author

இப்போதைக்கு இது (நடந்து முடிந்த தேர்தலும் ஆட்சிமாற்றமும்)

This entry is part 31 of 33 in the series 12 ஜூன் 2011

எதிர்பார்ப்பும் நம்பிக்கையுமாக தமிழக மக்கள் தங்களிடமுள்ள வன்முறை சாரா எனில் வலுவான ஒரே ஆயுதமான ‘வாக்குரிமையை’ப் பயன்படுத்தி ஆட்சிமாற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறார்கள். மக்களின் வாக்குரிமையை, வாழ்வுரிமையை மதித்துநடக்கக் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதே தோல்வியடைந்தவர்களுக்கும் சரி வெற்றியடைந்தவர்களுக்கும் சரி தேர்தல் தரும் பாடமாக இருந்துவருகிறது. தேர்தல் முடிவுகளை தமிழக மக்களின் தோல்வி என்று திருவாய் மலர்ந்தருளினார் குஷ்பு. இதுநாள்வரை இன்னலுறும் தமிழக மக்களுக்காக நாம் என்ன செய்திருக்கிறோம் என்பதை எண்ணிப்பாராமல் அவர் ’வெயிலே படாமல் அரசியல் நடத்துபவராக இன்றை தமிழக முதல்வர் […]

குழந்தைகளின் நலம் – சமுதாய நலவாழ்வின் அடித்தளம்! (ஸ்ரீ ராம சரண் அறக்கட்டளையின் கல்விப்பணி – ஒரு அறிமுகம்)

This entry is part 36 of 43 in the series 29 மே 2011

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே. அது நல்லவனாவதும், தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே’ என்று எடுத்துச்சொல்லும் ஒரு திரைப்படப்பாடல். எனில், தாய் என்பவளே அவள் சார்ந்த சமூகத்தால் உருவாக்கப்படுபவள் என்பதே உண்மை. இந்த உண்மையின் பின்புலத்தில் பார்க்கும்போது குழந்தை வளர்ப்பில் சமுதாயத்திற்கு உள்ள பெரும்பங்கு புலனாகும்.   சமுதாயமாகிய நாம் குழந்தைகளின் நலவாழ்வில் எத்தகைய பங்காற்றி வருகிறோம்? குழந்தைகளின் சீரிய வளர்ப்பிற்கு உகந்த சூழல், வழிவகைகள் இல்லாத நிலை ஒரு பக்கம். அதே […]

எழுத்தாளர் துவாரகை தலைவனின் இரு நூல்கள் வெளியீட்டுவிழா – சில பகிர்வுகள்

This entry is part 39 of 42 in the series 22 மே 2011

கவிஞர் துவாரகை தலைவனின் முதல் கவிதைத்தொகுதி பீங்கானிழையருவி. பெயருக்கேற்றார்ப்போல் அடர்செறிவான வரிகளும், வரியிடை வரிகளுமாக அமைந்திருந்த இந்தக் கவிதைத் தொகுதி தமிழிலக்கியச் சூழலில் அதிக கவனம் பெறாமல் போனது வருத்தத்திற்குரியது. கவிதையோடு இலக்கியத்தின் வேறுபல பிரிவுகளிலும் கடந்த சில வருடங்களாக முனைப்பாக இயங்கிவரும் துவாரகை தலைவனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு – உள்வெளிப்பறவைகள் மற்றும் கட்டுரைத் தொகுப்பு எழுதிச்செல்லும் நிகழ் கணங்கள் ஆகிய இரு நூல்களும் புதுப்புனல் வெளியீடாக சமீபத்தில் பிரசுரமாகியுள்ளன.     கடந்த 3.4.2011 […]

தானாய் நிரம்பும் கிணற்றடி! கவிஞர் அய்யப்ப மாதவனின் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டுவிழா!

This entry is part 38 of 42 in the series 22 மே 2011

சிலர் எழுதும்போது மலர், இலை, அநித்தியம் என்றெல்லாம் தத்துவார்த்தமாய், கவித்துவமாய் பேசுவார்கள். ஆனால், மற்றபடி, ஒருவிதமான உலகாயுதக் கணிதவழிகளிலேயே நிலைகொண்டவர்களாய் அமைந்திருப்பார்கள். இதில் ஏதோவொரு முரண் உணரும் மனது. ஆனால், சிலர் கவிதைகள் எழுதாதபோதும் கவிதையாகவே திகழ்வதுபோல் ஒரு நெகிழ்வுண்டாக்குவார்கள். கவிஞர் அய்யப்ப மாதவன் இரண்டாம் வகை. உலகம் அன்புமயமாக, பசி, பட்டினி, போர், பச்சைத்துரோகம் என்று எதிர்மறைகள் எதுவுமில்லாமல் எல்லோருமே – அணில், சிட்டுக்குருவி, தும்பி உட்பட – வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று மனதார […]

இலக்கியத்திற்கு ஒரு ’முன்றில்’

This entry is part 36 of 42 in the series 22 மே 2011

முன்றில் (சிற்றிதழ்களின் தொகுப்பு) பேரா.காவ்யா சண்முகசுந்தரம் வெளியீடு: காவ்யா விலை: ரூ 550 முன்றில் தமிழ் இலக்கியச் சிற்றிதழ்களில் முன்னோடி வகையைச் சேர்ந்தது என்றால் மிகையாகாது. 1988 முதல் 1996 வரை 19 இதழ்களாக வெளிவந்து தமிழ்ச் சிற்றிதழ் வரலாற்றில் சிறந்த இடத்தையும், நவீன தமிழிலக்கிய ஆக்கங்களுக்குச் சீரிய தளத்தையும் தந்து நல்லதோர் தமிழ் முற்றமாக விளங்கியது முன்றில். ”இதற்கு தமிழின் தனித்துவம் மிக்க படைப்பாளிகளான மா.அரங்கநாதன், அசோகமித்திரன், க.நா.சு ஆகியோரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது” என்று தொகுப்பின் […]

கவிஞர் கிருஷாங்கினிக்கு புதுப்புனல் விருது

This entry is part 43 of 48 in the series 15 மே 2011

    நவீன தமிழிலக்கியத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய பன்முகம் காலாண்டிதழைத் தொடர்ந்து அதன் பதிப்ப்பாளர் ரவிச்சந்திரனை ஆசிரியராகக் கொண்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக மாத இதழாக வெளிவந்துகொண்டிருக்கிறது புதுப்புனல்! கடந்த 3.4.2011 அன்று புதுப்புனலின் இரண்டு நூல் வெளியீட்டுவிழா நடைபெற்றது. (எழுத்தாளர் துவாரகை தலைவனின் இரண்டாவது கவிதைநூல் மற்றும் அவருடைய கட்டுரைத்தொகுதி). இந்த நிகழ்வின் ஒரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக தமிழிலக்கியவுலகில் கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாகக் குறிப்பிடத்தக்க பங்காற்றிவரும் கவிஞர் கிருஷாங்கினிக்கு புதுப்புனல் விருது வழங்கப்பட்டது! புதுப்புனல் ஆசிரியர் […]