ஹிந்து ஆலயங்களில் பிராமணர் அல்லாதாரை அர்ச்சகராக நியமிக்கும் நடைமுறை செயல்பட முடியாமல் உள்ளதாகப் பலருக்குப் பெரிய குறை இருந்து வருகிறது. இதில் வேடிக்கை, இப்படிக் குறைப்பட்டுக் கொள்பவர் களில் மிகப் பெரும்பான்மையினர் ஹிந்து கோயில்களைப்பற்றி அக்கறை ஏதும் இல்லாதவர்கள். இன்னும் சொல்லப் போனால் ஏதேனும் ஆதாயம் கிட்டுமா என்று தேடுவதற்காகவே ஹிந்து ஆலயங்களுக்கு உள்ளே நுழைபவர்கள். இன்னுமொரு வேடிக்கை இதுபற்றி ஆழமான புரிதல் இன்றியும் தற்போதைய நிலவரம் என்ன என்பதையும் அறியாமல் சிலர் இது பற்றிச் […]
தமிழ் நாட்டில் காங்கிரஸ் மகாசபை அகலக் கால் பதித்து வளரக் காரணமாயிருந்த மூத்த தலைமுறைத் தலைவர்களில் முக்கியமானவரான டாக்டர் பி. வரதராஜுலு நாயுடுவுக்கு மக்கள் அளித்த செல்லப் பெயர் ‘துப்பாக்கி நாயுடு.’ வரதராஜுலு பொதுக் கூட்ட மேடைகளில் பேசுகையில் அடிக்கொருதரம் சுட்டு விரலை நீட்டி, எதிராளிகளுக்கு எச்சரிக்கை விடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்ததுதான் அதற்குக் காரணமாயிருக்க வேண்டும். இந்த சுவாரசியமான தகவலை வ.ரா.வின் ‘தமிழ்ப் பெரியார்கள்’ என்ற நூலிலிருந்து பதிவு செய்திருப்பவர், வரதராஜுலு நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை […]
திடீரென இடீஇடியெனச் சிரித்தார், கவிஞர். அதுவரை நெற்றியில் கோடுகள் விழ யோசனையில் ஆழ்ந்திருந்தவர் திடுமென அப்படிச் சிரித்ததும் எருக்கூர் நீலகண்டனும் கடைய நல்லூர் சங்கர கிருஷ்ணனும் திடுக்கிட்டுப் போனார்கள். அறையில் கவிஞரைத் தவிர்த்து அவர்கள் இருவர் மட்டுமே இருந்தார்கள். மூன்றுபேர் சேர்ந்துட்டாலே அதுக்குக் கூட்டம்னு தான் பேரு. அதுவும் இந்த மாதிரி விஷயங்களுக்கு அவசியமான அளவுக்கு ஆட்கள் இருந்தாப் போதும் என்று சொல்லியிருந்தார், கவிஞர். பிரம்மச்சாரி, நீ வா என்று நீலகண்டனையும் சங்கரா, நீயும் வா. ஆரம்பிப்போம் […]
சமஸ்கிருத அறிஞர் ஸ்ரீ குப்புஸ்வாமி சாஸ்த்ரியார் அவர்களால் 1927-ல் நிறுவப்பட்ட சமஸ்க்ருத ஆய்வு நூலகம் / மையம் சென்னை மயிலாப்பூர் சமஸ்க்ருதக் கல்லூரி வளாகத்தில் இயங்கி வருகிறது. என் தந்தையார்கூடச் சிறிது காலம் இந்நூலகத்தில் கெளரவ நூலகராகப் பணியாற்றியதுண்டு. இந்த நூலகத்தை ஓர் ஆய்வு மையம் என்று சொல்வதே பொருந்தும். சமஸ்க்ருத மொழி தொடர்பாகவும் இந்தியவியல் சார்ந்தும் பல்வேறு ஆய்வு நூல்களை இது வெளியிட்டுள்ளது. தத்துவம், நியாயம், யோகம், கலைகள், இலக்கியம் எனப் பல பிரிவுகளை […]
சென்ற நூற்றாண்டின் தொடக்க காலச் சென்னைக்குக் கொஞ்சம் போய் வருவோமா? 1914-ல் சென்னையை ஒரு நகராட்சி என்றுதான் குறிப்பிட முடியும் என்றாலும் முனிசிபல் கார்ப்பரேஷன் என்றுதான் அப்போதே அது கவுரவமாக அழைக்கப்பட்டது. ஆனால் மாநகராட்சி மன்றத்திற்கு மொத்தம் முப்பத்து ஆறே உறுப்பினர்கள்தான். அவர்களிலும் இருபதுபேர்தான் வாக்காளர்களால் தேந்தெடுக்கப்படுபவர்கள்! ஏனென்றால் அப்போது சென்னை வெறும் இருபது வார்டுகளாகத்தான் பிரிக்கப்பட்டிருந்தது. எட்டு உறுப்பினர்கள் சேம்பர் ஆஃப் காமர்ஸ், ரயில்வே ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள். மேலும் எட்டுபேர் அரசின் நியமன உறுப்பினர்கள். […]
மலர்மன்னன் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியின்போது சென்னை மாவட்ட கலெக்டராகப் பணியாற்றிய ஆங்கிலேயர்களில் ‘சென்னப் பட்டணத்து எல்லீசன் என்பவன் யானே’ என்று தன்னை அறிமுகம் செய்துகொண்ட ஃப்ரான்சிஸ் வைட் எல்லிஸ் (Francis Whyte Ellis) முக்கியமானவர். சென்னையில் திருவல்லிக்கேணி-திருவட்டீஸ்வரன்பேட்டையிலிருந்து அண்ணா சாலைக்குச் செல்லும் எல்லிஸ் சாலை நமக்கு நினைவுறுத்து வது இவரைத்தான் கிழக்கிந்தியக் கம்பெனியில் பணியாற்றுவதற்காக 1798-ல் இந்தியா வந்த எல்லிஸ், பல்வேறு பொறுப்புகளில் இருந்த பிறகு 1810-ல் சென்னை மாவட்டக் கலெக்டர் பதவியை ஏற்றார். தென்னிந்திய […]
பாரத நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தாகிலும் இணையத்தின் வழியாக NEFT மூலம் புதுக்கோட்டை ஞானாலயாவுக்கு நிதி உதவி வழங்க விரும்புவோருக்கு: நூறு ஆண்டுகளுக்கும் முற்பட்ட தமிழ் நூல்களையும் இதழ்களையும், சில முக்கிய ஆங்கில நூல்கள், இதழ்கலையுங்கூடச் சேமித்து வைத்து, ஆய்வாளர்களுக்குப் பேருதவி புரிந்து வரும் புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம் மேலும் சிறப்பாகப் பயன்படும் பொருட்டு இணையத்தின் வழியாகவே NFET மூலம் நிதி உதவி வழங்க விரும்புவோர் பின்வரும் விவரங்களைக் குறித்துக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்: Account Holder: […]
சாதிப் பிரிவுகள் எதுவும் ஹிந்து சமய ஸ்ருதிகளிலோ ஸ்மிருதிகளிலோ குறிப்பிடப்படவில்லை. ஆனால் ஹிந்து சமூகத்தில் எப்படியோ பல நூறு சாதிகள் உட்பிரிவுகளுடன் காலங் காலமாக நடைமுறையில் இருந்து வருகின்றன. வருணாசிரம தர்மத்துக்கும் சாதிகளின் கட்டமைப்புக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது என்று திரும்பத் திரும்ப நிரூபித்தாலும் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் இரண்டையும் ஒன்று படுத்திக் காட்டும் போக்கு இருந்துகொண்டுதான் உள்ளது. ஒவ்வொரு சாதியிலும் பல உட்பிரிவுகள் இருப்பதிலேயிருந்தே குண கர்ம விசேஷப் பிரகாரம் பிரிவுகள் அமைந்த வர்ணாசிரமத்துக்கும் சாதி அமைப்பிற்கும் […]
இதழ்களை வெளியிடும் தொழில் நுட்பம் இன்று எவ்வளோ மாற்றமடைந்து, நவீனமயமாகிவிட்டது என்றாலும் தொடக்கத்தில் அது கடுமையான மனித உழைப்பைச் சார்ந்தே இருந்தது. ஈயத்தில் வார்த்தெடுத்த தனித்தனி எழுத்துகளைப் பொறுமையாகவும் கண்கள் வலிக்க, வலிக்கவும் ஒவ்வொன்றாக எடுத்து அடுக்கி வாசகங்களை உருவாக்கி, ஒரே நேரத்தில் இரண்டு அல்லது நான்கு பக்கங்கள் மட்டுமே அச்சடிக்கத் தகுந்த சட்டங்களில் பொருத்தி, ட்ரெடில் என்கிற ஒற்றைக் காலால் மிதித்து இயக்க வேண்டிய இயந்திரத்தால்தான் ஆரம்ப காலப் பத்திரிகைகளை வெளியிட வேண்டியிருந்தது. இப்படிச் சென்னையில் […]
கடந்த மார்ச் மாதப் பிற்பகுதியில் ஏறத்தாழப் பத்து நாட்கள் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் இலக்கம் 6, பழனியப்பா நகரில் உள்ள ஞானாலயா ஆய்வு நூலகத்தில் அரிய புத்தகங்கள், பழம் பெரும் இதழ்களுடன் உறவாடி மகிழ்ந்து மிகுந்த பயன் அடைந்தேன். அங்கிருந்து பிரிய மனமின்றிப் பிரிந்து வந்தேன். ஒரு நூற்றாண்டுக்கும் முந்தைய அரிய நூல்கள், இதழ்கள் தொடங்கிச் சமீபகால அனைத்து சிற்றிதழ்களும் முக்கிய நூல்களும் ஒருங்கே ஒரே கூரையின் கீழ் படிக்கக் கிடைப்பது கிடைத்தற்கரிய வாய்ப்பு. ஆய்வாளர்களுக்கென்றே அமைந்த இந்நூலகத்தில் […]