நான்கு ’லைக்கு’களை குறைந்தபட்சம் நாற்பதாகவேனும் அதிகரிக்க – அதிகபட்சம் 400க்கும் அதிகமாக்க – நாலாபக்கங்களிலிருந்தும் கைத்தட்டல்களைக் கிளம்பவைக்க – நாக்கு மேல பல்லு போட்டு நாலையும் பற்றி நன்கு தாளித்து நான்கைந்து திறனாய்வுப் பார்வைகளைத் தர வல்லவர் என்று ‘ஃபிலிம்’ காட்டுவதற்காய், நானோ நீவிரோ – யார் எழுதினாலும் அது கவிதைபோன்றதே யன்றி கவிதை யன்று.
நாமெல்லோருமே நவீன கவிதையைத் தான் எழுதுகிறோம்; அல்லது, எழுத நினைக்கிறோம் அல்லது, எழுத முனைகிறோம் அல்லது எழுதப் பழகுகிறோம், அல்லது எழுத விரும்புகிறோம்…. இருந்தும், நவீன கவிதையையே ஏன் நையாண்டி செய்கிறோம்?
கதை கவிதையெழுதுவதை விட மொழிபெயர்ப்பாளராவதைவிட வெகுஎளிதாய் விமர்சகராகிவிட்டால் போச்சு! விவஸ்தையோடு எழுதுவதுதான் விமர்சனம் என்பதெல்லாம் வெட்டிப்பேச்சு. மொழிபெயர்ப்பாளரை உதைபந்தாக உருட்டியவண்ணம் இலக்கிய மைதானத்தில் வலம்வந்துகொண்டிருக்கிறார்கள். பந்தை உருட்டமுடிந்தவர்களெல்லாம் பந்தாகிவிட முடியுமா என்ன ? கேட்டால் கொடும்பாவியெரித்திடுவார்களோ – ஒரே கலவரமாயிருக்கிறது. ஏன் அரசியல் கவிதையே எழுதுவதில்லை யென்று கேட்டார் ஒரே யொருவரைப் பழிப்பதும் பகடி செய்வதும் ஒரேயொரு குலத்தை மலமெனப் பேசுவதும் நலங்கெட ஏசுவதும் ஒரேயொரு […]
(லதா ராமகிருஷ்ணன்) பெரியோர்களே தாய்மார்களே! பத்தரைமாற்றுத் தங்கத் தோழர்களே தோழிகளே! சிறுபிள்ளைகளே கைக்குழந்தைகளே! சுற்றியுள்ள சடப்பொருள்களே! சூழ்ந்திருக்கும் அணுத்திரள்களே! ஆகாச வெண்ணிலவே! ஆதவனே! நட்சத்திரங்களே! ஆற்றுமீன்களே! வேற்றுகிரகவாசிகளே! இன்னும் விடுபட்டுப்போன ஜீவராசிகள் விலங்கினங்கள் புள்ளினங்கள் மரம் செடி கொடிகளெல்லாம் _ BIGG BOSS பாருங்கள் – BIGG BOSSஐயே பாருங்கள்! காணக்கிடைக்காத தரிசனம் இது; காணவேண்டியது; கண்ணாடியாய் நம்மைப் பிரதிபலிப்பது; (*பொறுப்புத்துறப்பு: எத்தனை சொல்லியும் உங்களை யதில் காணமுடியவில்லையென்றால் காவல்நிலையத்தில் புகார் தந்துவிடவும்) வீட்டிலும் வெளியிலும் முடிந்தால் […]
கவிதை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) வீடுவந்து சேர்ந்த பிறகும் நான் வீதியிலேயே நடந்துகொண்டிருப்பதை தாழிட்ட கதவுகளுக்கு இப்பால் உள்ள அறையிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் நானின் மண்டையில் உச்சிவெயில் சுரீரெனத் தைக்க கிழிந்த நாளொன்றிலிருந்து சில நூலிழைகள் நைந்து தொங்க உட்கார்ந்த நிலையில் என் பாதங்கள் இருமாடிப்படிகளிலேறிச் செல்லும்நேரம் வலியெடுக்கும் முழங்கால்கள் முதுகுமாக மாறிக்கொள்ள வழங்க வழியில்லாத உணவின் அளிப்புக்காக அந்தத் தெருமூலையில் சுருண்டுகிடக்குமொரு உருவம் அழகென்பதன் அர்த்தமாக இருந்திருக்கும் அக்காலம் திரும்பிக்கொண்டிருக்கலாகும் இச்சமயம் அதனுள் புள்ளுக்கும் புல்லுக்கும் இடையான […]
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ஒளிக்கீற்றுகள் சில…. அவை சூரியனுடையதா சந்திரனுடையதா தெரியவில்லை. சில நீர்க்குமிழிகள்…. அவற்றுள் கோட்டுருவாய் தெரியும் பிரபஞ்சங்கள் அங்கங்கே கொஞ்சம் அழிந்தும் கிழிந்தும்…. தெரியும் முகங்கள் எனக்குப் பரிச்சயமானவைபோலும் நெருக்கமானவை போலும் – அதேசமயம் நான் அறியாதனவாகவும்…. அமர்ந்துகொண்டோ நின்றுகொண்டோ அல்லது நீந்திக் கொண்டோ உருவந்தாங்கியோ அருவமாகவோ நான் அந்தச் சட்டகத்திற்குள் கண்டிப்பாக எங்காவது இருப்பேன்…. கண்டுபிடிக்க முடியவில்லை. இடைவழி காற்றாலான பாறாங்கல்லால் அடைபட்டிருக் கிறது. இந்த கணத்தை இப்படியே உறையச்செய்ய வழியில்லை. கீற்றுகளை […]
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) நித்திரை கலைந்த கையோடு மருத்துவமனையின் நீண்ட தாழ்வாரத்தில் காலெட்டிப்போட்டு கையுறைகளை மாட்டியபடி நான் அதற்கு சிகிச்சையளிக்கிறேன் என்பாரும் செயற்கை சுவாசமாகிறேன் என்பாரும் நான் அதன் உலகை விரிவுபடுத்துகிறேன் என்பாரும் நான் அதன் பார்வையைத் தெளிவுபடுத்துகிறேன் என்பாரும் நான் தான் அதற்கு மொழியைப் பழக்கப்படுத்தினேன் என்பாரும் நான் தான் முதன்முதலாய் அதற்கு அரசியலை அறிமுகப்படுத்தினேன் என்பாரும் தம்மை யொரு மையமாக்கிக்கொள்ளும் முனைப்பில் விட்டங்கள் ஆரங்கள் அணுக்களையெல்லாம் அப்பால் தள்ளிவிட்டு கட்டங்கட்டி யதற்குள் கவிதையை முட்டியிட […]
நான் எனும் உருவிலி…. ஆடியில் காணும் என்னுருவம் உண்மையில் நானல்ல என்றுதான் தோன்றுகிறது….. அத்தனை அந்நியோன்யமாகத் தோளோடு தோளி ணைந்து ஆடிக்கொண்டிருக்கும் அந்த மயிற்தோகை களை ஒருநாள்கூட அதில் கண்டதேயில்லை. அறுபது வயதில் நானிருக்கும்போது அந்த ஆறு வயதுச் சிறுமியின் புகைப்படம் எப்படி நானாக முடியும்? எழுதும் ஒரு கவிதை வரியில் நான் முளைத்தெழும் விதையாகிவிடமுடியும்தான்…… நானிலிருந்து நானற்றதையும், நானற்றதிலிருந்து நானையும் பிரித்துக்காட்டிப் பின்னிப்பிணைக்கும் கவிதையில் தெரிவதெல்லாம் நான் மீறிய நான். ஆனால், ஓர் ஆடியிலோ, அல்லது […]
‘ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) அந்த விரல்களிலிருந்து பரபரவென்று பாய்ந்திறங்கி யந்த வீணைவெளிக்குள் சென்றவர்கள் உள்ளிருந்து உருகிப்பாடுவது அரங்கமெங்கும் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. அல்லது வீணைவெளியிலிருந்து அவர்கள் விரல்களுக்குள் ஏறிக்கொண்டார்களா? அந்த அருவ சேர்ந்திசைக்காரர்களைப் பார்க்கவேண்டும்போலிருக்கிறது. இனம்புரியா நிறைவில் கனிந்தொளிரும் முகங்களில் அழகொளிர்ந்துகொண்டிருக்கிறது. அத்தனை அழகாயிருக்கிறது! வீணைத்தந்திகளின் மீது துள்ளிக்குதித்துக் களித்தும் கண்ணீர் விட்டுக் கதறியும் காலெட்டிப்போட்டுக் காலாதீதத்திற்குள் எட்டிப்பார்ப்பேன் என்று பிடிவாதம்பிடித்தும் கத்துங்கடல் முத்துகளைக் கோர்த்துக்காட்டும் கடைசிச் சொட்டு வாழ்வை கணநேரம் தரிசிக்கச் செய்யும் அமுதமே மழையெனப் பெய்யும் அந்த […]
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) அதுவல்ல கவிதை யென்றார்; இதுவே கவிதை யென்றார். இதுவல்ல கவிதை யென்றார்; அதுவே கவிதை யென்றார். அது இருப்பதாலேயே எதுவும் கவிதையாகிவிடா தென்றார். எல்லாமும் கவிதையாகிவிடும் இதுவிருந்தால் என்றார். இதுவும் அதுவும் எதுவுமாக ‘அல்ல’வாக்கியும் ‘நல்ல’வாக்கியும் சிலவற்றைத் தூக்கியும் சிலவற்றைத் தாக்கியும் சிலவற்றைப் புகைபோக்கிவழியே நீக்கியும் கவிதையை ஒரு மெதுவடையாக மசாலாதோசை யாக மாடர்ன் பிரட் துண்டங்கள் கலந்த சன்னா மசாலா வாக முக்கோணமாய் மடிக்கப்பட்ட சப்பாத்தியாக கேப்பங்கூழாக கொக்கோகோலாவாக Cubaவின் Mojitoவாக […]