பவள சங்கரி ”ஐயா.. நன்றிங்க. சாமியாட்டமா வந்து எம்பட குழந்தையை காப்பாத்திப்போட்டீங்கோ… எங்க குலசாமியே நீங்கதானுங்கோ. புருசனும் இல்லாம என்னோட வாழ்க்கைக்கே ஆதாரமா இருக்குற இந்த ஒத்தைப் புள்ளையையும் நோய் கொண்டுபோயிடுமோன்னு உசிரை கையில புடிச்சிக்கிட்டிருந்தேங்க.. மவராசன் ஒத்த காசு கூட வாங்காம எம் புள்ளைய காப்பாத்திப்போட்டீங்க.. உங்க குலமே நல்லா வாழோணும்.. அந்த ஆத்தா மகமாயி உங்க குடும்பத்தையே காப்பாத்துவா” அம்மா.. அம்மா.. எழுந்திருங்க . இப்படி காலில் எல்லாம் விழாதீங்க. பையனுக்கு மருந்து மாத்திரையெல்லாம் […]
வழி – கலீல் ஜிப்ரான் குன்றுகளின் மத்தியில், தம் தலைப்பிள்ளையான ஒரே மகனுடன் வாழ்ந்து கொண்டிருந்தாள் ஓர் பாவை. மருத்துவர் ஆங்கே நின்று கொண்டிருக்கையிலேயே, அக்குழந்தை இறந்தது ஓர் காய்ச்சலினால். அந்தத் தாயவள் வேதனையினாலே. மனம் குழம்பிப் போனாள் அம்மருத்துவரிடம், “சொல்லுங்கள், சொல்லுங்கள் அவனது செயல்களை முடக்கிப்போட்டதோடு, அவனுடைய இனிய கானத்தையும் அமைதியாக்கியது எது?” என்று பதறினாள். அந்த மருத்துவரோ, ”அது அந்தக் காய்ச்சல்தான்” என்றார். மேலும் அந்தத் தாய், “ஏன் அந்தக் […]
கேப்டன் லட்சுமி சேகல் (1914 – 2012 கேப்டன் லட்சுமி சேகல் சென்னையில் பிறந்து, மருத்துவராகப் பணியாற்றியவர், சுதந்திரப் போராட்ட வீராங்கனை. இந்திய அரசின் மிக உயரிய விருதான பத்மபூஷண் விருது பெற்றவர். 1914ம் ஆண்டு, அக்டோபர் திங்கள் 24ம் நாள் சென்னையில் (அன்றைய மதராஸ் பட்டிணம்) பிறந்தவர், இவருடைய தந்தை டாக்டர் எஸ். சுவாமிநாதன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர், அமெரிக்காவில் வானியல் துறையில் முனைவர் பட்டமும், கணிதவியலில் பட்டமும் […]
”ஏப்பா…. சந்திரா பொண்ணு வீட்டுக்காரங்க எப்ப பார்க்க வர்ரீங்கன்னு கேட்டு அனுப்பியிருக்காங்க.. நீ ஒன்னுமே சொல்லாம இருக்கியே…?” “கல்யாணம் பண்ணிக்கற நிலைமையிலா இப்ப இருக்கு நம்ம் வீடு… அக்கா குழந்தைக்கு மொட்டையடிக்கிறதுக்கு போயிட்டு வந்து சீர் பத்தலைன்னு அவிங்க மாமியார்கிட்ட பேச்சு தின்ன விசனமே தீரல.. ஆச்சு தங்கச்சியோட கட்டு சோறு விருந்தும் வந்தாச்சு.. அவ குழந்தைப்பேறுக்கு வரப்போற நாளும் தூரமா இல்ல… இந்த லட்சணத்துல வர சம்பளம் வாயுக்கும், வவுத்துக்குமே சரியாயிருக்கு.. இதுல இன்னொரு டிக்கட்டை […]
இரு பாதுகாவல் தேவதைகள் ஒரு பொன்மாலைப் பொழுதில் நகர எல்லையில் இரு பாதுகாவல் தேவதைகள் சந்தித்து, ஒருவரை ஒருவர் வாழ்த்தியவாறு உரையாடலானார்கள். ஒரு தேவதை, “தற்போது என்ன செய்கிறாய், உனக்குக் கொடுக்கப்பட்ட பணி என்ன?” என்றது. மற்றொரு தேவதை, “பள்ளத்தாக்கின் அடியில் வாழும் மிக மோசமாக மதிப்பிழந்த, பெரும் பாவியான, வீழ்ச்சியடைந்த ஒரு மனிதனின் பாதுகாவலனாக நியமிக்கப்பட்டுள்ளேன். நான் கடுமையாக உழைக்க வேண்டிய ஒரு முக்கியமான பணி அது என்பது உறுதி” என்று பகன்றது. முதலாம் தேவதை, […]
திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் குழந்தை இல்லையே என்று ஏங்கி, கோவில், குளம், பூசைகள், வழிபாடுகள் என அனைத்தும் செய்து முடித்த தம்பதியருக்கு ஆண்டவன் அருளால் ஒரு பெண் குழந்தை பிறந்தது. தங்கள் குலம் தழைக்க வந்த குழந்தையை தெய்வமாகக் கொண்டாடினார்கள். தவழுகிற பருவத்தில் தவழ்ந்து, பால் பற்களும் சரியான காலத்தில் முளைத்து, நடைபயிலும் பருவத்திலும், உணவு உண்ணும் பழக்கத்திலும் மற்ற குழந்தைகளைப் போன்றே எந்த மாற்றமும் இல்லாமல் தம் இரண்டு வயதுவரை வளர்ந்து கொண்டிருந்தது. ஆனால் […]
இரு வேடர்கள்! – கலீல் ஜிப்ரான் ஒரு மே மாத பகல் பொழுததனில், ஏரிக்கரை ஒன்றில் வகுமையும், வருத்தமும் சந்தித்தனர். வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டவர்கள், அமைதியான அந்த் நீரோட்டத்தின் அருகமர்ந்து உரையாடினர். சுகம் பூவுலகை நிறைத்திருக்கும் அந்த அற்புத அழகைப் பற்றியும், காடுகள் மற்றும் மலைகளுக்குள்ளேயான, அன்றாட வாழ்க்கையின் அதிசயம் பற்றியும், மேலும் புலரும் பொழுதிலும் மதி மயங்கும் அந்தி வேளையிலும் ஒலிக்கும் அந்த இனிய கீதங்களைப் பற்றியும் உரையாடலானது. சுகம் மொழிந்த […]
நிசப்தமான வீதி. மதியம் 3 மணி. அக்னி நட்சத்திரம் தகிக்கும் காலம். மக்கள் வெளியே வரவே அஞ்சும் வெப்பம்.. கோவையிலிருந்து ஈரோடு வழியாக நாமக்கல் செல்லும் பாதையில் ஒளப்பம்பாளையம் என்கிற உலகப்பம்பாளையம் செல்கிற மண் சாலை கிட்டத்தட்ட பொட்டல் காடு எனலாம். காருக்குள்ளும், புழுக்கம்தான். மனதிற்குள் இருக்கும் புழுக்கம், கணவன் ,மனைவி இருவரின் பெருமூச்சும் சேர்ந்து உஷ்ணம் தகிக்க ஆரம்பித்து விட்டது. குளிரூட்டப்பட்ட காரிலேயே பயணம் செய்து பழகிப்போன உடல் இந்த கடும் வெப்பத்தைத் தாங்குவது எளிதல்லவே. […]
“If I die a violent death as some fear and a few are plotting, I know the violence will be in the thought and the action of the assassin, not in my dying……!” Indira Gandhi. ”பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்!” – மகாகவி பாரதி. நெஞ்சுரமும், நேர்மைத்திறமும், நேர் கொண்ட பார்வையும் அஞ்சா நெஞ்சமும் […]
உலகப்புகழ் மெரீனா கடற்கரை. பலவிதமான வண்ணங்களும், எண்ணங்களும் சுமந்துத் திரியும் மனிதர்களுடன் நாளும் உறவாடும் ஓயாத அலைகள். மாறி மாறி வரும் மக்கள் மத்தியில் என்றும் மாறாமல் அனைத்திற்கும் சாட்சியாய் நிற்கும் கடல் அன்னை. பல்லாயிரம் உயிர்களை பலி வாங்கி, விழுங்கினாலும் பச்சைப்பிள்ளையாய் துள்ளி விளையாடும் தோற்றம். கதிரவன் தம் செங்கிரணங்களை வீசத்துடிக்கும் மங்கிய இளங்காலைப் பொழுது. சரசரவென கடலோரம் ஈர மணலில் பாதம் பதித்துக் கொண்டிருந்தவளின் நடையில் இருந்த தள்ளாட்டம் ஏதோ உள்ளுணர்வாக […]