1.முடித்தல் தொலைபேசிப் பேச்சை முடிக்கும்போதெல்லாம் என் குரலில் வருத்தம் படிந்துவிடுகிறது மெதுமெதுவாக இறகையசைத்து வானைநோக்கி எழுகிற ஆனந்தம் ஏன் பறந்தபடியே இருப்பதில்லை? இன்னும் நீட்டிக்கும் வாய்ப்புக்காக உன்னுடன் சொல்லிப் பகிர்ந்துகொள்ள நினைவுகளைச் சீய்க்கிறது மனக்காகம் இந்த முறையாவது சிரித்தபடியே விடைதரவேண்டுமென எடுத்த முடிவு பனித்துளியாக விழுந்து கரைந்துபோகிறது சரி, வைக்கட்டுமா என கேட்டே தீரவேண்டியிருக்கிறது திசையெங்கும் திரும்பித் துள்ளிப் பறக்கும் பட்டத்தின் கயிற்றை அறுப்பதுபோல வைத்த பிறகுதான் சொல்ல மறந்த கதையொன்று உதிக்கிறது அடுத்த முறையாவது வருத்தம் […]
பாவண்ணன் ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு திண்ணை இணைய இதழில் மீரான் மைதீன் எழுதிய ஒரு சிறுகதையைப் படித்துவிட்டு, அதைப்பற்றி பல நண்பர்களிடம் திரும்பத்திரும்பப் பேசிக்கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது. அக்கதையின் பெயர் ’மஜ்னூன்’. அரபுமொழியில் அது ஒரு ஏளனச்சொல். பைத்தியம் என்பதுபோல. அரபு சிறையில் அகப்பட்ட ஒருவன், விடிந்தால் தண்டனை என்கிற நிலையில் தன் பிரியமான மனைவிக்குக் எழுதும் கடிதம்தான் அச்சிறுகதை. வேலை தேடிச் சென்ற அரபுநாட்டில், உரிய பதிவுச்சீட்டு இல்லாமல் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு தப்பித்தப்பி ஓடி, […]
1.புன்னகையின் வெளிச்சம் இறவாணத்து மூலையில் ஒரு கையுடைந்த மரப்பாச்சி கிடைத்தது அவளுக்கு கழுவித் துடைத்த தருணத்தில் கருமையின் அடர்த்தி கரைந்து ஒட்டியிருந்த பிள்ளைக் கனவுகள் உதிர்ந்தன ஆனந்தச் சிரிப்புகளும் அளவற்ற ஆசைகளும் பாட்டுத் துணுக்குகளும் பரிகாசப் பேச்சுகளுமாக ஓர் ஊஞ்சல் அசைந்தது ஆதிநாள் தொடங்கி சூரியனைப் பற்றும் விருப்போடும் விண்ணைத் தொட்டு காற்றில் பறக்கும் கனவோடும் குழலாட குழையாட குட்டைப் பாவாடை சரசரக்க ஆடிக் கொண்டிருந்தாள் ஒரு சிறுமி […]
பாவண்ணன் என் மனம் கவர்ந்த மாபெரும் கலைஞர் சார்லி சாப்ளின். அவருடைய வாழ்க்கை வரலாறு இன்றியமையாத ஓர் ஆவணம். இளம்பருவத்தில் அம்மா செல்லும் இடங்களுக்கெல்லாம் கூடவே செல்கிற சார்லி, ராணுவ வீரர்கள் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில், பாதிப் பாடலுக்குப் பிறகு தொடரமுடியாமல் குரல் இடற தடுமாறிய தருணத்தில், சட்டென்று மேடைக்கு வந்து மீதிப் பாடலைப் பாடுகிறான். அதற்குப் பிறகு சார்லி மேடையை விட்டு இறங்கவே இல்லை. பாடல், ஆடல், நாடக நடிகன் என மாறிமாறி மேடையிலேயே சார்லியின் […]
பாவண்ணன் இங்கிலாந்து அரசர் ஜார்ஜ் பெயரைத் தாங்கி அந்தத் தொடக்கப்பள்ளி இயங்கிக்கொண்டிருந்தது. ஏழைப் பிள்ளைகளுக்கு கட்டணம் இல்லாத பள்ளிக்கூடம். நாலரைக்கு கடைசி மணி அடித்ததும் பிள்ளைகள் எல்லோரும் கன்றுக்குட்டிகள்போல வாசலை நோக்கி ஓடினார்கள். விதவிதமான உயரங்களில் விதவிதமான ஓசைகளை எழுப்பியபடி அவர்கள் ஓடியது விசித்திரமாக இருந்தது. குதிரை, யானை, பூனை, கோழி, ஆடு என எல்லாவிதமான விலங்குகளின் சத்தங்களும் அப்போது கேட்டது. ஆனால் ஐந்தாவது வகுப்பு பி செக்ஷன் வீரமுத்து மட்டும் ஓடவில்லை. சத்தம் போடவும் இல்லை. […]
பாவண்ணன் 1980 ஆம் ஆண்டில் தொலைபேசித்துறையின் ஊழியனாக வேலையில் சேர்ந்த காலத்தில் பெரும்பாலும் இரவு நேரப் பணிகளையே நான் தேர்ந்தெடுத்து வேலை செய்து வந்தேன். அரசு போட்டித் தேர்வுகளுக்காக நூலகத்தில் உட்கார்ந்து குறிப்புகள் எடுக்கவும் படிக்கவும் பகல்நேரத்தைச் செலவிடவேண்டிய நெருக்கடி இருந்ததால் இரவு நேரப் பணியே எனக்கு வசதியாக இருந்தது. திருமணமான குடும்பஸ்தர்கள் என்னைப் போன்ற இளைஞர்களுக்கு இரவுநேரப் பணிகளை மாற்றிக் கொடுத்து உதவுவார்கள். என்னோடு நசீர் என்கிற நண்பரும் இரவுப்பணிக்கு வருவார். அவர் […]
மண்ணுலக வாழ்வை நீத்தவர்கள் வாழும் உலகத்தை இலைகள் பழுக்காத உலகம் என மதிப்பிடுகிறது ராமலக்ஷ்மியின் கவிமனம். இன்னொருவகையில் கலைஞனின் அக உலகத்தையும் இலைகள் பழுக்காத உலகம் என்றே சொல்லலாம். எல்லாத் தருணங்களிலும் எண்ணங்களோடு வாழ அந்த உலகத்தில் மட்டுமே சாத்தியப்படுகிறது. குழந்தைமையின் துடிப்போடு அவற்றை அடுக்கி அடுக்கிக் கலைத்து எல்லையற்ற ஊக்கத்தையும் உவகையையும் அடைவதுகூட சாத்தியமாகிறது. தன் எண்ணங்களாலும் கற்பனைகளாலும் தான் கண்டடைந்த அனுபவங்களாலும் தன் அக உலகத்தை அடர்த்திமிக்கதாக கட்டமைத்துக்கொண்டிருக்கிறார் ராமலக்ஷ்மி. அந்த உலகத்தின் […]
ஆங்கில வகுப்புக்கு பாடமெடுக்க அன்று வரவேண்டியவர் சுந்தரராஜன் சார். அவர் விடுப்பில் இருந்ததால் மாற்று ஏற்பாடாக ராமசாமி சார் வந்தார். ‘குழலூதுபவனும் எலிகளும்’ என்றொரு கதையை எங்களுக்கு அவர் சொன்னபோது, அவர் ஏதோ புதுமையாகச் சொல்கிறார் என்றுதான் முதலில் தோன்றியது. குழலோசை கேட்டதும் கூட்டம்கூட்டமாக எலிகள் குழலூதுபவனின் பின்னாலேயே செல்கின்றன. அவற்றை தந்திரமாக ஆற்றுக்குள் இறக்கி இறக்கும்படி செய்து விடுகிறான் குழலூதுபவன். அவன் எதிர்பார்த்த பரிசுத்தொகை மறுக்கப்படுகிறது. மனமுடைந்த பாடகன் மறுநாள் அந்த நகரத்தின் […]
26.03.2014 அன்று காலையில் நண்பர் விஜயன் கைப்பேசியில் அழைத்து தி.க.சி. மறைந்துவிட்ட செய்தியைச் சொன்னார். “தினமணியில செய்தி போட்டிருக்குது. நேத்து ராத்திரி பத்தரை மணிக்கு உயிர் பிரிஞ்சிருக்குதுபோல” என்றார். நான் அப்போதுதான் செய்தித்தாளையும் பாலையும் வாங்கிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தேன். சில நாட்களுக்கு முன்புதான் ஏதோ ஒரு பத்திரிகையில் வரவிருக்கிற தி.க.சி.யின் தொண்ணூறாவது பிறந்தநாள் என்றொரு செய்தியைப் படித்த நினைவை அவருடன் பகிர்ந்துகொண்டேன். பிறகு தன்னையே ஓர் இயக்கமாக உருமாற்றிக்கொண்டு வாழ்ந்த அவரைப்பற்றி சட்டென மனத்தில் உதித்த சில […]
கடந்த ஐந்தாண்டுகளாக கவிதைத்துறையில் தொடர்ந்து உற்சாகத்தோடு இயங்கிவரும் கவிஞர் நிலாரசிகன். ஏற்கனவே அவர் எழுதி வெளிவந்த வெயில் தின்ற மழை, மீன்கள் துள்ளும் நிசி ஆகிய தொகுதிகளைத் தொடர்ந்து இப்போது கடலில் வசிக்கும் பறவை வெளிவந்திருக்கிறது. எதார்த்தக் காட்சியொன்றை மிகுபுனைவின் வழியாக கனவுக்காட்சியாக விரித்தெடுத்து, அக்காட்சியின் சில கோணங்களைமட்டும் சொற்சித்திரமாக முன்வைப்பவை நிலாரசிகனின் கவிதைகள். இந்த இயங்குமுறை, அவருடைய எல்லாத் தொகுப்புகளிலும் திகட்டாதபடி சீரான அளவில் தொடர்ந்து வெளிப்பட்டபடி இருக்கிறது. அந்த சுவருக்கு […]