அம்புகள் துளைத்தபோதும், ஆழ்கிணறில் விழுந்து குருதிபெருகிக் களைத்தபோதும் தன்னந்தனியாய் மீண்டெழுந்துவந்த பறவை இருகால்களும் ஒரு மனமுமே இறக்கைகளாய் என்னாளும் சிறகடிப்பதை நிறுத்தாமல் சுற்றிச்சுற்றிவந்துகொண்டிருக்கிறது படைப்புவெளியில் _ இயக்கமே ஆனந்தமாய்…. சகோதரத்துவம் பற்றி சதா screech-இட்டுக்கொண்டே யிருக்கும் ‘மற்றவை’ கண்டுங்காணாமல் போயின தங்களுக்கான இரையைக் கவ்விக்கொண்டு. அப்படியிருக்கலாகாது என்று தன் சின்னப்பிள்ளைக்குக் கற்றுக்கொடுத்து உயர உயரப் பறக்கவும் வழியமைத்துத் தந்தது பறவை. அயரா முயற்சியில் இன்று அந்தக் குட்டி இறக்கைகள் தொடுவானத்தைத் தொட்டுவிட _ எங்கள் இனம் என்று […]
அத்தனை ஆதாரங்களிருந்தாலும் மொத்தமாய் நூறு சாட்சியங்கள் குற்றவாளி என்று கூறினாலும் வழக்கு பல வருடங்கள் நடந்தாலும் விசாரணையெல்லாம் முடிந்தாலும் அபராதி என்றே அறியப்பட்டாலும் மரணதண்டனை கூடாது, கூடாது, கூடவே கூடாது மனிதநேயம் மறக்கலாகாது. அதேசமயம் _ அறிவித்தாகவேண்டும் இங்கே இப்பொழுதே இவரை_ மிக அபாயகரமான குற்றவாளியாய். மரணமடைந்துவிட்டவரை விசாரிக்க முடியாவிட்டால் என்ன? அவர் தரப்பு நியாயத்தையும் கேட்கவேண்டுமா? சிரிப்பு வருகிறது. அப்படியொன்று இருக்கிறதா என்ன? அஃதெல்லாம் பொதுநீதிமன்றப் போக்கு போட்டுத்தாக்கு – அதுவே இந்த தனி நீதிமன்றத்தின் […]
காற்றுக்குத்தான் எத்தனையெத்தனை குரல்கள் வாசனைகள் வாசல்கள்….! வேகங்களின் நுண் அளவுமாற்றங்களில் ஒலிக்கும் பண்ணிசைக்கருவிகள் எண்ணிலடங்காது. ’பாரு பாரு நல்லாப் பாரு பயாஸ்கோப்பு படத்தைப் பாரு’ என்று தன்னைக் கடைவிரிக்கும் கூறுகெட்டத்தனம் காற்றுக்குக் கைவராது. ஆறுணரும் அருமைக் காற்றின் வருடல் வேரறியும் பிரிய காற்றின் வள்ளன்மை. நாடுநாடாய்ச் செல்லக் கிடைக்கலாம் புகழும் பேரும் எனில், வேடந்தாங்க முடியுமோ காற்றாக யாரும்? காற்றைக் கக்கத்திலடக்கப் பார்ப்பவரை கொண்டாடவா முடியும்? ஆனாலும் இருக்கிறார்கள்தான் ஆனானப்பட்டவர்கள் _ காலங்காலமாய் காற்றை உள்ளங்கையில் அடக்கப் […]
‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் ஊருக்கு இளைத்தவர்களும் உத்தம உபதேசிகளும் மகானுபாவர்கள். மரணத்திற்கான காரணங்களை மனப்பாடமாய் அறிந்தவர்கள். இன்னாரின் சாவுக்கு இன்னின்ன கேடுகளை கிலோ கணக்கில் சந்தையில் விற்பதில் கைதேர்ந்தவர்கள். மனிதநேயம், சமூக அக்கறை, அறச்சீற்றம், என்று எத்தனை கிரீடங்களை கைவசப்படுத்திவிட முடிகிறது! கொள்ளை லாபம்தான்! வெள்ளையும் சொள்ளையுமாய் கடையில் அமர்ந்தபடி வழிபோவோர் வருவோரையெல்லாம் ஆழாக்கில் அளந்துபார்த்தல் அப்படியொரு சுவாரசியமான பொழுதுபோக்கு. ஒரு இறப்பைக்கூட துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள். இறந்தவரின் மனைவி, மக்களுக்காக இரு சொட்டு முதலைக்கண்ணீர் வடித்து […]
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) {சமர்ப்பணம்: அர்ப்பணிப்பு மனோபாவத்தோடு ஒருவர் மேற்கொண்ட புத்தகப்பணியின் பயனை அடிப்படையாகக் கொண்டு இலக்கிய உலகில் இடம்பிடித்த பின் ஏறிய ஏணியை எட்டியுதைக்க சதா கால் அரிப்பெடுத்துக்கொண்டிருப்பவர்களுக்கு} 1 யாருமே நுழையமுடியாத அடர்ப்பெருங்காட்டிற்கப்பால் ஆகாயமளாவ அடிக்கு அடியிருந்த வழுக்குப்பாறைகளெங்கும் படர்ந்திருந்தன பலவகை முட்கள். கைக்காசை செலவழித்து, மெய்வருத்தம் பாராதொழித்து உயிரைப் பணயம் வைத்து கயிறு அறுந்துவிழுந்தபோதெல்லாம் காற்றை இறுகப்பிடித்துக்கொண்டு உள்ளங்கைகளெங்கும் சிராய்த்துக் குருதி பெருக உடலின் அயர்வில் உயிர் மயங்க மலையை வாகாய் சீரமைத்ததோடு […]
– ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) இரண்டு தொகுப்புகளாக வெளியாகியிருக்கவேண்டிய என் கவிதைகள் ஒரே தொகுப்பாக ‘தனிமொழியின் உரையாடல் என்ற தலைப்பில் என் ‘குட்டி’ பதிப்பக முயற்சியாய் வெளியாகியுள்ளது. இதில் இடம்பெறும் முக்கால்வாசிக் கவிதைகள் நீங்கள் வாசித்தவையே. மொத்தம் 170 கவிதைகள்(அவற்றில் எவ்வளவு உண்மையான கவிதைகள் என்பது வாசகருக்கு வாசகர் மாறக்கூடிய கணக்கு!) 250போல் பக்கங்கள். விலை ரூ.200. விற்பனை உரிமை புதுப்புனல் பதிப்பகம். எத்தனை முயன்றும் அச்சுப்பிழைகள் இடம்பெற்றுள்ளன. 100 பிரதிகளே […]
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) மிக மிக நீண்ட தூரம் கடந்துவந்தபின் கழுத்துமுறிய திரும்பிப் பார்த்தால்…. தெரிவது இடிந்த சுவரில் காணும் நிழலின் நிழலின் நிழலின் நிழலின் நிழலின் நகலின் நகலின் நகலின் நகலின் நகலின் நகலின் முனை மழுங்கிய பாதி கிழிந்த மஞ்சளோடிய புழுதியப்பிய அழுக்குப் பிரதியின் பிரதியின் பிரதியின் பிரதியின் பிரதியின் மறதியாய் ஒன்று… ஒரு கணம் உறைந்துநின்றதொரு தருநிழலின்கீழ் சிறு இளைப்பாறலா…..? அணுமேலமர்ந்தொரு பின்னோக்கிய ஒளிப்பயணமா? அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசம் இருள்தானா? இக்கணமென்பதொன்றா எண்ணிறந்ததா….? […]
’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ”நான் செய்யாதவரை எந்த வீணையும் நல்லவீணையில்லை. எனவே நலங்கெடப் புழுதியில் எறிவது குறித்த கேள்விக்கே இடமில்லை”. என்று அடித்துச்சொல்லியபடி, இசையில் அரைகுறை கேள்விஞானமோ காலேஅரைக்கால் வாய்ப்பாட்டுப் பயிற்சியோ அல்லது வாத்தியப் பயிற்சியோ இல்லாத அகங்கார இளவரசியொருத்தி தனக்குக் கிரீடமும் அரியணையும் கிடைப்பதற்கான குறுக்குவழியாக மட்டுமே கொண்டுள்ள மாமன்னரின் வணக்கத்திற்குரிய அத்தனை வீணைகளையும் ஆங்காரமாய்ப் போட்டுடைக்கத் தொடங்கியிருப்பதைப் பார்த்து மேலேயிருந்து கையறுநிலையில் மன்னர் விம்மியழ விண்மீன்களும் கண்கலங்கின. வேதனையில் புண்ணாகிக் கொதித்துவீசத் தொடங்கியது காற்று….. […]
வரலாறு ‘ சில தலைகள் எப்போதும் கைவசம் தேவை. குட்டக் குட்டக் குனியவைக்க; பட்டப்பகற்கொலைகொள்ளைக் கெல்லாம் பொறுப்பேற்கச் செய்ய; தட்டுவதாலேயே தன் கையை மோதிரக்கையாக்கிக்கொள்ள; தன் முதலாளித்துவத்தை சாதுர்யமாய் மனிதநேயவிரிப்பின் கீழ் தள்ள; சரித்திரக் குற்றவாளியாக்கி சரேலென்று அறுத்தெறிய; பொருத்தமற்ற பொய்யுரைத்து புழுதிவாரியிறைக்க; பேயரசைப் போர்த்திமறைக்க; பிணந்தின்னும் சாத்திரங்களை ஒருசாராருக்கே உரித்தாக்க; அவரவர் அதிகாரவெறியை அருவமாக்கித் திரிய; வலியோரும் தம்மை எளியோராய் காட்டிக்கொள்ள வாகாய்; மலிவாகும் வாழ்வுமதிப்புகளுக்கெல்லாம் கழுவேற்றத் தோதாய்; பொத்தாம்பொதுவாய் போகிறபோக்கில் […]
அவள் அழுதுகொண்டிருக்கிறாள் அந்த நள்ளிரவில் அவள் அழும் விசும்பலொலி கேட்டு கூட்டம் கூடிவிட்டது. ஆச்சரியத்துடன் சிலர்; அனுதாபத்துடன் சிலர்; அக்கறையுடன் சிலர்; சுடச்சுடச் செய்தி சேகரிக்கும் ஆர்வத்தில் சிலர்; தேர் சரிந்த பீதியில் சிலர்; பாதி புரிந்தும் புரியாமலுமாய் சிலர்; பெருங்குரலெடுத்து அட்டகாசமாய் இளக்காரத்தோடு சிரித்தபடி சிலர்; ‘இதென்ன புதுக்கதை’ என்று வரிந்துகட்டிக்கொண்டு களத்திலிறங்கியவர்கள் சிலர்…. ;அங்கிங்கெனாதபடியானவள் ஆற்றொணாத் துயரத்தில் பொங்கியழக் காரணமென்ன? ஆளாளுக்குக் கேட்க ஆரம்பித்தனர்; ”இவர் அவரின் அன்னையை தாசியென்று பேச […]