குமரி எஸ். நீலகண்டன் இரவு ஒரு மணி… மயான அமைதி… ஆம்புலன்ஸ் சப்தம்… எங்கும் நிசப்தம்… இலைகளெல்லாம் சிலைகளாய் விறைத்து நின்றன.. வாகனங்கள் முக்கி முக்கி முன்னேறிக் கொண்டிருந்தன.. மழை அழுது கொண்டே இருந்தது.. உண்மையை உரக்கச் சொன்னது இயற்கை…. உணவில்லை…உடையில்லை.. பணமில்லை…மதமில்லை சாதியில்லை.. பதவி இல்லை…பகட்டு இல்லை.. ஆண், பெண் பேதமில்லை… மழை தன் கத்தியால் கீறிக் குதறியது.. பூமியை பிய்த்து எறிந்து வீறாப்புடன் என்றோ இழந்த இடங்களையெல்லாம் மீட்டெடுத்தது. இயற்கையின் ருத்ர தாண்டவம்.. மழையின் […]
சங்கம் தழைத்த கூடல் மாநகர் காற்றோடு கூடவே மலர்ந்தது அங்கே ஒரு அற்புத மலர்… அபூர்வமாய் இருந்தது… தாமரையாகவே தெரிந்தது… அதன் இதழ்கள், தண்டு, இலை, வேரெங்கிலும் ஒரு போற்றுதலுக்குரிய ஒரு புனித ஒளியின் பிரவாகத்தை காண இயன்றது… சேறுகளும், சகதிகளும் அதை ஒன்றும் செய்யவில்லை… மீன்கள், தவளைகள், புழுக்கள், பூச்சிகளென எல்லோரையும் அன்பாய் அரவணைத்தது அந்த மலர். அதன் வேர்கள் ஒரு பெரிய தணியா தாகத்துடன் விரிந்து விரிந்து பூமியின் அகல […]
நவ ரத்தினங்கள் போல் ஒன்பது கட்டுரைகளைக் கொண்ட செறிவான நூல் டாக்டர் எச். பால சுப்ரமணியம் அவர்களின் இந்திய மொழி இலக்கியக் கட்டுரைகள் என்ற நூல். பயணமும் இலக்கியமும் ஒன்றோடு ஒன்று பிணைந்த ஒன்று…பயணமே அனுபவமாய் கலைச் சித்திரமாய் இதயத்தில் ஆழமாய் பதிந்து ரத்த நாளங்களில் பிரவாகமெடுத்து அழகான இலக்கியமாய் படைக்கப் படுகிறது.. எழுத்துக்காக தன்னை அர்ப்பணித்து கொண்ட ‘யாத்ரி’ நாகார்ஜூன் எனப்படும் எழுத்துலகப் போராளியின் இலக்கியப் படைப்புக்கள் பற்றிய கட்டுரை நாகார்ஜூன் என்ற ஆளுமையைப் பற்றி […]
குமரி எஸ். நீலகண்டன் ஈரோடு புத்தக கண்காட்சி எப்போதும் நடிகர் சிவகுமாரின் அபாரமான உரை வீச்சிற்காக தனது வாசகர்களுடன் மிகுந்த ஆவலோடு காத்திருக்கும். அதை ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் பெரும்பாலும் விஜய் டிவியில் தீபாவளி திருநாளன்று மக்கள் ஆவலுடன் கண்டு மகிழ்வர். இந்த வருட புத்தக கண்காட்சியில் சிவகுமார் ஆற்றிய உரையின் தலைப்பு வாழ்க்கை ஒரு வானவில். சமீபத்தில் அதன் ஒளிப் பதிவினை கண்டு களித்தேன். சிவகுமாரின் இலக்கியப் பேச்சை காண்பதும் கேட்பதும் எல்லோருக்கும் குறிப்பாக […]
குமரி எஸ். நீலகண்டன் அகமாய் முகம் பார்க்க முயன்றேன்.. முகம் திரும்பவில்லை.. சிரத்தையுடன் முகத்தினை திருப்பிய போதும் முகம் தெரியவில்லை.. உள்ளே இருளாக இருந்திருக்கலாம்… கொஞ்சம் ஒளி வந்த போதும் முகம் முகமாக இல்லை.. அகவிழிகளின் மேல் அழுக்குப் படலம் படர்ந்திருக்கலாம்… அந்தப் படலத்தை கிழித்தெறிந்த போதும் முகம் சரியாகத் தெரியவில்லை. ஒருவேளை மூளை முகத்தின் முகத்தை மறைத்திருக்கலாம்… ஆனாலும் அகமாய் முகம் பார்க்க ஆழமாய் பயிற்சித்துக் கொண்டிருக்கிறேன். குமரி எஸ். நீலகண்டன்
அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய திண்ணை இதழாசிரியர் அவர்களுக்கு வணக்கங்களுடன் நீலகண்டன். படி அமைப்பின் சார்பாக ஜூலை மாதம் ஏழாம் தேதியன்று ஆகஸ்ட்15 நூலின் அறிமுக நிகழ்வு கே.கே.நகர் டிஸ்கவரி பேலஸில் நடக்க இருக்கிறது. அதற்கான அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன். திண்ணை இதழில் அதை பிரசுரித்தால் மிக்க மகிழ்வோம். நன்றியுடன் மிக்க அன்புடன் குமரி எஸ். நீலகண்டன்
கவிதை என்பது பேரனுபவம்… அது படைப்பவனுக்கும் படிப்பவனுக்கும் வாய்க்கக் கூடியது. கதிர்பாரதியின் மெர்சியாவுக்கு மூன்று மச்சங்கள் என்ற நூலில் காணக் கிடைக்காத ஒரு உலகம் காட்சி அளிக்கிறது. ஒரு முரட்டு குதிரையின் வேகத்தில் காட்சிகள் அனுபவங்களை மனதில் வரைந்து செல்கின்றன. அவைகள் வெறும் சித்திரங்களாய் அல்லாது உயிருள்ள உருவங்களாய் நம்மை உணர்வூட்டி அசைத்துச் செல்கின்றன. அன்றாட வாழ்க்கையில் சாமான்ய தொழிலாளரிலிருந்து கணினியிலேயே வாழ்க்கையை நகர்த்துகிற முகநூல் பொழுதுபோக்கி வரை அவர்களின் அன்றாட […]
குமரி எஸ். நீலகண்டன். இதுவென்று எதுவுமில்லை. எதிலும் இது இல்லை. எனதென்று உலகில் எதுவுமில்லை. உனதென்று உலகில் ஒன்று மில்லை.. ஒன்றுமில்லா உலகத்தில் பேருருவுடன் பெருத்த புன்னகையுடன் காத்திருக்கிற ஒன்று அன்பு. பலருக்கும் அது காட்சி அளிப்பதில்லை. சுந்தரம் அவர்களுக்கு மட்டும் அது சூரியனாய் காட்சி அளித்திருக்கிறது. ஒவ்வொரு வீட்டிற்குள் நுழையும் போதும் இருக்கைகள் தெரியும். புத்தகங்கள் தெரியும். பொருட்கள் ஒவ்வொன்றும் தெரியும்… விலை உயர்ந்த பொருட்கள், கலைப் பொருட்கள் சிலர் மனதில் ஆழமாய் […]
சென்னை மியூசியம் தியேட்டருக்கு இம்மாதம் 23, 24 ஆகிய இரு தினங்களும் கடவுள் வந்திருந்தார். சுஜாதா வந்திருந்தார்… நிறைய மக்கள் வந்திருந்தார்கள். பாரதி மணியின் சென்னை அரங்கத்தார் சுஜாதாவின் கடவுள் வந்திருந்தார் நாடகத்தை அங்கே சிறப்புற மேடையேற்றி இருந்தார்கள். இது அறிவியல் சிந்தனையுடன் நகைச்சுவை ரசத்தில் தோய்ந்த சமூக நாடகம் என்பது எல்லோரும் அறிந்த விஷயம். உலகில் என்றுமே நிரந்தரமற்ற சமூக மரியாதையை ஓய்வு பெற்ற ஒரே நாளிலேயே இழக்கிறார் சீனிவாசன். சுஜாதாவின் எதிர்கால மனிதன் புத்தகத்தை […]
சென்னை ஆழ்வார்பேட்டையில் மையம் கொண்டிருந்த புயல் சற்றே வலுவடைந்து மும்பையை நோக்கி சென்றது… இதற்கு விஸ்வரூபம் என்று பெயரிடப் பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தை தவிர்த்து இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. ஓரிரு தினங்களில் தமிழகத்திலும் நல்ல மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. குமரி எஸ். நீலகண்டன்