலிருந்து இடக்கைக்குமாகப் பெட்டியை மாற்றி மாற்றிச் சுமந்தவாறு நான் நடந்து கொண்டிருக்கும் போது […]