கலைச்செல்வி கையை வாய்க்குள் விட்டு எடுக்கலாமா என்றால் அது அருவருப்பாக இருக்கும். சாப்பாடு மேசைக்கான நாகரிகமும் இல்லை. நாக்கால் துழாவ முடிகிறதேயொழிய எடுக்க முடியவில்லை. சட்டை பண்ணாமல் சாப்பிடலாம் என்றாலும் உறுத்துகிறது. இது இவ்வளவு பெரிய விஷயமா..? பருப்பும் நெய்யுமாக ஆரம்பித்திருந்த விருந்தின் சந்தோஷமெல்லாம் இந்த முயற்சியிலேயே வடிந்து விட்டது. இது ஒரு விருந்துக்கான ஏற்பாடு என்றில்லாமலேயே விருந்தாகி இருந்தது. வெள்ளிக்கிழமை. மதிய உணவு நேரம். அலுவலக நண்பன் சந்துருவுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் பாலு. கத்தரிக்காய் சாம்பார், […]
கலைச்செல்வி சுமார் அறுபதை கடந்த நகுலன் குளிர்ப்பெட்டியில் காலை நீட்டிப் படுத்திருந்தார். உயிரோடிருந்த நாளில் .குளிர்சாதனப்பெட்டியின்; வாசத்தையே அறியாதவர். ஆங்காங்கே படிப்பு வாசம் முளை விட்டுக் கொண்டிருந்த கிராமம் அது. இந்துக்களும் கிறித்துவர்களும் அடர்வாக சம அளவில் இருந்தனர். “வேதகாரங்க வூட்டு ஸ்டெல்லா பெரிய ஸ்கூல்ல படிக்க போவுது.. என்னையும் அனுப்பி வுடு..” ரெண்டு மூணு பொம்பளப்புள்ளங்க பன்னெண்டாம் கிளாஸ் வரைக்கும் படிச்சிருக்காங்க. அதுங்களுக்கு மாப்பிள்ளை தேடும்போது ஏற்பட்ட சின்ன தேக்கநிலை நம்ப புள்ளங்களுக்கும் வந்துடக்கூடாதுங்கிற நினைப்பு […]
கலைச்செல்வி ‘ஒரு நாவல் உலகை மாற்றி விடும் என்ற இறுமாப்பு சார்த்தர் காலத்தில் இருந்தது போல இன்று எமக்கில்லை. அரசியல்ரீதியான தமது கையலாகாத்தனத்தைப் பதிவு செய்ய மட்டும் தான் இன்றைய எழுத்தாளர்களால் முடிகிறது. சார்த்தர், காமு, ஸ்ரைன் பெக் போன்றோரை படிக்கும் போது அந்த மகத்தான அர்ப்பணிப்பு மிக்க ஆளுமைகள் யாவரும் மனிதகுலத்தின் எதிர்காலத்திலும் எழுத்தின் வலிமையிலும் எல்லையில்லாத நம்பிக்கை கொண்டிருந்தமையை அறிய இயலும். அந்த எழுத்துகள் யாவும் வழியை துலக்குவனவாக அமைந்தன. இன்றோ சமகால எழுத்தென்பது […]
-கலைச்செல்வி அன்று நிலா மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அது எப்போதாவது தான் மகிழ்ச்சியாக இருக்கும். காலையிலிருந்தே அதற்கான ரகசியங்கள் பொத்தி வைக்கப்பட்டிருந்தன. நிலா வந்ததும் வராததுமாக அந்த ரகசியங்கள் சொல்லப்பட நிலா சட்டென பிரகாசமாக மாறி விட்டது. மாமா வாங்கி வந்திருந்த வளையல், தோடுகள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு கிணற்றடியில் இருந்த துவைக்கும் கல்லில் பரப்பி வைத்திருந்தாள் கல்யாணி. அவள் அணிந்;திருந்த முழுப்பாவாடையும், அதற்கு பொருந்தமில்லாத இறக்கம் இல்லாத சட்டையையும் மீறி அவள் முகம் பிரகாசமாக இருந்தது. […]