Articles Posted by the Author:

 • அம்மாவின் அந்தரங்கம்

  அம்மாவின் அந்தரங்கம்

             ஜோதிர்லதா கிரிஜா (கண்ணதாசன், ஜூன் 1978 இதழில் வந்த சிறுகதை. “ஜோதிர்லதா கிரிஜா கதைகள்” எனும் கலைஞன் பதிப்பகத் தொகுப்பில் உள்ளது.) நான் அறைக்குள் நுழைந்ததைப் பார்த்ததும், என்னிடமிருந்து எதையோ மறைக்க விரும்பிய அவசரத்துடன் அம்மா அதுகாறும் தான் திறந்து வைத்துக்கொண்டிருந்த பெட்டியைச் சட்டென்று மூடியது மாதிரி எனக்குத் தோன்றிற்று. இதனால் எனக்கு ஒரு வகை ஆவலும் சிறிது அவநம்பிக்கையும் ஏற்பட்டன. ஆனால், அம்மா பெட்டியை அவசரமாக மூடிப் பூட்டியதைக் கவனிக்காதவள் போன்று என் […]


 • அதுதான் சரி !

  அதுதான் சரி !

    ஜோதிர்லதா கிரிஜா   (இதயம் பேசுகிறது இதழில் 1991 இல் வந்த கதை. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் – இன் “அது என்ன நியாயம்?” எனும் தொகுதியில் இடம் பெற்றது.)         கடந்த சில ஆண்டுகளாய்த் தன்னை அலைக்கழித்து வரும் பிரச்சனையின் தீவிரம் அதன் உச்ச நிலையை அடைந்து விட்டார்ப் போன்று, அன்று காலை விழிப்புக் கொடுத்ததுமே வத்சலாவுக்குத் தலைவலி மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. அடிக்கடி அவள் இரவுகளில் சரியாகத் தூங்காமல் நீண்ட […]


 • கடிதம் கிழிந்தது

  கடிதம் கிழிந்தது

      ஜோதிர்லதா கிரிஜா (1.7.1971 கல்கியில் வந்தது. “ஜோதிர்லதா கிரிஜா கதைகள்” எனும் கலைஞன் பதிப்பகத்தின் சிறுகதைத் தொகுதியில் உள்ளது.)       காயத்திரி   அந்த அறையின் கதவைச் சாத்திவிட்டுப் பெரிய நிலைக் கண்ணாடியின் முன் நின்று  தன்னைத்தானே நன்றாகப் பார்த்துக்கொண்டாள். தனக்கு முன்பின் தெரியாத ஒருத்தியின் அழகை ஆராய்வது போன்ற தன் செய்கையில் ததும்பிய கிறுக்குத்தனத்தை நினைத்து அவள் உள்ளுக்குள் நகைத்துக்கொள்ளவும் செய்தாள்.         ‘என் அழகுக்கு என்ன குறைச்சலாம்? கருகருவென்று அடர்த்தியாக இருக்கும் […]


 • எனக்குப் புரியவில்லை

  எனக்குப் புரியவில்லை

      ஜோதிர்லதா கிரிஜா (டிசம்பர் 1977 புன்னகை – யில் வெளிவந்தது. “விடியலின் வருகையிலே” எனும் சேது-அலமி தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)        “பாபு! ஓடாதேடா! ஓரமாப்போ. பாத்துப் போ!”ன்னு அம்மா பஸ் ஸ்டாப்ல நின்னுக்கிட்டு பெரிசாக் கத்தினாங்க. நான் ஓட்றதை நிப்பாட்டிக்கிட்டுத் திரும்பிப்பாத்து, “சரிம்மா,”ன்னு சொல்லிட்டு மெதுவா நடக்க ஆரம்பிச்சேன். அம்மாவுடைய பஸ் வர்றது தூரத்துல தெரிஞ்சிச்சு. நான் நின்னு திரும்பிப் பாத்தேன். அம்மா கையைக் காட்டினதும் பஸ் நின்னிச்சு. அம்மா என்னைப் பாத்துக் […]


 • நீங்க ரொம்ப நல்லவர்

  நீங்க ரொம்ப நல்லவர்

      ஜோதிர்லதா கிரிஜா (2.1.1972 கல்கி-யில் வந்தது.   “இப்படியும் ஒருத்தி” எனும் சேது அலமி பிரசுரம் வெளியிட்ட தொகுப்பில் உள்ளது.)        ‘பாங்க்’கில் ஒரே கூட்டம். மாசக் கடைசியானதால், போட்ட பணத்தை எடுக்கிறவர்களின் நெரிசல் எக்கச்சக்கமாக இருந்தது.        “இப்படி ரெண்டு மூணு பேர் ஒரே சமயத்துலே கையை விட்டா  எப்படி? நான் டோக்கன் நம்பர் சொல்றேன். அதுக்கப்புறம் ஒவ்வொருத்தராக் கையை நீட்டினா எனக்கும் சௌகரியம், உங்களுக்கும் சௌகரியம் …” என்ற பெண் குரல் கணீரென்று […]


 • அறிஞர் அண்ணா போற்றிய அக்கிரகாரத்து அதிசய மனிதர்!

      ஜோதிர்லதா கிரிஜா      புரட்சி எழுத்தாளர் என்று அறியப்பட்ட வ.ரா. எனும் புனைபெயர் கொண்ட அமரர் வ. ராமசாமி அய்யங்கார் மறைந்தது ஆகஸ்டு 1951இல். 1889 இல் தஞ்சாவூர் மாவட்டம் திங்களூரில், வரதராஜ அய்யங்கார்-பொன்னம்மாளின் மகனாய்ப்  பிறந்தவர். காந்தியடிகளால் ஈர்க்கப்பட்ட இவர் 1910 இலிருந்து இந்திய விடுதலை இயக்கத்தில் தீவிரமாக ஈடுபடலானார். 1930-இல் உப்புச் சத்தியாக்கிரகத்தில் கலந்துகொண்டு அலிப்பூர்ச் சிறையில் 6 மாதச் சிறைத்தண்டனைக்கு உள்ளானார். கேதரின் மேயோ எனும் ஆங்கிலப் பெண்மணி இந்தியர்களை […]


 • அறிவும் ஆற்றலும், துணிவும் மிகுந்த  மைதிலி சிவராமன் ஓர் அரிய பெண்மணி

    ஜோதிர்லதா கிரிஜா      தமிழ்நாட்டில் மாதர் சங்கத்தை நிறுவி அதன் தலைவராகவும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத்தலைவராகவும் இருந்த மைதிலி சிவராமன் அவர்கள் கொரோனா பெருந்தொற்று நோய்க்கு ஆளாகி மே மாதம் 30 ஆம் நாளில் தம் 81 ஆம் வயதில் காலமானார். அனைத்திந்தியப் பார்வை மட்டுமின்றி, அனைத்துலக நோக்கும் கொண்டிருந்த அவர் வியட்நாம் போருக்கு எதிரான இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார். அறுபதுகளில் ஐக்கிய நாடுகளின் அவையின் நிரு[பராய்ப் பணியாற்றினார். பின்னர், இந்தியாவுக்குத் திரும்பியதும், இடது […]


 • அதுதான் வழி!  

  அதுதான் வழி!  

                          ஜோதிர்லதா கிரிஜா (குமுதம் சிநேகிதி-இல், 2001 இல் வந்தது. இதழின் தேதி கிடைக்கவில்லை. ‘நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்’-இன் ‘அது என்ன நியாயம்?’ தொகுப்பில் உள்ளது.)       ராஜாத்தி அவசரம் அவசரமாய்ச் சமையற்கட்டுக்குள் நுழைந்த போது கெடியாரம் ஒரு முறை “டங்” என்றது. மணி ஆறரை. அவள் என்றுமே இவ்வளவு தாமதமாக எழுந்ததில்லையாதலால் அவளுக்கு உறுத்தலாக இருந்தது. மாமியார் பங்கஜம் […]


 • இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா?

  இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா?

    ஜோதிர்லதா கிரிஜா ஈஷா யோகா அமைப்பாளர் ஜக்கி வாசுதேவ் கடந்த சில நாள்களாக இந்துக் கோவில்களை அற நிலையத் துறையினின்று விடுவித்துத் தனியார் வசம் ஒப்பபடைக்க வேண்டும் எனும் கருத்தை வெளியிட்டு வருகிறார். அண்மையில் நிதித் துறை அமைச்சர் மாண்புமிகு பழநிவேல் தியாகராஜன் ஜக்கி வாசுதேவ் அவர்களின் கருத்துகளுக்கு எதிரான தம் கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.  அவர் தெரிவித்துள்ள கருத்துகளில் ஜக்கி வாசுதேவ் பற்றிய விமர்சனமே பெருமளவுக்கு இருக்கிறதே தவிர, அவர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு அமைச்சரிடமிருந்து […]


 • துணை

  துணை

      ஜோதிர்லதா கிரிஜா (1975, ஆகஸ்ட் மாத “ரஞ்சனி” இல் வந்தது. “தொடுவானம்” எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ் – இன் தொகுப்பில் உள்ள சிறுகதை.)       சோமையாவுக்குத் திடீரென்று திருமணத்தில் நாட்டம் விழுந்து விட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாகத் தன்னந்தனியாக அவர் வாழ்ந்து வருகிற வாழ்க்கை அவருக்குச் சலிப்பையும் யாருடைய கூட்டுறவையேனும் நாடுகின்ற ஏக்கத்தையும் அளித்துவிட்டது என்பது ஒருகால் அந்த நாட்டத்துக்குக் காரணமாக இருக்கக்கூடும். வயசு ஏற ஏற, இறுதி நாள்களில் தமக்கு ஒரு வாய் […]