மாரியம்மன் கோவில்தான் பொன்மலை ரயில்வே காலனிக்குள் இருக்கும் கடைசி பஸ் ஸ்டாப். ஆனால் பஸ்ஸைவிட்டு இறங்கிக் கோவில்பக்கம் நடக்காமல் நேராக வடக்குப் பக்கம் நடந்தால் வரும் மண் ரோட்டில் வலது புறம் திரும்பினால் இருக்கும் நான்கு வீடுகள் கொண்ட ப்ளாக்கில் கோடி வீடுதான் என் நண்பன் ராஜேந்திரன் வீடு. ராஜேந்திரனின் அக்காவும் என் அக்காவும் வகுப்புத் தோழிகள் என்பதால் அவன் வீட்டிற்கு அடிக்கடி கணக்கு நோட்டு, ரெகார்ட் நோட்டு என எதையாவது வாங்க என் அக்கா என்னை […]
நளினி அம்மா சற்று அதிர அதிரத்தான் நடப்பாள். பெரிய சரீரம். சாரீரமும் கனம்தான். அதட்டலான குரலில் ” ஏய் சிறுக்கி ! எதையும் தொடாம சும்மா ஒக்கார்ந்திருக்க மாட்டியா ? இந்த ஆம்பிளப்புள்ள ஒக்கார்ந்த்திருக்கல ? ” என்று என்னை ஒப்பிட்டு எப்போதாவது அவள் அசந்திருக்கும்போதோ அந்தப் பக்கம் இந்தப் பக்கம் போயிருக்கும்போதோ எதையாவது எடுத்துத் தின்றுவிடும் வலது பக்க வீட்டுப் பெண் சகுந்தலாவையோ அல்லது என்னையும் சகுந்தலாவையும்விட பெரியவளான வயதில் பெரிய, என் பெரிய சகோதரிகளையொத்த […]
ஜான் பீட்டர் தமயோன் எங்கள் வீட்டிற்குக் கொஞ்சம் தள்ளி இருக்கிற பெரிய கிணற்றிற்கு எதிர்த்தாற்போலுள்ள வீட்டில் இருப்பவன். ரயில்வே பள்ளியில் இல்லாமல் பக்கத்திலுள்ள சாமியார் ஸ்கூல் என்னும் கிறிஸ்துவப் பள்ளிக்கூடத்தில் படிப்பவன். எஸ்.எஸ். எல். சியில் அதிக மார்க் வாங்கவேண்டுமென்றால் எல்லோரும் அங்குதான் படிப்பார்கள். ரயில்வேமீது பாசம் வைத்தவர்களும் பள்ளிக்குப் பணம் கட்டமுடியாதவர்களும் ” படிக்கிற பையனாயிருந்தா எந்தப் பள்ளிக்கூடத்திலும் படிப்பான் ! ஸ்கூலும் வாத்தியார்களும் என்ன பண்ணுவார்கள்? ” என்று சொல்லி தங்கள் பிள்ளைகளை ரயில்வே […]
பிப்ரவரி மாதம் என்றால் எல்லோருக்கும் சந்தோஷம்தான். சுண்டுவிரல் மாதம் என்று கொஞ்சுவான் என் தம்பி ராஜா. லீப் வருஷ பிப்ரவரியின் இருபத்து ஒன்பதாம் தேதியை ஆறாவது விரல் என்பான். அப்பாவுக்கும்கூட பிப்ரவரி மகிழ்ச்சி தரக்கூடிய மாதமாகத்தான் இருந்தது. இரண்டு மூன்று நாட்கள் குறைவாக வேலை செய்தாலும் முழுமாசச் சம்பளமே கிடைத்துவிடுவதோடு இரண்டு மூன்று நாட்கள் முன்னாலேயே சம்பளம் வந்துவிடுவதில் கவர்ண்மெண்டை ஏமாற்றிவிட்ட திருப்தி அவருக்கு இருக்கும். ஆனாலும் லீப் வருஷம் பிப்ரவரி இருபத்தி ஒன்பதாம் தேதி வேலைக்குப் […]
மட்டையும் பந்தும் கொண்டு தனக்கான விளையாட்டை ஆரம்பித்துவிட்டது குழந்தை. டெலிவிஷனின் இருபத்து நாலு மணி நேர விளையாட்டுக் காட்சிகளை எள்ளளவும் பிரதிபலிக்கவில்லை அது தன் விளையாட்டில். விளையாட்டின் விதிகளைத் தானே இயற்றிக்கொண்டு குழந்தை ஆடிக்கொண்டிருந்ததில் வீட்டின் வாசல் புதுமையில் பொலிந்துகொண்டிருந்தது. அப்படி இல்லை என்பதாய் உலகம் ஏற்றுக்கொண்ட விதிகளை அதன் அப்பா திணிக்க முற்பட்டபோது குழந்தையைத் தடுக்காதே என்பதாய் விழிகள் விரித்து உதடுகள் குவித்து ” உஷ் ” என்று ஒற்றை விரலில் அம்மா எச்சரிக்கை செய்தது […]
இத்தனை தூரம் கவிதையற்று வந்தவன் மனதில் தீக்குச்சி உரசிய சிரிப்பில் நீ விதைத்த வார்த்தைகள் வனவாச காலத்து முடிவைச் சொன்னது. கழைக்கூத்தாடியின் கவனமாய்ப் பின்னிய வார்த்தைகள் கொண்டு எழுதாமலேயே போன அந்தப் பத்தாண்டுகளின் சூன்யம் ஞாபகத் துளைகளில் வழிகிறது. காலத்தின் மிரட்டல் கேட்டு வாழ்க்கைக் காட்டில் பயணமே உறைந்திருந்தது. இளமையின் வாசலில் காத்திருந்த கேள்விகளில் நெஞ்சக்கூட்டினுள் ஸ்னேகம் சுமந்து நின்றதில் நினைவே மிச்சம் என்றாலும் எனக்குள் திரும்பிய கவிதை அரும்புகள் வாடிப்போயிருக்கவில்லை. முகவரி தொலைத்த காலப்புறாவின் கால்களில் […]
அரசுப் பாடம் காற்று மிரட்ட காலத்தின் சமச்சீர் பக்கங்களை அழுதுகொண்டே நடுங்கியபடி படிக்குது மெழுகுவர்த்தி ஐந்தாம் படை கடலின் ரகஸ்யங்களை கடத்திக் கரைசேர்க்குது அலைகள் தவணை முறையில். காற்றின் உபயம் மூச்சு முட்டி மூங்கிலில் வழிகிறது இசை குனிந்து நிமிர்ந்து உடற்பயிற்சியில் தாவரங்கள் சோம்பித் தி¡¢யும் மானிடப் பதர்க்கு காற்றின் உபயத்தில் கவிதையும் இலவசம். மலராது மலர்ந்து பூக்கவே பூக்காத செடியில் சோகம் பூத்திருக்கு. சாகாதல் பூத்துப் போயிருக்குமென ஞாபகம் தோண்டினால் இன்னும் நெருப்பு. _ ரமணி,
பிறந்ததிலிருந்தும் பிறந்தகம் துறந்த பின்னாலும் செல்லாயியின் பொழுதுகள் எப்போதும் ஆடுகளோடுதான். கோடையும் மழையும் ஆடுகளுக்கு உகந்ததில்லை எனினும் பருவத்தின் பின்சுழற்சியில் கருகிப்போயிருக்கும் மரங்களின் இலைகள் ஆடுகளுக்கெனத் தழைக்க, ” கொஞ்சம் பொறுங்கடா சிவராத்திரி வரைக்கும் ” எனப் பனிபோகவே அன்று விரதமிருப்பாள். எதிர் வீட்டுத் தோட்டத்தில் புகுந்து விட்ட வெள்ளையோ கருப்போ கால்கள் ஒடிந்தால் செல்லாயியின் வசவுத்தமிழில் விஷம் கலந்திருக்கும். மோட்டார்ச் சக்கரங்களிலும் வியாதி வெக்கையிலும் சிலதை இழந்திருந்தாலும் ஆடுகளை ஒருபோதும் விற்றதில்லை செல்லாயி என்றாலும், இப்போதெல்லாம் […]
நண்பா! என் வாழ்க்கையைத் தனியே பிரித்துவிட முடியாதபடி எப்படி நீ என் ஒவ்வொரு நாளிலும் பின்னிப் பிணைந்திருக்கிறாய்! உன்னைச் சேர்த்துச் சொல்லாத ஒரு நிகழ்வைக்கூட என்னால் சொல்லிவிட முடியாது. இப்போது வெறும் ஞாபகங்களாக மட்டுமே போய்விட்ட உன்னை எப்படி மீட்டெடுப்பது? கல்லால் சிலை வடித்தால் உடைந்து போகலாம். இரும்போ துருப்பிடிக்கும் மரமோ உலுத்துவிடும் எல்லாம் எப்படியோ மறைந்துபோகும். எதைக்கொண்டு செய்தால் நிரந்தரமாய் அதில் நீ உறைவாய்? என்னிடமோ வார்த்தைகள் மட்டுமே உள்ளன கொஞ்சமாய். அவைகொண்டு எழுதினால் கவிதையாய் […]
” பிம்மாலையில பனி ஜாஸ்தி விழும். தலையில எதையாவது கட்டிக்கோடா கடங்காரா ” என்று பாட்டி அக்கறை கலந்து திட்டும் காலம் தையும் மாசியும். பாட்டி ” பிம்மாலை ” என்பதை இரவைக் குறிப்பிடும்போதும் சொல்வாள். சிற்றஞ்சிறுகாலையைக் குறித்தும் சொல்வாள். நாம்தான் அவள் வார்த்தையின் காலமயக்கப் பிடியிலிருந்து வெளிவந்து அதைத் தரம் பிரித்துப் புரிந்துகொள்ளவேண்டும். ஆனால் இந்தக் காலத்தில் கட்டாயம் சளி பிடித்துவிடும் எனக்கு. காஷ்மீர் பூமி பனிக்கட்டிகளால் உறைந்திருந்திருப்பது போல என் நெஞ்சு முழுக்கப் பாறை […]