சில வருடங்களுக்கு முன்னர் இந்தியா சென்றபோது வாங்கிவந்த குறுந்தகடு. எல்லா டிவிடி ப்ளேயர்களிலும் ஓடும் என்று விற்பனையாளர் சொன்னதை நம்பி வாங்கினேன். ஒளிப்பதிவு வடிவம் என்னுடைய டிவிடி ப்ளேயருக்கு ஏற்புடையது இல்லை என்று இங்கே வந்தவுடன் தெரிந்தது. பின்னர் கணினியில் பார்த்துக் கொள்ளலாம் என மறந்து போனது. வீட்டின் மூலைமுடுக்குகளின் புத்தக ரகசியங்களுக்குள் குறுந்தகடு எங்கேயோ ஒளிந்து கொண்டது. சமீபத்தில் வீட்டுக்கு வண்ணமடிக்கும் வேளை வந்தது. என் வீட்டிலுள்ள கி.ரா எழுத்துகளைப் பிடித்த இன்னொரு வாசகரால் இக்குறுந்தகடு […]
[எச்சரிக்கை: குடும்பம், வேலை சார்ந்த மும்முரங்களில் நான் ஓடிக்கொண்டிருந்தாலும், என் மீதுள்ள அன்பினால் திண்ணையில் வாராவாரம் எழுதுங்களேன் என்று தொடர்ந்து சொல்லிவந்த திண்ணை ஆசிரியர் குழுவுக்கும், அதன் பலனை அனுபவிக்கப்போகும் வாசகர்களுக்கும் என் அனுதாபங்கள்.!] அமெரிக்கக் குடியரசு கட்சியின் தீவிர பழமைவாதக் கருத்துகளின் பெண் முகம் சாரா பாலின். நம்மூர் பதின்ம வயது இளைஞர்களின் பேச்சுவழக்கில் சொல்வதென்றால், நாற்பதுகளிலும் ஹாட்டாக தோற்றமளிக்கும் இருக்கும் மாமி. இப்படிப்பட்டகருத்துகளைச் சொல்பவர்களையும், சாரா உதிர்க்கிற அபத்தமான வாதங்களைக் கடுமையாக எதிர்ப்பவர்களையும், சாராவும் […]